தெறிக்கவிடப் போகும் மெர்சிடிஸ் பென்ஸ்... அச்சத்தில் ஆடி, பிஎம்டபிள்யூ...

சொகுசு கார் விற்பனையில் கொடி கட்டிப் பறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், தனது போட்டியாளர்களை கதி கலங்க வைக்கும் வகையில் தனது புதிய பத்து மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த விசேஷ மாடல்கள் குறித்த கூடுதல் தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

தெறிக்கவிடப் போகும் மெர்சிடிஸ் பென்ஸ்... அச்சத்தில் ஆடி, பிஎம்டபிள்யூ...

இந்திய சொகுசு கார் சந்தையில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை பிடித்து வைத்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், கடந்த 25 வருடங்களுக்கு முன்பு இந்திய சந்தைக்குள் நுழைந்தது.

தெறிக்கவிடப் போகும் மெர்சிடிஸ் பென்ஸ்... அச்சத்தில் ஆடி, பிஎம்டபிள்யூ...

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இந்நிறுவனம், வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து தனது தயாரிப்புகளில் தொழில்நுட்பங்களையும், பாதுகாப்பு அம்சங்களையும் நிறுவி வருகிறது.

தெறிக்கவிடப் போகும் மெர்சிடிஸ் பென்ஸ்... அச்சத்தில் ஆடி, பிஎம்டபிள்யூ...

மேலும், பென்ஸ் கார்களின் ரம்யான தோற்றத்தில் மயங்காத நபர்களே இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு காரின் வெளிப்புறத் தோற்றமும், உட்புறமும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

தெறிக்கவிடப் போகும் மெர்சிடிஸ் பென்ஸ்... அச்சத்தில் ஆடி, பிஎம்டபிள்யூ...

பென்ஸ் தயாரிப்புகளுக்கு பிஎம்டபிள்யூ, ஆடி உள்ளிட்ட சொகுசு கார்களுடன் கடுமையான போட்டி நிலவினாலும், தனது அடுத்தடுத்த மாடல்களை அட்ராக்டிவாக உருவாக்கி வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்த்து வைத்துகொள்கிறது.

தெறிக்கவிடப் போகும் மெர்சிடிஸ் பென்ஸ்... அச்சத்தில் ஆடி, பிஎம்டபிள்யூ...

இதன் மிக ஸ்டைலான வடிவமைப்பு சொகுசு கார் பிரியர்களை மட்டுமின்றி, முதல்முறையாக கார் வாங்க திட்டமிடுபவர்களையும் எளிதாக வளைத்து போட்டுவிடும். டிசைன் அப்படி!

தெறிக்கவிடப் போகும் மெர்சிடிஸ் பென்ஸ்... அச்சத்தில் ஆடி, பிஎம்டபிள்யூ...

பாலிசி, எரிபொருள், அதிக வட்டி என பென்ஸ் கார்களை பராமரிப்பதில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும் அதன் மீதுள்ள மோகத்தின் காரணமாக அதன் வாடிக்கையாளர்கள் அந்த காரை வெறுப்பதில்லை.

தெறிக்கவிடப் போகும் மெர்சிடிஸ் பென்ஸ்... அச்சத்தில் ஆடி, பிஎம்டபிள்யூ...

அதற்கேற்ப கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 15 ஆயிரத்து 538 கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது அந்நிறுவனத்துக்கு புதிய உச்சமாகும். மேலும், நடப்பாண்டிலும் இதே அளவிற்கு கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

தெறிக்கவிடப் போகும் மெர்சிடிஸ் பென்ஸ்... அச்சத்தில் ஆடி, பிஎம்டபிள்யூ...

இதைத்தொடர்ந்து, தனது பத்து புதிய மாடல் கார்களை இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தெறிக்கவிடப் போகும் மெர்சிடிஸ் பென்ஸ்... அச்சத்தில் ஆடி, பிஎம்டபிள்யூ...

அதன்படி, 2019 ஜிஎல்இ, V-கிளாஸ் எம்பிவி, ஏ-கிளாஸ் செடான், 2019 பி-கிளாஸ், மேம்படுத்தப்பட்ட ஜிஎல்சி மற்றும் புத்தம் புதிய ஜிஎல்பி உள்ளிட்ட மாடல்களை மெர்சிடஸ் பென்ஸ் அறிமுகம் செய்யவுள்ளது.

தெறிக்கவிடப் போகும் மெர்சிடிஸ் பென்ஸ்... அச்சத்தில் ஆடி, பிஎம்டபிள்யூ...

இதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட V-கிளாஸ் ரக கார்களை இம்மாதம் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் அந்நிறுவனம் எம்பிவி ரக சொகுசு கார்களை இந்தியாவில் மீண்டும் களமிறக்குறது.

தெறிக்கவிடப் போகும் மெர்சிடிஸ் பென்ஸ்... அச்சத்தில் ஆடி, பிஎம்டபிள்யூ...

இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் அதிகம் விற்பனையான எஸ்யுவி மாடலான ஜிஎல்சி ரக காரையும் வருடத்தின் மத்தியில் அறிமுகம் செய்ய பென்ஸ் திட்டமிட்டுள்ளது.

தெறிக்கவிடப் போகும் மெர்சிடிஸ் பென்ஸ்... அச்சத்தில் ஆடி, பிஎம்டபிள்யூ...

மேலும், புதிதாக வரவிருக்கும் ஜிஎல்இ கார்களில் தனது போட்டியாளர்களான பிஎம்டபிள்யூ, ஆடி ஆகிய கார்களுக்கு செம டஃப் கொடுக்கும் வகையில் புத்தம் புதிய வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட எஞ்ஜின், டிரைவர் அஸ்ஸிஸ்ட் தொழில்நுட்பம் ஆகியவற்றை நிறுவவுள்ளது.

தெறிக்கவிடப் போகும் மெர்சிடிஸ் பென்ஸ்... அச்சத்தில் ஆடி, பிஎம்டபிள்யூ...

அவ்வாறு புதிதாக வெளிவரும் இ-கிளாஸ் மாடல் கார்களின் விலை இந்திய மதிப்பில் ரூ. 75 லட்சம் (எக்ஸ்-ஸோ ரூம்) இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Mercedes Benz 10 New Models Arrive In India 2019. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X