Just In
- 1 hr ago
இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?
- 1 hr ago
10 இருக்கைகளுடன் 2020 ஃபோர்ஸ் ட்ராக்ஸ் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் மாடல் சோதனை ஓட்டம்...
- 1 hr ago
"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" சினிமா பாணியில் பதிலளித்த பாஜக எம்பி! என்னதான் ஆச்சு இவர்களுக்கு..!
- 4 hrs ago
புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்
Don't Miss!
- Finance
40,000 வரை சென்செக்ஸ் சரியலாம்..! உஷார் மக்களே உஷார்..!
- Movies
ஜடா படம் எப்படி இருக்கு.. என்ன சொல்லுது டிவிட்டர் விமர்சனம்?
- News
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ஆவணங்களை ஒப்படைக்க... பொன்.மாணிக்கவேலுக்கு ஹைகோர்ட் உத்தரவு
- Technology
இனி குழப்பம் வேண்டாம்? ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட் போன்கள்
- Sports
ரசிகர்களின் கிண்டலை பந்த் எதிர்கொள்ளட்டும்... அப்போதுதான் வழிக்கு வருவார்.. கங்குலி அட்வைஸ்!
- Education
JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு!
- Lifestyle
உடலுறவில் ஈடுபட்ட பிறகு தம்பதிகள் கண்டிப்பாக செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரை குறைவான விலையில் வாங்க இதுவே சரியான நேரம்... ஏன் தெரியுமா?
ஆச்சரியமான விலையில் களமிறங்கியுள்ள இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரை நீங்கள் வாங்குவதற்கு இதுவே சரியான நேரமாக இருக்கும். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஹெக்டர் காரை எம்ஜி நிறுவனம் கடந்த ஜூன் 27ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்தது. எஸ்யூவி ரக காரான ஹெக்டர்தான் இந்தியாவில் எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள முதல் கார் ஆகும். எம்ஜி ஹெக்டர் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர்.

எம்ஜி ஹெக்டர் காரில், பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட், டர்போ பெட்ரோல் மற்றும் டர்போ டீசல் என மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மூன்று இன்ஜின்களுமே தற்போதைய நிலையில் பிஎஸ்4 (BS4) மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில்தான் உள்ளன. ஆனால் இந்தியாவில் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ்6 விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.

எனவே 2020ம் ஆண்டின் தொடக்கம் முதல், இந்த இன்ஜின்களின் பிஎஸ்6 வெர்ஷன்கள் வழங்கப்படும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அனேகமாக எம்ஜி ஹெக்டர் காரின் பிஎஸ்6 இன்ஜின்கள் வரும் ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய பிஎஸ்4 வெர்ஷன் இன்ஜின்களை காட்டிலும், பிஎஸ்6 வெர்ஷன் இன்ஜின்கள் எரிபொருள் சிக்கனத்தில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் பவர் மற்றும் டார்க் அவுட்புட்கள் மாற்றம் செய்யப்படாமல் அப்படியேதான் இருக்கும் என தெரிகிறது. எனினும் டீசல் இன்ஜினின் ரீஃபைன்மெண்ட் லெவல் உயரலாம்.

எம்ஜி ஹெக்டர் கார் தனது டீசல் இன்ஜினை ஜீப் காம்பஸ் காருடன் பகிர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் எம்ஜி ஹெக்டர் காரின் பிஎஸ்6 வேரியண்ட்கள் தற்போது இருப்பதை காட்டிலும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே எம்ஜி ஹெக்டர் காரை வாங்க நீங்கள் திட்டமிட்டு கொண்டிருந்தால், அதற்கு இதுவே சரியான தருணம்.

இதன் மூலம் கணிசமான தொகையை நீங்கள் மிச்சம் பிடிக்கலாம். எம்ஜி ஹெக்டர் காருக்கு தற்போது 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. குறிப்பிட்ட சில வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் 7 மாதங்களை தொட்டுள்ளது. இனி எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் இன்ஜின்களுக்கு மீண்டும் வருவோம்.

எம்ஜி ஹெக்டர் காரில் வழங்கப்பட்டுள்ள 1.5 லிட்டர்-4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெய்ன் உடனும் இந்த இன்ஜின் கிடைக்கிறது. அதே சமயம் ஹெக்டர் காரின் 2 லிட்டர்-4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது.

இந்த மூன்று இன்ஜின்களுடனும் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம்தான் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. எம்ஜி நிறுவனத்திற்கு ஆல் வீல் டிரைவ் சிஸ்டமை வழங்கும் எண்ணம் இருப்பதாக தெரியவில்லை. தற்போது எம்ஜி ஹெக்டர் காரின் 5 சீட்டர் வெர்ஷன்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 7 சீட்டர் வெர்ஷனை 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி நிறுவனம் ஹெக்டர் காருக்கு மிகவும் சவாலான விலையை நிர்ணயம் செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. எம்ஜி ஹெக்டர் காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை 12.18 லட்ச ரூபாய் மட்டுமே. டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை 16.88 லட்ச ரூபாய். இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். எம்ஜி ஹெக்டர் காரில் பல்வேறு அதிநவீன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், ஸ்மார்ட் கார் வசதிகளுடன் கூடிய 10.4 இன்ச் டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் யூனிட், பனரோமிக் சன் ரூஃப், 360 டிகிரி கேமரா உள்ளிட்டவை குறிப்பிடத்தகுந்தவை. இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என்ற பெருமையுடன் எம்ஜி ஹெக்டர் களம் கண்டிருப்பதும் கவனித்தக்கது. எனவே எம்ஜி ஹெக்டர் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக திகழ்கிறது.