புதிய எம்ஜி எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் பொருத்தப்பட இருக்கும் பெட்ரோல் எஞ்சின் குறித்த தகவல்களை ஆட்டோகார் இந்தியா தளம் வெளியிட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் இடம்பெறும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின்,

எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் முதல் எஸ்யூவி ரக காரின் முக்கிய விபரங்கள் ஆட்டோமொபைல் தளங்களில் கசிந்துள்ளன. அதன் விபரங்களை காணலாம்.

புதிய எம்ஜி எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

இங்கிலாந்தை சேரந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர் என்ற எஸ்யூவி மாடலை அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் களமிறக்க உள்ளது. தற்போது இந்த புதிய ஹெக்டர் எஸ்யூவி மாடலானது தீவிரமான சாலை சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய எம்ஜி எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

இந்த சூழலில், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் பொருத்தப்பட இருக்கும் பெட்ரோல் எஞ்சின் குறித்த தகவல்களை ஆட்டோகார் இந்தியா தளம் வெளியிட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது.

புதிய எம்ஜி எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

இந்த பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 143 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். இதன் ரக போட்டியாளர்களில் ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி மாடல்கள்தான் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்கின்றன.

புதிய எம்ஜி எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 163 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியில் இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 155 பிஎச்பி பவரையும், 192 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

புதிய எம்ஜி எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

போட்டியாளர்களைவிட சற்று குறைவான திறன் கொண்டதாக எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இருக்கிறது. எனினும், ஹூண்டாய் டூஸான் மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய எஸ்யூவி கார்களை போன்றே மேனுவல் மற்றும் டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் இந்த ஹெக்டர் எஸ்யூவி கிடைக்கும்.

புதிய எம்ஜி எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

மேலும், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் டீசல் மாடலில் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 340 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய எம்ஜி எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

இந்த புதிய எஸ்யூவியில் 10.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 360 டிகிரி கேமரா இடம்பெற்றுள்ளது. 6 நிலைகளில் உயரத்தை மாற்றியமைக்கும் வசதியுடன் டிரைவர் இருக்கை, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், பனரோமிக் சன்ரூஃப் ஆகிய பல சிறப்பம்சங்களுடன் வர இருக்கிறது.

குஜராத் மாநிலம், ஹலோல் பகுதியில் உள்ள செயிக் குழுமத்திற்கு சொந்தமான ஆலையில் புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 75 சதவீதம் அளவிற்கு உள்நாட்டு உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட இருப்பதால், விலையும் சவாலாக இருக்கும் என நம்பலாம்.

Most Read Articles
English summary
MG Motor India will soon mark its debut in the country with the launch of the all-new Hector SUV. The MG Hector is expected to go on sale by mid-2019 and is currently undergoing extensive testing on public roads. Aimed to rival the likes of the Jeep Compass and Hyundai Tucson, the MG Hector promises a lot.
Story first published: Saturday, February 23, 2019, 17:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X