புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஜி க்ளாஸ் எஸ்யூவி ரகத்தில் மேலும் ஒரு புதிய மாடலை இன்று இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கி உள்ளது. இந்த புதிய மாடலின் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி க்ளாஸ் வரிசையில் பல்வேறு மாடல்கள் உள்ளன. இந்தியாவில் ஏற்கனவே ஏஎம்ஜி பிராண்டிலான அதிக செயல்திறனும், கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட ஜி63 என்ற மாடல் விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவியின் சாதாரண வகை மாடலாக ஜி350 டீசல் மாடல் இந்தியா வந்துள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரில் பயன்படுத்தப்படும் அதே 3.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த புதிய ஜி530டீ எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஆறு சிலிண்டர்கள் அமைப்புடைய டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 282 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ எஸ்யூவியில் 9ஜி ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சின் சக்தி 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. இந்த மாடலானது மணிக்கு 199 கிமீ வேகம் வரை செல்லும். 0 - 100 கிமீ வேகத்தை 7.4 வினாடிகளில் எட்டிவிடும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி530டீ சொகுசு காரில் இரண்டு ஆக்சில்களிலுமே டிஃபரன்ஷியல் லாக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் சேர்ந்து, ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற சிறந்த எஸ்யூவி மாடலாக மாற்றுகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350 டீ எஸ்யூவியானது 241 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. மேலும், 700 மிமீ ஆழமுடைய நீர்நிலைகளையும் கடந்து செல்வதற்கான தகவமைப்புகளை பெற்றிருக்கிறது. மேலும், ஏஎம்ஜி ஜி73 எஸ்யூவியைவிட சிறப்பான ஆஃப்ரோடு பயன்பாட்டு அம்சங்களை பெற்றுள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

இந்த புதிய எஸ்யூவியில் வலிமையான செவ்வக வடிவ க்ரில் மற்றும் பம்பர் அமைப்பு, வட்ட வடிவ ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், 21 அங்குல அலாய் வீல்கள், ஸ்கிட் பிளேட்டுகள், ஃபுட் ஃபோர்டு போன்றவற்றுடன் தன்னை ஒரு முழுமையான சொகுசு எஸ்யூவி மாடலாக முன்னிறுத்திக் கொள்கிறது.

MOST READ: விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா? இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், 12.3 அங்குல அளவிலான திரையில் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளன. க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஆம்பியன் லைட்டிங் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

MOST READ: சாலையில் சாதாரணமாக பைக் ஓட்டி வரும் இந்த பிரபலம் யாரென்று தெரிகிறதா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ எஸ்யூவியில் 8 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை உள்ளன.

MOST READ: இது புதுசா இருக்கே! டிராஃபிக்கில் தப்பிக்க துப்பாக்கியை நீட்டிய மோடி கட்சிக்காரர்... வைரல் வீடியோ!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

இதன் ஏஎம்ஜி ஜி63 வெர்ஷன் ரூ.2.14 கோடியில் கிடைக்கும் நிலையில், புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ எஸ்யூவியானது ரூ.1.50 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி200 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
Mercedes-Benz has launched the iconic G-wagon in the Indian market. The new Mercedes-Benz G 350d is now available in India for a price of Rs 1.5 crore, ex-showroom (India).
Story first published: Wednesday, October 16, 2019, 15:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X