பெரும் ஆவலைத் தூண்டி வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த சிறப்பு தகவல்!

எம்ஜி நிறுவனம், தனது வாகனங்களை இந்தியாவில் அறிமகும் செய்வதற்கான அனைத்து ஏற்படுகளையும் செய்து முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும் ஆவலைத் தூண்டி வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த சிறப்பு தகவல்!

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம், பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் அதன் வாகனங்களை இந்திய வாகனச் சந்தையில் அறிமகும் செய்வதற்கான அனைத்து ஏற்படுகளையும் செய்து முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த, செய்தியை ரஷ்லேன் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

பெரும் ஆவலைத் தூண்டி வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த சிறப்பு தகவல்!

எம்ஜி நிறுவனம், இந்தியாவில் முதல் மாடலாக எஸ்யூவி ரகத்திலான ஹெக்டர் காரைதான் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த காரை குஜராத் மாநிலம், வதோதரா பகுதியில் உள்ள ஹலோல் என்னும் பிளாண்டில் வைத்து இந்த நிறுவனம் தயாரித்து வருகின்றது.

பெரும் ஆவலைத் தூண்டி வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த சிறப்பு தகவல்!

இந்நிலையில், எம்ஜி நிறுவனம் ஹெக்டார் காரின் உற்பத்தியைத் தொடங்கிவிட்டதாகவும், அதனை டீலர்கள் காட்சிப்படுத்தவும் டெஸ்ட் டிரைவ் செய்ய அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. மேலும், ஹெக்டர் கார் குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில், எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. அதனை ஒரு சிலர் இயக்கப் பார்ப்பதைப்போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பெரும் ஆவலைத் தூண்டி வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த சிறப்பு தகவல்!

எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் கார், எஸ்யூவி கார் பிரியர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்த காரில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரில், 360 டிகிரி சர்ரவுண்ட் வியூ கேமரா, ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், க்ரூஸ் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோமெட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் என பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

பெரும் ஆவலைத் தூண்டி வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த சிறப்பு தகவல்!

இதுதவிர டிரைவர் இருக்கையை, எலக்ட்ரிக்கல் முறையில், 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட உள்ளது. இத்துடன், இந்த கார், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என 2 எஞ்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கி இருக்கின்றன. இதில், பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 143 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டது. அதேபோன்று, டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறனைப் பெற்றுள்ளது.

பெரும் ஆவலைத் தூண்டி வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி குறித்த சிறப்பு தகவல்!

இந்தியாவில் உள்ள சில முன்னணி நகரங்களில் டீலர்ஷிப்களை நிர்ணயிக்கும் பணியை எம்ஜி நிறுவனம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. வரும் ஜூன் மாதத்திற்குள்ளாக எம்ஜி நிறுவனம் இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்களை திறந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர 120 டச் பாயிண்ட்களை திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எம்ஜி நிறுவனம், ஹெக்டர் 5 சீட்டர் எஸ்யூவியை தொடர்ந்து, இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி, ஹெக்டர் 7 சீட்டர் எஸ்யூவி உள்ளிட்ட மாடல்களையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

Most Read Articles
English summary
MG Hector Production Starts – Dealer Showcase & Test Drive Organized. Read In Tamil.
Story first published: Tuesday, April 30, 2019, 17:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X