புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு ரக எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

கடந்த 2016ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்ற மாடலாக இருந்து வருகிறது. இதுவரை 7,000க்கும் மேற்பட்ட பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த நிலையில், காலமாற்றத்திற்கு தக்கவாறு, தோற்றம், வசதிகள், எஞ்சின் மற்றும் பாதுகாப்பு என அனைத்திலும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி கார் மேம்படுத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு மாடல்களில் கிடைக்கும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த கார் க்ராஸ்ஓவர் சொகுசு கார் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி காரில் புதிய வடிவமைப்புக்கு மாற்றப்பட்டுள்ள எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், க்ரில் அமைப்பு, எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் 17 அங்குலம் மற்றும் 19 அங்குல அளவுகளில் புதிய அலாய் வீல்களுடன் கூடுதல் வசீகரமாக இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளட்டர், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது ஒரே அமைப்பாக மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் இடம்பெறுகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் MBUX என்ற பிரத்யேக செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கும் வாய்ஸ் கமாண்ட் கட்டுப்பாட்டு வசதியை வழங்கும். காரின் இருக்கை அமைப்பை மாற்றுதல், ஆம்பியன்ட் லைட்டிங் சிஸ்டம், டிரைவிங் மோடுகள், மொபைல்போன் அழைப்புகளை கட்டுப்படுத்தும் வசதிகளை பெற முடியும். டச்பேடு மற்றும் கை சைகை மூலமாக கட்டுப்படுத்தும் வசதிகளும் உள்ளன.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரில் இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 197 எச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 7.8 வினாடிகளில் எட்டிவிடும். மறுபுறத்தில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 194 எச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 7.9 வினாடிகளில் எட்டிவிடும்.

MOST READ: சும்மா கத விடாதீங்க பாஸ்.. இந்த பைக் விலை 62 லட்சமா..? லக்சூரி க்ரூஸர் இறக்குமதி செய்யப்பட்ட கதை!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காரின் பெட்ரோல், டீசல் எஞ்சின்களுடன் 9ஜி ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்திலும் இந்த மாடல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரின் எஞ்சின்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக வந்துள்ளது.

MOST READ: அடங்கேப்பா பல கோடி ரூபாய் முதலீடு செய்யும் சீன நிறுவனம்... மகிழ்ச்சியின் உச்சத்தில் எடப்பாடி!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரில் 64 வண்ணங்களில் ஒளிரும் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், மர அலங்கார வேலைப்பாடுகள், வயர்லெஸ் சார்ஜர், ஆக்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், பல்முனை ஏர்பேக்குகளுடன் பாதுகாப்பு, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

MOST READ: மலிவான விலையில் வெங்காயம் வாங்க குவிந்த மக்கள்... பயத்தில் வியாபாரிகள் என்ன செய்தார்கள் தெரியுமா?

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் ஜிஎல்சி 200 பெட்ரோல் மாடலுக்கு ரூ.52.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஜிஎல்சி 220டீ மாடலுக்கு ரூ.57.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். பிஎம்டபிள்யூ எக்ஸ்3, வால்வோ எக்ஸ்சி60, லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
Mercedes-Benz India has launched the new 2020 GLC facelift SUV in the market. The new (2020) Mercedes-Benz GLC facelift is offered with a starting price of Rs 52.75 lakh. The SUV is offered in a range of variants: GLC 200 and GLC 220d 4MATIC with the top-spec model priced at Rs 57.75 lakh. All prices are ex-showroom (Delhi).
Story first published: Tuesday, December 3, 2019, 14:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X