சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட கார் ஷோரூம் திறப்பு!

சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட கார் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஷோரூம் குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட கார் ஷோரூம் திறப்பு!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய ஷோரூம் 72,000 சதுர அடி பரப்பில் மிகப் பெரிய அளவிலான கார் ஷோரூமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஷோரூமை அங்கீகரிக்கப்பட்ட டீலரான சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனம் திறந்துள்ளது.

சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட கார் ஷோரூம் திறப்பு!

சூப்பர் லக்சுரியஸ் என்று குறிப்பிடப்படும் இந்த பிரம்மாண்ட ஷோரூமில் 3S என்று குறிப்பிடப்படும் கார் விற்பனை, சர்வீஸ் மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை உள்ளிட்ட அனைத்தையும் ஒரே குடையின் கீழ் வழங்கும்.

சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட கார் ஷோரூம் திறப்பு!

இந்த புதிய ஷோரூமில் ஒரே நேரத்தில் 6 கார்களை காட்சிப்படுத்த முடியும். இந்த ஷோரூமிலேயே கார் பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கும் மையமும் செயல்படுகிறது. இந்த கார் சர்வீஸ் மையத்தில் ஆண்டுக்கு 15,000 கார்களை சர்வீஸ் செய்து தருவதற்கான கட்டமைப்பு வசதிகளை பெற்றுள்ளது.

சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட கார் ஷோரூம் திறப்பு!

மேலும், இந்த ஷோரூமில் பயிற்சி பெற்ற 136 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கின்றனர். கார் விற்பனை தொடர்பான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அனைத்து சேவைகளையும் இந்த ஷோரூமில் இருந்து பெற முடியும். கார்களை விரைவாக சர்வீஸ் செய்து தருவதற்கான விசேஷ கட்டமைப்பு வசதிகள், பொது பழுது நீக்கும் பிரிவு, கார்களில் இருக்கும் பழுதுகளை கணிணி முறையில் கண்டறியும் வசதி, பாடி ரிப்பேர்ட் மற்றும் பெயிண்ட் பிரிவுகள் இந்த ஷோரூமில் செயல்படுகின்றன.

MOST READ:ஹூண்டாய் சான்ட்ரோ காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல்: முழு விபரம்

சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட கார் ஷோரூம் திறப்பு!

இந்த ஷோரூம் திறப்பு விழா குறித்து மெர்சிடிஸ் பென்ஸ் நிர்வாக இயக்குனர் மார்ட்டின் ஷ்வென்க் கூறுகையில்,"இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் நாங்கள் தொடர்ந்து எங்களது சேவையை வலுவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.

MOST READ:சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...

சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட கார் ஷோரூம் திறப்பு!

எங்களுக்கு சென்னை மிக முக்கிய சந்தையாக உள்ளது. சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தை டீலராக நியமிப்பதன் மூலமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி வாடிக்கையாளர்களுக்கு எங்களது சேவை மிக நெருக்கமாகவும், வலுவான வாடிக்கையாளர் வட்டத்தையும் பெற முடியும்," என்று தெரிவித்தார்.

MOST READ:லடாக்கின் கரடு முரடான சாலையில் சிக்கிய பஜாஜ் பல்சர்... உதவி கரம் நீட்டிய இராணுவ வீரர்... வீடியோ!

சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட கார் ஷோரூம் திறப்பு!

இதே விழாவில் சுந்தரம் மோட்டார்ஸ் நிர்வாக அதிகாரி ஷரத் விஜயராகவன் கூறுகையில்," மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு உன்னதமான சேவையை வழங்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Most Read Articles

English summary
Mercedes-Benz has Launched Largest Luxury Car Dealership In Chennai.
Story first published: Saturday, October 19, 2019, 10:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X