எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் மாடல் இந்தியாவில் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடல் இந்திய மண்ணில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. முதல்முறையாக இந்த கார் இந்திய மண்ணில் தென்பட்டிருப்பது குறித்த ஸ்பை படங்களும் வெளியாகி இருக்கின்றன.

எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் மாடல் இந்தியாவில் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

சீனாவின் செயிக் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவியை இந்தியாவில் முதல் மாடலாக அறிமுகம் செய்தது. இந்த எஸ்யூவி காருக்கு எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பு கிடைத்த நிலையில், முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் மாடல் இந்தியாவில் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு அதிக வரவேற்பு கிடைத்தற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அதிக இடவசதி. இதன் ரக கார்களில் அதிக உட்புற இடவசதியை அளித்ததால், வாடிக்கையாளர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டது.

எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் மாடல் இந்தியாவில் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

தற்போது இந்தியாவில் ஹெக்டர் எஸ்யூவி 5 சீட்டர் மாடலாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், 7 சீட்டர் மாடலும் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில், ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடல் இந்திய மண்ணில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் மாடல் இந்தியாவில் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

ஆட்டோமொபைல் இணையதளங்களில் ஹெக்டர் 6 சீட்டர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதில், ஹெக்டர் 5 சீட்டர் எஸ்யூவியைவிட 6 சீட்டர் மாடலில் சில வித்தியாசங்கள் கொடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் மாடல் இந்தியாவில் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

அதாவது, 5 சீட்டர் மாடலைவிட பெரிய அளவிலான முகப்பு க்ரில் அமைப்பு, புதிய எல்இடி பகல்நேர விளக்குகள் அமைப்பு, க்ரோம் பாகங்கள், புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றிருப்பது ஸ்பை படங்கள் மூலமாக தெரிகிறது.

எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் மாடல் இந்தியாவில் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

புதிய எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் மாடலின் நீள, அகலம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், 5 சீட்டர் மாடலைவிட மேம்படுத்தப்பட்ட உட்புறத்துடன் வர இருப்பதாக தெரிகிறது.

எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் மாடல் இந்தியாவில் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

ஏனெனில், அண்மையில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹெக்டர் எஸ்யூவியின் அடிப்படை மாடலான பவ்ஜுன் 530 எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட மாடலானது 40 மிமீ கூடுதல் நீளத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதே மாடல்தான் வருமா என்பது குறித்த தகவல் இல்லை.

எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் மாடல் இந்தியாவில் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

புதிய எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் மாடலில் முக்கிய மாற்றமாக, நடுவரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், மிக சொகுசான இருக்கை வசதியை இந்த 6 சீட்டர் மாடல் அ்ளிக்கும் என்று நம்பலாம். வாடிக்கையாளர்கள் அதிக சொகுசான பயணத்தை விரும்புவதால், 7 சீட்டர் மாடலுக்கு பதிலாக 6 சீட்டர் மாடலாக கொண்டு வர எம்ஜி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் மாடல் இந்தியாவில் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

எம்ஜி ஹெக்டர் 5 சீட்டர் மாடலில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள்தான் இந்த புதிய 6 சீட்டர் மாடலிலும் பயன்படுத்தப்படும். இதன் எஞ்சின் அதிகபட்சமாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும்.

எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் மாடல் இந்தியாவில் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

இந்த புதிய 6 சீட்டர் மாடலானது 5 சீட்டர் மாடலைவிட சற்றே கூடுதல் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் வர இருக்கும் டாடா கசினி மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆகிய 7 சீட்டர் எஸ்யூவிகளுக்கு போட்டியாக இருக்கும். அடுத்த ஆண்டு முதல் பாதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது.

ஸ்பை படங்கள் உதவி: ஆட்டோகார்இந்தியா

Most Read Articles
English summary
Much awaited MG Hector 6 seater SUV model has spied testing in India for the first time.
Story first published: Friday, September 27, 2019, 15:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X