ஐரோப்பாவில் புக்கிங்குகளை அள்ளி குவிக்கும் எம்ஜி இ-இசட்எஸ் மின்சார கார்: அடுத்த சம்பவம் இந்தியாவில்?

எம்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் ஐரோப்பாவில் தரமான சம்பவத்தை நிகழ்த்தி வருகின்றது. இதே சம்பவத்தை விரைவில் இந்தியாவிலும் அது நிகழ்த்த உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஐரோப்பாவில் புக்கிங்குகளை அள்ளி குவிக்கும் எம்ஜி இ-இசட்எஸ் மின்சார கார்: அடுத்த சம்பவம் இந்தியாவில்தான்...

இங்கிலாந்தை தலைமையமாகக் கொண்டு இயங்கும் எம்ஜி நிறுவனம், ஐரோப்பாவில் தனது முதல் எலெக்ட்ரிக் காரான இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. அது, அந்நாட்டு மதிப்பில் 21,495 யூரோ என்ற விலையில் களமிறக்கப்பட்டுள்ளது.

இந்த விலை மற்ற மின் வாகனங்களுக்கு கடுமையான போட்டியளிக்கும் வகையில் இருப்பாதல், இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

ஐரோப்பாவில் புக்கிங்குகளை அள்ளி குவிக்கும் எம்ஜி இ-இசட்எஸ் மின்சார கார்: அடுத்த சம்பவம் இந்தியாவில்தான்...

அந்தவகையில், இதுவரை ஆயிரம் யூனிட் இ-இசட்எஸ் மின்சார கார்களுக்கான புக்கிங் குவிந்துள்ளது. இது மிகப்பெரிய வரவேற்பாகும்.

5 இருக்கை அமைப்பில் வெளிவந்துள்ள இந்த எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மலிவான விலையில் பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்று களமிறங்கியிருப்பதே, இத்தகைய வரவேற்பைப் பெற காரணமாக உள்ளது.

ஐரோப்பாவில் புக்கிங்குகளை அள்ளி குவிக்கும் எம்ஜி இ-இசட்எஸ் மின்சார கார்: அடுத்த சம்பவம் இந்தியாவில்தான்...

அந்தவகையில், இந்த எலெக்ட்ரிக் காரின் ஹை எண்ட் வேரியண்டின் விலை 23,495 யூரோ ஆகும். இது, இந்திய மப்பில் ரூ. 20.63 லட்சம் ஆகும். அதேசமயம், ஆரம்ப நிலை எம்ஜி இ-இசட்எஸ் மின்சார காருக்கு இந்திய மதிப்பில் ரூ. 18.87 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் புக்கிங்குகளை அள்ளி குவிக்கும் எம்ஜி இ-இசட்எஸ் மின்சார கார்: அடுத்த சம்பவம் இந்தியாவில்தான்...

இத்துடன், காரினை வீட்டிலேயே வைத்து சார்ஜ் செய்யும் வசதியையும் எம்ஜி நிறுவனம் செய்து கொடுக்கின்றது. இதற்கு தனியாக எந்த தொகையையும் அது வசூலிப்பது இல்லை. ஆகையால், வாடிக்கையாளர்களுக்கு இது இலவசமாக வழங்கப்படுகின்றது. இதுபோன்ற பல காரணங்களால் இந்த கார் ஐரோப்பாவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

ஐரோப்பாவில் புக்கிங்குகளை அள்ளி குவிக்கும் எம்ஜி இ-இசட்எஸ் மின்சார கார்: அடுத்த சம்பவம் இந்தியாவில்தான்...

இந்த கார் ஹுண்டாய் நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளது. இந்த கார், அந்நாட்டு மதிப்பில் 27,250 யூரோவில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்திய மதிப்பில் ரூ. 24 லட்சம் ஆகும்.

இதேபோன்று, கியா நிறுவனமும் இ-நிரோ என்ற எலெக்ட்ரிக் காரை 32,995 யூரோ மதிப்பில் (ரூ.29 லட்சம்) களமிறக்க உள்ளது.

ஐரோப்பாவில் புக்கிங்குகளை அள்ளி குவிக்கும் எம்ஜி இ-இசட்எஸ் மின்சார கார்: அடுத்த சம்பவம் இந்தியாவில்தான்...

தற்போது, ஐரோப்பாவில் அதிக வரவேற்பைப் பெற்று வரும் எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவிலும் மிக விரைவில் களமிறங்க இருக்கின்றது.

ஐரோப்பாவில் புக்கிங்குகளை அள்ளி குவிக்கும் எம்ஜி இ-இசட்எஸ் மின்சார கார்: அடுத்த சம்பவம் இந்தியாவில்தான்...

முன்னதாக, இந்நிறுவனம் களமிறக்கிய ஹெக்டர் எஸ்யூவி ரக கார் ஏற்கனவே இந்திய வாகனச் சந்தையில் புரட்சியை ஏற்படுத்து வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்நிலையில், மின்வாகன சந்தையிலும் புரட்சி செய்யும்விதமாக அந்நிறுவனம், இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை இன்னும் ஓரு சில மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ளது.

ஐரோப்பாவில் புக்கிங்குகளை அள்ளி குவிக்கும் எம்ஜி இ-இசட்எஸ் மின்சார கார்: அடுத்த சம்பவம் இந்தியாவில்தான்...

இந்த காரை எம்ஜி நிறுவனம், கடந்த ஏப்ரல் மாதம் உலகளவில் அறிமுகம் செய்திருந்தது. இது ஒரு முழுமையான சார்ஜில் 300 கிமீ தூரம் வரை செல்லும். அதற்கேற்ப வகையிலான 44.5 kWh லித்தியம் அயன் பேட்டரி அதில் இடம்பெற்றுள்ளது. இந்த பேட்டரி மிக வேகமாக சார்ஜ் பெறும் திறனைக் கொண்டுள்ளது.

ஐரோப்பாவில் புக்கிங்குகளை அள்ளி குவிக்கும் எம்ஜி இ-இசட்எஸ் மின்சார கார்: அடுத்த சம்பவம் இந்தியாவில்தான்...

இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார் 148 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இது 0த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வேகத்தை வெறும் 8.5 விநாடிகளில் தொட்டுவிடும். அதேசமயம், இந்த கார் மணிக்கு 140 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது.

ஐரோப்பாவில் புக்கிங்குகளை அள்ளி குவிக்கும் எம்ஜி இ-இசட்எஸ் மின்சார கார்: அடுத்த சம்பவம் இந்தியாவில்தான்...

இந்தியாவிற்கான எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி குஜராத் மாநிலத்தில் உள்ள ஹலோல் பிளாணட்டில் செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு, உள்நாட்டிலேயே வைத்து கட்டமைக்கப்படுவதால், இந்த எலெக்கட்ரிக் கார் மலிவான விலையில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
MG eZS Electric SUV Has Created A Record In UK. Read In Tamil.
Story first published: Monday, August 26, 2019, 15:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X