டிசைன் மாற்றங்களுடன் புதிய பெயரில் வருகிறது எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் எஸ்யூவி!

ஹெக்டர் அடிப்படையிலான புதிய 6 சீட்டர் எஸ்யூவியை புதிய பெயரில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிசைன் மாற்றங்களுடன் புதிய பெயரில் வருகிறது எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் எஸ்யூவி!

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் கார் மாடலாக இந்தியாவில் களமிறக்கப்பட்ட ஹெக்டர் எஸ்யூவிக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தக்க வைக்கும் விதமாக புதிய மாடல்களை களமிறக்கும் முனைப்பில் எம்ஜி உள்ளது.

டிசைன் மாற்றங்களுடன் புதிய பெயரில் வருகிறது எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் எஸ்யூவி!

இரண்டாவது மாடலாக இசட்எஸ் என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை வரும் ஜனவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது எம்ஜி. இதைத்தொடர்ந்து, ஹெக்டர் அடிப்படையிலான புதிய 6 சீட்டர் மாடலையும் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

டிசைன் மாற்றங்களுடன் புதிய பெயரில் வருகிறது எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் எஸ்யூவி!

ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடலானது புதிய பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், மாருதி நிறுவனம் எப்படி எர்டிகா காரிலிருந்து எக்ஸ்எல்-6 காரை வேறுபடுத்தி இருக்கிறதோ, அதேபோன்று, ஹெக்டர் எஸ்யூவியில் சில டிசைன் மாற்றங்களை செய்து புதிய 6 சீட்டர் மாடல் வர இருக்கிறது.

டிசைன் மாற்றங்களுடன் புதிய பெயரில் வருகிறது எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் எஸ்யூவி!

முகப்பிலும், பின்புறத்திலும் டிசைனில் சில மாற்றங்கள் புதிய அலாய் சக்கரங்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். ஹெக்டர் எஸ்யூவியைவிட கூடுதல் பிரிமீயம் வசதிகளையும் சேர்க்கவும் எம்ஜி திட்டமிட்டுள்ளது.

டிசைன் மாற்றங்களுடன் புதிய பெயரில் வருகிறது எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் எஸ்யூவி!

புதிய முகப்பு க்ரில் அமைப்பு, சிறிய மாற்றங்கள் செய்யப்பட்ட ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு, இரட்டை புகைப்போக்கி குழல்கள், மறுவடிவமைப்பு பெற்ற பம்பர் என பல்வேறு மாற்றங்களுடன் தனித்துவமானதாக இருக்கும். விலையை கூடுதலாக நிர்ணயிக்க வேண்டும் என்பதால், அதற்கு ஏற்ப மதிப்பு வாய்ந்த அம்சங்களை சேர்க்க வேண்டி இருக்கும்.

டிசைன் மாற்றங்களுடன் புதிய பெயரில் வருகிறது எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் எஸ்யூவி!

உட்புறத்தில் சாஃப்ட் டச் பிளாஸ்டிக் பாகங்கள், அலுமினிய அலங்கார ஆக்சஸெரீகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். ஹெக்டர் 5 சீட்டர் மாடலில் இருக்கும் 10.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை தொடர்ந்து தக்க வைக்கப்படும்.

டிசைன் மாற்றங்களுடன் புதிய பெயரில் வருகிறது எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் எஸ்யூவி!

புதிய எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் மாடலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் அறிமுகம் செய்யப்படும். 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கும். டீசல் மாடலில் 2.0 லிட்டர் எஞ்சின் தக்க வைக்கப்படும்.

டிசைன் மாற்றங்களுடன் புதிய பெயரில் வருகிறது எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் எஸ்யூவி!

வரும் பிப்ரவரி - மார்ச் இடையிலான காலக்கட்டத்தில் ஹெக்டர் 6 சீட்டர் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை தொடர்ந்து இந்த புதிய 6 சீட்டர் ஹெக்டர் மூலமாக இந்திய மார்க்கெட்டில் ஓரளவு வலுவான இடத்தை நோக்கி எம்ஜி மோட்டார்ஸ் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்று நம்பலாம்.

Source: AutoCarIndia

Most Read Articles
English summary
According to report, MG is gearing up to launch new 6 seater version of Hector early next yeare and it will come with different name plate in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X