இந்தியர்களுக்கு அடுத்த ஆச்சரியம்.. டாடா காரை விட மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்ஜி ஹெக்டர் காரின் விலை விபரங்கள் கசிந்துள்ளன. இது வாடிக்கையாளர்களின் ஆவலை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.

இந்தியர்களுக்கு அடுத்த ஆச்சரியம்.. டாடா காரை விட மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி (MG - Morris Garages) மோட்டார் நிறுவனம், ஹெக்டர் காரை இன்னும் ஒரு சில தினங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. ஹெக்டர் கார்தான் இந்திய மார்க்கெட்டில் எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்களுக்கு அடுத்த ஆச்சரியம்.. டாடா காரை விட மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்

எஸ்யூவி ரக காரான எம்ஜி ஹெக்டர், இந்திய மார்க்கெட்டில் வரும் ஜூன் 27ம் தேதி முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடன் வெகு விரைவில், எம்ஜி நிறுவனத்தின் 70 டீலர்ஷிப்கள் மூலம் ஹெக்டர் காரின் டெலிவரி தொடங்கப்படவுள்ளது.

இந்தியர்களுக்கு அடுத்த ஆச்சரியம்.. டாடா காரை விட மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்

முன்னதாக எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காருக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டது. எம்ஜி ஹெக்டர் காரை வாங்க விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ரூ.50 ஆயிரம் முன்பணம் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம்.

இந்தியர்களுக்கு அடுத்த ஆச்சரியம்.. டாடா காரை விட மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்

பல்வேறு அதிநவீன வசதிகளுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதால், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி கார் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என மொத்தம் 4 வேரியண்ட்களில் எம்ஜி ஹெக்டர் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்தியர்களுக்கு அடுத்த ஆச்சரியம்.. டாடா காரை விட மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்

ஒயிட், சில்வர், பிளாக், பர்கண்டி ரெட் மற்றும் பிளாஸ் ரெட் உள்ளிட்ட வண்ணங்களில் எம்ஜி ஹெக்டர் கார் கிடைக்கும். எம்ஜி ஹெக்டர் காரில், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது.

இந்தியர்களுக்கு அடுத்த ஆச்சரியம்.. டாடா காரை விட மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 143 பிஎஸ் பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். அத்துடன் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரில் கிடைக்கும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 173 பிஎஸ் பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உற்பத்தி செய்யக்கூடியது.

இந்தியர்களுக்கு அடுத்த ஆச்சரியம்.. டாடா காரை விட மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்

ஹெக்டர் காரின் பெட்ரோல் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆட்டோமெட்டிக் ட்யூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. அதே சமயம் டீசல் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது.

இந்தியர்களுக்கு அடுத்த ஆச்சரியம்.. டாடா காரை விட மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்

இதுதவிர பெட்ரோல் இன்ஜின் உடன் 48V மைல்டு ஹைப்ரிட் டெக்னாலஜியும் வழங்கப்படவுள்ளது. அத்துடன் பல்வேறு அதிநவீன வசதிகளும் எம்ஜி ஹெக்டர் காரில் வழங்கப்படவுள்ளன. எனவேதான் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியர்களுக்கு அடுத்த ஆச்சரியம்.. டாடா காரை விட மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவுடன், டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட எஸ்யூவி கார்களுடன் எம்ஜி ஹெக்டர் போட்டியிடும். இதில் டாடா ஹாரியர்தான், எம்ஜி ஹெக்டர் காரின் முக்கியமான போட்டியாளர்.

இந்தியர்களுக்கு அடுத்த ஆச்சரியம்.. டாடா காரை விட மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்

தற்போது டாடா ஹாரியர் எஸ்யூவி, ரூ.13 லட்சம் முதல் ரூ.16.67 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த சூழலில் எம்ஜி ஹெக்டர் காரின் விலை இதை விட குறைவாக இருக்கலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியர்களுக்கு அடுத்த ஆச்சரியம்.. டாடா காரை விட மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்

வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக எம்ஜி நிறுவனம் ஹெக்டர் காருக்கு மிகவும் சவாலான விலையை நிர்ணயம் செய்யவுள்ளது. இதன்படி பார்த்தால், ஹெக்டர் காரின் பெட்ரோல் பேஸ் வேரியண்ட்டின் விலை 11.9 லட்ச ரூபாயாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தியர்களுக்கு அடுத்த ஆச்சரியம்.. டாடா காரை விட மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்

அதே நேரத்தில் டீசல் பேஸ் வேரியண்ட்டின் விலை 12.9 லட்ச ரூபாயாக இருக்கலாம் என தெரிகிறது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் ஹெக்டர் காரின் டாப் வேரியண்ட்களின் விலை, டாடா ஹாரியரின் டாப் வேரியண்ட்டின் விலையை விட அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்களுக்கு அடுத்த ஆச்சரியம்.. டாடா காரை விட மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்

இதுகுறித்து ரஸ்லேன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் எம்ஜி ஹெக்டர் காரின் விலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. அதிகாரப்பூர்வ விலை வரும் ஜூன் 27ம் தேதியன்றுதான் அறிவிக்கப்படவுள்ளது.

இந்தியர்களுக்கு அடுத்த ஆச்சரியம்.. டாடா காரை விட மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்

எம்ஜி ஹெக்டர் காரில், பனரோமிக் சன் ரூஃப், ட்யூயல் டோன் மெஷின் கட் அலாய் வீல்கள், ஆட்டோமெட்டிக் ட்யூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன், ஹைப்ரிட் ஆப்ஷன், அதிக சக்தி வாய்ந்த டீசல் இன்ஜின் ஆகியவை வழங்கப்படவுள்ளன.

இந்தியர்களுக்கு அடுத்த ஆச்சரியம்.. டாடா காரை விட மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்

அதே சமயம் டாடா ஹாரியர் கார் ஒரே ஒரு டீசல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கிறது. பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் தற்போதைக்கு இல்லை. அதேபோல் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனும் கூட டாடா ஹாரியர் காரில் கிடையாது.

இந்தியர்களுக்கு அடுத்த ஆச்சரியம்.. டாடா காரை விட மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்

மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் மட்டுமே டாடா ஹாரியர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் டாடா ஹாரியர் காரின் விற்பனையில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி தாக்கத்தை உண்டாக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியர்களுக்கு அடுத்த ஆச்சரியம்.. டாடா காரை விட மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்

முன்னதாக ஹாரியர் காரில் பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை வழங்க டாடா முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன. எனவே ஹாரியரில், வெகு விரைவில் பெட்ரோல் இன்ஜின், ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதிகளை எதிர்பார்க்கலாம்.

இந்தியர்களுக்கு அடுத்த ஆச்சரியம்.. டாடா காரை விட மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்

இந்திய மார்க்கெட்டில் சமீப காலமாக ஓரளவிற்கு மலிவான விலையில் பல்வேறு கார்கள் வரிசையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஹூண்டாய் வெனியூ ஓர் நல்ல உதாரணம்.

இந்தியர்களுக்கு அடுத்த ஆச்சரியம்.. டாடா காரை விட மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்

இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். பல்வேறு அதிநவீன வசதிகளை கொண்டுள்ள வெனியூ காரின் ஆரம்ப விலை வெறும் 6.50 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) மட்டுமே. இதன் காரணமாக ஹூண்டாய் வெனியூ காருக்கு இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியர்களுக்கு அடுத்த ஆச்சரியம்.. டாடா காரை விட மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்

இதே போன்றதொரு வரவேற்பு எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் டீலர்ஷிப்களின் எண்ணிக்கை குறைவு, இந்திய மார்க்கெட்டிற்கு எம்ஜி புதிய பிராண்டு உள்ளிட்ட விஷயங்கள் ஹெக்டர் காருக்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தலாம்.

Most Read Articles
English summary
MG Hector SUV Expected Price: May Be Cheaper Than Tata Harrier. Read in Tamil
Story first published: Saturday, June 22, 2019, 11:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X