சிஎல்ஏ வரிசையில் அதிக சக்தி வாய்ந்த காரை களமிறக்கிய பென்ஸ்... காரின் ரம்மியமான புகைப்படங்கள் உள்ளே!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதன் சிஎல்ஏ வரிசையில் அதிக சக்தி வாய்ந்த காரை அறிமுகம் செய்துள்ளது. காரைக் குறித்த சில முக்கிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

சிஎல்ஏ வரிசையில் அதிக சக்தி வாய்ந்த காரை களமிறக்கிய பென்ஸ்... காரின் ரம்மியமான புகைப்படங்கள் உள்ளே...!

ஜெர்மனியைச் சார்ந்த லக்சூரி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், அதன் சிஎல்ஏ லைன் அப்பில் அதிக சக்தி வாய்ந்த மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில், பென்ஸ் சிஎல்ஏ35 என்ற நான்கு கதவு கொண்ட கூப் மாடல் காரை அந்த நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

சிஎல்ஏ வரிசையில் அதிக சக்தி வாய்ந்த காரை களமிறக்கிய பென்ஸ்... காரின் ரம்மியமான புகைப்படங்கள் உள்ளே...!

பென்ஸின் இந்த புதிய மாடல் குறித்த புகைப்படங்கள் அண்மையில் இணையதளத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, பென்ஸின் ரசிகர்கள் இந்த புதிய மாடலின் வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், தான் இந்த புதிய சக்தி வாய்ந்த சிஎல்ஏ35 மாடலை பென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சிஎல்ஏ வரிசையில் அதிக சக்தி வாய்ந்த காரை களமிறக்கிய பென்ஸ்... காரின் ரம்மியமான புகைப்படங்கள் உள்ளே...!

இந்த புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ 35 மாடலின் எக்ஸ்டீரியர் டிசைனானது, மற்ற சிஎல்ஏ வரிசையில் வந்திருக்கும் மாடலைக் காட்டிலும் சில சிறப்பு மாற்றங்களைக் பெற்றிருக்கின்றன. அவ்வாறு, இந்த காரின் முகப்பு பகுதியில் மூன்று முனைகளைக் கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் லோகோவை புதிய வடிவிலான ரேடியேட்டர் கிரில் அமைப்பில் பொருத்தியுள்ளனர்.

சிஎல்ஏ வரிசையில் அதிக சக்தி வாய்ந்த காரை களமிறக்கிய பென்ஸ்... காரின் ரம்மியமான புகைப்படங்கள் உள்ளே...!

இதைத்தொடர்ந்து, சிஎல்ஏ35 மாடலில் 18 இன்ச் கொண்ட அல்லாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப 19 இன்ச்-ஆகவும் மாற்றிக் கொடுக்கப்படுகிறது. இந்த புதிய நான்கு கதவுகளைக் கொண்ட பெர்ஃபார்மென்ஸ் காரின் பின்பகுதியும் சிறிதளவில் மாற்றத்தைப் பெற்றுள்ளது. அவ்வாறு, புதிய வடிவிலான டெயில் லைட், சைலன்சர், புதிய பூட்லிப் ஸ்பாய்லர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

சிஎல்ஏ வரிசையில் அதிக சக்தி வாய்ந்த காரை களமிறக்கிய பென்ஸ்... காரின் ரம்மியமான புகைப்படங்கள் உள்ளே...!

இந்த புத்தம் புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி சில்ஏ35 மாடலில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜட் 4-சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 302 பிஎச்பி பவரை 5,800 ஆர்பிஎம்-லும், 400என்எம் டார்க்கை 3,000 முதல் 4,000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இந்த எஞ்ஜினில் 7 ஸ்பீடு டுயூவல் கிளட்ச் ஆடோமேடிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

சிஎல்ஏ வரிசையில் அதிக சக்தி வாய்ந்த காரை களமிறக்கிய பென்ஸ்... காரின் ரம்மியமான புகைப்படங்கள் உள்ளே...!

இதேபோன்று, இதன் எஞ்ஜின் சக்தியானது, அனைத்து வீல்களுக்கும் கடத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 4.9 விநாடிகளில் தொட்டுவிடும். மேலும், இது உச்சகட்டமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.

சிஎல்ஏ வரிசையில் அதிக சக்தி வாய்ந்த காரை களமிறக்கிய பென்ஸ்... காரின் ரம்மியமான புகைப்படங்கள் உள்ளே...!

இந்த காரின் விலை மற்றும் விற்பனைக் குறித்த தகவல் அதிகாரப்பூர்வகமாக வெளியிடப்படவில்லை. கூடிய விரைவில் மெர்சிடிஸ் பென்ஸின் இந்த புதிய தலைமுறை சிஎல்ஏ35 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, பென்ஸ் நிறுவனம் அதன் ஏ கிளாஸ் செடான் ரக கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

Most Read Articles
English summary
Mercedes-AMG CLA 35 Revealed — Gets 302bhp. Read In Tamil.
Story first published: Tuesday, April 9, 2019, 14:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X