ஆச்சரியம் அளிக்கும் மலிவான விலையில் அதிநவீன கார் இன்று அறிமுகம்! நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்ஜி ஹெக்டர் கார் இன்று முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம்! நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு

இங்கிலாந்தை சேர்ந்த புகழ்பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி (MG). எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் கார் (MG Hector) இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது 5 சீட்டர் பிரீமியம் எஸ்யூவி ரக கார் ஆகும். ஹெக்டர் காருக்கான முன்பதிவை எம்ஜி நிறுவனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது. தற்போது முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம்! நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு

ஹெக்டர்தான் இந்திய மார்க்கெட்டில் எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் கார் ஆகும். இந்த சூழலில் எம்ஜி ஹெக்டர் கார் இந்திய மார்க்கெட்டில் இன்று (ஜூன் 27) முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. அத்துடன் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஹெக்டர் காரின் விலையும் இன்று அறிவிக்கப்படுகிறது.

ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம்! நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு

ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என மொத்தம் 4 வேரியண்ட்களில் எம்ஜி ஹெக்டர் கார் கிடைக்கும். எம்ஜி ஹெக்டர் கார் எல்இடி டிஆர்எல்கள் உடன் ஸ்பிளிட் ஹெட்லேம்ப் டிசைனை பெற்றுள்ளது. இந்த காரில் எம்ஜி நிறுவனம் ட்யூயல் டோன் அலாய் வீல்களை வழங்கியுள்ளது. ஹெக்டர் காரில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டி ஆப்ஷன்களுடன் கூடிய 10.4 இன்ச் டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம்! நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு

இதுதவிர பனரோமிக் சன் ரூஃப், 360 டிகிரி கேமரா, க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் எம்ஜி ஹெக்டர் காரில் வழங்கப்பட்டுள்ளன. இதன் முன் இருக்கைகளை மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். எம்ஜி ஹெக்டர் காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 141 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம்! நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு

இதுதவிர 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் எம்ஜி ஹெக்டர் காரில் கிடைக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வழங்க வல்லது. எம்ஜி ஹெக்டர் காரில், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. அதே சமயம் பெட்ரோல் வெர்ஷனில், ட்யூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. ஹெக்டர் காரின் மைல்டு ஹைப்ரிட் வேரியண்ட்டையும் எம்ஜி நிறுவனம் விற்பனை செய்யவுள்ளது.

ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம்! நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு

டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்களுடன் எம்ஜி ஹெக்டர் போட்டியிடவுள்ளது. இந்த செக்மெண்ட்டில் மற்ற கார்களை காட்டிலும் எம்ஜி ஹெக்டர்தான் மிகவும் ''அட்வான்ஸ்டு'' கார் என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால், எம்ஜி ஹெக்டர் கார் அசத்துகிறது. இதற்காக மைக்ரோசாப்ட், அடோப், சிஸ்கோ, கானா, டாம்டாம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் எம்ஜி நிறுவனம் கூட்டணி அமைத்து கொண்டுள்ளது.

MOST READ: இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...

ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம்! நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு

எம்ஜி ஹெக்டர் காரின் நீளம் 4,655 மிமீ. அகலம் 1,835 மிமீ. உயரம் 1,760 மிமீ. வீல் பேஸ் 2,750 மிமீ. க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 192 மிமீ. இந்த டைமன்சன்கள் அடிப்படையில் பார்த்தால், இந்த செக்மெண்ட்டிலேயே மிகவும் பெரிய கார் எம்ஜி ஹெக்டர்தான். எம்ஜி ஹெக்டர் காரின் பூட் ஸ்பேஸ் 587 கிலோ கிராம். பூட் ஸ்பேஸ் என்ற விஷயத்திலும் கூட இந்த செக்மெண்ட்டிலேயே இதுதான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video - Watch Now!
சரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!
ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம்! நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு

மைலேஜ் என எடுத்து கொண்டால், பெட்ரோல் ஹைப்ரிட் மேனுவல் ஒரு லிட்டருக்கு 14.16 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும். அதே சமயம் பெட்ரோல் ஆட்டோமெட்டிக் ஒரு லிட்டருக்கு 13.96 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும். டீசல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 17.41 கிலோ மீட்டர் மைலேஜை கொடுக்கும். ஹெக்டர் கார் தொடர்பான அனைத்து தகவல்களையும் எம்ஜி நிறுவனம் வெளியிட்டு விட்டது.

MOST READ: பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா? விடை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம்! நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு

ஆனால் மிக முக்கியமான ஒரு தகவல் மட்டும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. விலை. ஆம், எம்ஜி ஹெக்டர் காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இன்று காலை 11.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக விலை அறிவிக்கப்பட்டு விடும். டீலர்கள் தரப்பில் விசாரித்தபோது, எம்ஜி நிறுவனம் ஹெக்டர் காருக்கு மிக சவாலான விலையை நிர்ணயம் செய்துள்ள தகவல் கிடைத்துள்ளது.

ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம்! நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு

எம்ஜி இந்தியா நிறுவனத்தின் மீடியா டிரைவ் நிகழ்ச்சியில் கூட, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரான சாபா, ஹெக்டர் காரின் விலை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதை எல்லாம் வைத்து பார்க்கையில் எம்ஜி ஹெக்டர் காரின் ஆரம்ப விலை 10 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ: சரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்... எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...

ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம்! நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு

அதாவது பேஸ் பெட்ரோல் மாடலின் விலை 10 லட்ச ரூபாய் என்ற அளவிலும், டீசல் டாப் மாடலின் விலை 16 லட்ச ரூபாய் என்ற அளவிலும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் எம்ஜி ஹெக்டர் காரை சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். டிசைன், இன்ஜின், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் என அனைத்து அம்சங்களிலும் எம்ஜி ஹெக்டர் கார் அசத்துகிறது.

ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம்! நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு

எனவே விலை 10-16 லட்ச ரூபாய்க்குள் இருந்தால், எம்ஜி ஹெக்டர் கார் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். அத்துடன் டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்களின் விற்பனையை எம்ஜி ஹெக்டர் கார் அப்படியே முழுங்கி விடுவதற்கான வாய்ப்புகளும் கூட உள்ளன.

Most Read Articles

English summary
MG Hector To Be Launched In India Tomorrow — Rivals The Jeep Compass. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X