உலகளவில் எஸ்யூவி ரக கார் சந்தையை கலக்க பென்ஸ் களமிறக்கும் புதிய மாடல் இதுதான்....!

பென்ஸ் நிறுவனம் எஸ்யூவி கார் சந்தையில், அதன் புதிய மாடல் ஜிஎல்பி மாடலை இன்று களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் எஸ்யூவி ரக கார் சந்தையை கலக்க பென்ஸ் களமிறக்கும் புதிய மாடல் இதுதான்....!

சொகுசு கார்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், அதன் புதிய வரவாக இருக்கும் ஜிஎல்பி மாடல் கார் குறித்த டீசர் படங்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாடலை உலக அளவில் இன்று (ஜூன் 1) அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலைப்படுத்தியுள்ளது மெர்சிடிஸ் பென்ஸ்.

இதுகுறித்த செய்தியை ஆங்கில இணைதயளமான என்டிடிவி வெளியிட்டுள்ளது.

உலகளவில் எஸ்யூவி ரக கார் சந்தையை கலக்க பென்ஸ் களமிறக்கும் புதிய மாடல் இதுதான்....!

இந்த புதிய எஸ்யூவி ரக காருக்கு ஜிஎல்பி என்ற பெயரை, பென்ஸ் நிறுவனத்தின் பி-கிளாஸ் மாடலைத் தழுவி வைத்துள்ளது பென்ஸ் நிறுவனம். அதேசமயம், இதன் தோற்றமானது, என்எஃப்ஏ2 பிளாட்பார்மில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த புதிய மாடல் பென்ஸ் ஜிஎல்ஏ மற்றும் ஜிஎல்சி ஆகிய மாடல்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

உலகளவில் எஸ்யூவி ரக கார் சந்தையை கலக்க பென்ஸ் களமிறக்கும் புதிய மாடல் இதுதான்....!

தற்போது, வெளிவந்திருக்கும் டீசர் படம், ஜிஎல்பி காரின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த தகவலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அந்தவகையில், இந்த வெளிப்புறத் தோற்ற காட்சியை வைத்துப்பார்க்கும்போது, காரின் சைஸ் 7 சீட்டர்களைக் கொண்டதாக இருப்பதைப் போன்று காட்சியளிக்கின்றது.

உலகளவில் எஸ்யூவி ரக கார் சந்தையை கலக்க பென்ஸ் களமிறக்கும் புதிய மாடல் இதுதான்....!

நீளமான ஹூட் அமைப்பு, சுருக்கமான ஓவர்ஹாங்க்ஸ் மற்றும் பாக்ஸி ரியர் என்ட் பாயிண்டுகள் இவையனைத்தும் ஜிஎல்பி எஸ்யூவி மாடலுக்கு பிரமாண்டமான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், புதிய வரவாக இருக்கும் இந்த ஜிஎல்பி கார் குடும்ப பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் பி-கிளாஸ் கார்களான 5 சீட்டர் மாடல்களைப் போன்று மிகப்பெரிய கேபின் அமைப்பைப் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் எஸ்யூவி ரக கார் சந்தையை கலக்க பென்ஸ் களமிறக்கும் புதிய மாடல் இதுதான்....!

அவ்வாறு, இந்த காரில் மிகப்பெரிய பூட் ஸ்பேஸ், 500 லிட்டர் கொள்ளளவைக் கொண்டதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மூன்றாவது இருக்கை வரிசையை விருப்ப தேர்வாக, சில நாடுகளுக்கும் மட்டும் வழங்க பென்ஸ் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

உலகளவில் எஸ்யூவி ரக கார் சந்தையை கலக்க பென்ஸ் களமிறக்கும் புதிய மாடல் இதுதான்....!

அதேபோன்று, புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி காரின் டிசைன் குறித்து பார்த்தோமேயானால், இதன் கேபின் மற்றும் வெளிப்புறத்தோற்றம் புதிய தலைமுறை ஏ-கிளாஸ் கார்களுக்கு சமமாக இருப்பதாக தெரிகின்றது. அந்தவகையில், நவீன தொழில்நுட்ப வசதிக்கும், சொகுசு வசதிகளுக்கும் கடுகளவும் குறைச்சலின்றி ஜிஎல்பி உருவாகியுள்ளது. ஆனால், இவற்றைப் பற்றிய முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

உலகளவில் எஸ்யூவி ரக கார் சந்தையை கலக்க பென்ஸ் களமிறக்கும் புதிய மாடல் இதுதான்....!

அதேபோன்று, இந்த புதிய மாடல் பென்ஸ் ஜிஎல்பி-யின் எஞ்ஜின் குறித்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், இந்த காரில் பென்ஸ் நிறுவனத்தின் ஏ-கிளாஸ் கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்ஜின்கள் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிதாக ரெனால்ட்-நிஷான் நிறுவனங்களின் கூட்டமைப்பில் தயாராகி இருக்கும் புதிய எஞ்ஜின்கள் இந்த காரில் இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் எஸ்யூவி ரக கார் சந்தையை கலக்க பென்ஸ் களமிறக்கும் புதிய மாடல் இதுதான்....!

அதேசமயம், புதிய ஜிஎல்பி மாடிலில் எலக்ட்ரானிக் கன்ட்ரோல்ட், வீல்களும் இயக்கம் கொண்ட டிரைவிங் சிஸ்டமும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இவையனைத்தும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகும். இவை, இந்த காரின் அறிமுகத்தின் பின்னரே தெரியவரும்.

Most Read Articles
English summary
Mercedes Benz GLB All Set To Make World Debut. Read In Tamil.
Story first published: Monday, June 10, 2019, 14:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X