எம்ஜி எலக்ட்ரிக் காரின் இந்திய விளம்பர தூதராக பிரபல ஹாலிவுட் நடிகர் நியமனம்

எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது அடுத்து தயாரிப்பு வாகனமான எலக்ட்ரிக் இ-இசட்எஸ் எஸ்யூவி மாடலுக்கு பிரபல பிரிட்டிஷ் நடிகர் பெனடிக்ட் கம்பெர்பாட்ச் இந்திய பிராண்ட் தூதராக இருப்பார் என அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே எம்ஜி ஹெக்டரின் விளம்பரத்திலும் நடித்துள்ளார்.

எம்ஜி எலக்ட்ரிக் காரின் இந்திய பிராண்ட் தூதராக மாறும் பிரபல நடிகர்...

வருகிற டிசம்பர் மாதம் அறிமுகமாகவுள்ள இந்த எலக்ட்ரிக் மாடல் கார் இந்தியாவில் ஹெக்டர் எஸ்யூவிக்கு பிறகு எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகும் இரண்டாவது காராக விளங்கும். இந்த இ-இசட்எஸ் மாடல் காருக்கு ஏற்கனவே பல முன்திட்ட பணிகள் தொடங்கப்பட்டு வாடிக்கையாளர்களிடையே பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முன்திட்டப் பணிகள் தீவிரம்!

எம்ஜி எலக்ட்ரிக் காரின் இந்திய பிராண்ட் தூதராக மாறும் பிரபல நடிகர்...

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இந்திய பிராண்ட் தூதராக அறிவிக்கப்பட்டது குறித்து பெனடிக்ட் கம்பெர்பாட்ச் கூறுகையில், எனது குழந்தை பருவத்தில் இருந்தே எம்ஜி நிறுவனத்தை பற்றி படித்தும் பார்த்தும் வருகிறேன். எதிர்காலத்தில் இந்நிறுவனத்தின் காரில் பயணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டேன்.

எம்ஜி எலக்ட்ரிக் காரின் இந்திய பிராண்ட் தூதராக மாறும் பிரபல நடிகர்...

தற்போது அந்நிறுவனத்தின் இந்திய முதலீட்டில் நான் ஒரு பகுதியாக உள்ளேன். இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் உடன் இணைக்கப்பட்ட எஸ்யூவியாக விளங்கவுள்ள இந்த இசட்எஸ் இவி கார், தற்சமயம் சுற்றுச்சூழலுக்கு தேவையான மாற்றமாக உள்ளது. இதன் இந்திய அறிமுகத்தில் நானும் ஒரு பகுதி என்றார்.

எம்ஜி எலக்ட்ரிக் காரின் இந்திய பிராண்ட் தூதராக மாறும் பிரபல நடிகர்...

எம்ஜி மோட்டார் இந்தியாவின் எம்டி ராஜீவ் சாபா கூறுகையில், எம்ஜி இசட்எஸ் இவி கார் மூலம் எங்கள் நிறுவனத்தை பெனடிக்ட் கம்பெர்பாட்ச் நடிகர் உடன் இணைக்க ஆர்வமாக உள்ளோம். இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இங்கிலாந்து, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் சந்தைகளில் மிக பெரிய வாடிக்கையாளர்கள் கூட்டம் உள்ளது. இதுவே இந்தியாவில் இந்த காரை எளிதாக விற்பனை செய்ய வழி வகுக்கும் என நம்புகிறோம்.

எம்ஜி எலக்ட்ரிக் காரின் இந்திய பிராண்ட் தூதராக மாறும் பிரபல நடிகர்...

இந்த கார் மூலம் நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு நாங்களும் ஒரு காரணமாக அமையவுள்ளோம். இதனால் மகிழ்ச்சியுடன் இந்த காரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என கூறினார். எம்ஜி நிறுவனம் மேலும் எம்ஜி சேன்ஞ்மேக்கர்ஸ் மற்றும் ட்ராக்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை இந்தியா முழுவதும் உள்ள 200 பள்ளிகளில் நடத்தி வருகிறது.

எம்ஜி எலக்ட்ரிக் காரின் இந்திய பிராண்ட் தூதராக மாறும் பிரபல நடிகர்...

இந்த இ-இசட்எஸ் எஸ்யூவி கார் 44.5 கிலோ வாட்ஸ்/ நேரம் பேட்டரி யூனிட்டை கொண்டுள்ளது. இந்த காரின் மோட்டார் 150 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஸ்யூவி 0-விலிருந்து 60 கிலோமீட்டர்/நேரம் வேகத்தை வெறும் 3.1 வினாடிகளில் கொடுக்கக்கூடியது. இந்த அளவுகளில் தான் இந்தியாவிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி எலக்ட்ரிக் காரின் இந்திய பிராண்ட் தூதராக மாறும் பிரபல நடிகர்...

மேலும் இந்த எலக்ட்ரிக் இசட்எஸ் காருடன் இசட்எஸ் எஸ்யூவி மாடலையும் அறிமுகப்படுத்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வெளியாகவுள்ள இந்த எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் ஹைப்ரீடு பவர்ட்ரைன் தேர்வும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி கார் குறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

அப்படிபோடு... புதிய எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி பெட்ரோல் மாடலிலும் வருகிறது

எம்ஜி எலக்ட்ரிக் காரின் இந்திய பிராண்ட் தூதராக மாறும் பிரபல நடிகர்...

எம்ஜி இ-இசட்எஸ் எஸ்யூவி கார் பெரும் தொகையில் பல சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இதனால் தான் பிரிட்டிஷ் நடிகர் இந்திய பிராண்ட் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் பெரும்பாலானோர் சாதாரண கார்களில் இருந்து எலக்ட்ரிக் கார்களுக்கு மாறி வருகின்றனர். இதன் மூலம் சுற்றுச்சூழல் வருங்காலங்களில் பாதுகாக்கப்படும் என்பதால் அரசாங்கமும் தனது பணியாளர்களுக்கு எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்த வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
MG eZS SUV India Launch Scheduled For Early 2020: Doctor Strange Concurs
Story first published: Thursday, October 24, 2019, 12:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X