போட்டியாளர்களை தவிடுபொடியாக்கும் எம்ஜி ஹெக்டர்... சிக்கலான நேரத்தில் களமிறங்கி விற்பனையில் அசத்தல்

எம்ஜி ஹெக்டர் கார் விற்பனையில் அசத்தி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

போட்டியாளர்களை தவிடுபொடியாக்கும் எம்ஜி ஹெக்டர்... சிக்கலான நேரத்தில் களமிறங்கி விற்பனையில் அசத்தல்

இந்திய ஆட்டோமொபைல் துறையில் கடந்த சில மாதங்களாக மந்தநிலை நிலவி வருகிறது. குறிப்பாக கார் விற்பனை தொடர்ந்து கடும் வீழ்ச்சியை சந்தித்து கொண்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு சவாலான நேரத்தில் இந்திய கார் மார்க்கெட்டில் கெத்தாக கால் பதித்தது எம்ஜி மோட்டார். இது இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனமாகும்.

போட்டியாளர்களை தவிடுபொடியாக்கும் எம்ஜி ஹெக்டர்... சிக்கலான நேரத்தில் களமிறங்கி விற்பனையில் அசத்தல்

இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ஹெக்டர். எஸ்யூவி ரக காரான ஹெக்டர் கடந்த ஜூன் 27ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் இதுவே. அத்துடன் இந்த காருக்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் மிக சவாலான விலையை நிர்ணயம் செய்துள்ளது.

போட்டியாளர்களை தவிடுபொடியாக்கும் எம்ஜி ஹெக்டர்... சிக்கலான நேரத்தில் களமிறங்கி விற்பனையில் அசத்தல்

இதுபோன்ற காரணங்களால் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் வரவேற்பை வாரி வருகின்றனர். எனவே எம்ஜி ஹெக்டர் காரின் விற்பனை அமோகமாக உள்ளது. ஹெக்டர் காரின் விற்பனை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் 1,508 ஹெக்டர் கார்களை எம்ஜி நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

போட்டியாளர்களை தவிடுபொடியாக்கும் எம்ஜி ஹெக்டர்... சிக்கலான நேரத்தில் களமிறங்கி விற்பனையில் அசத்தல்

அதன்பின் வந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த விற்பனை எண்ணிக்கை 2,018 யூனிட்களாக அதிகரித்தது. கடந்த மாதம் அதாவது செப்டம்பரில், எம்ஜி நிறுவனம் மொத்தம் 2,608 ஹெக்டர் கார்களை விற்பனை செய்துள்ளது. விற்பனைக்கு அறிமுகமானது முதல் எம்ஜி ஹெக்டர் கார் பதிவு செய்த அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை இதுதான்.

போட்டியாளர்களை தவிடுபொடியாக்கும் எம்ஜி ஹெக்டர்... சிக்கலான நேரத்தில் களமிறங்கி விற்பனையில் அசத்தல்

டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் ஆகியவைதான் எம்ஜி ஹெக்டர் காரின் போட்டியாளர்கள். இதில், டாடா ஹாரியர் காரின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை 2,500 யூனிட்கள். டாடா ஹாரியர் கார் இந்த சிறப்பான மாதாந்திர விற்பனை எண்ணிக்கையை கடந்த மார்ச் மாதம் பதிவு செய்திருந்தது.

போட்டியாளர்களை தவிடுபொடியாக்கும் எம்ஜி ஹெக்டர்... சிக்கலான நேரத்தில் களமிறங்கி விற்பனையில் அசத்தல்

ஆனால் தற்போது எம்ஜி ஹெக்டர் கார் அதனை வீழ்த்தியுள்ளது. இதனிடையே ஹெக்டர் காரின் மூன்று வரிசை வேரியண்ட்டை எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார் அடுத்த 6 முதல் 8 மாதங்களுக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்களை தவிடுபொடியாக்கும் எம்ஜி ஹெக்டர்... சிக்கலான நேரத்தில் களமிறங்கி விற்பனையில் அசத்தல்

எனினும் அதற்கு முன்னதாக இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காரை எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி களமிறக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 20 லட்ச ரூபாய் என்ற விலையில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்களை தவிடுபொடியாக்கும் எம்ஜி ஹெக்டர்... சிக்கலான நேரத்தில் களமிறங்கி விற்பனையில் அசத்தல்

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக இங்கிலாந்தில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அங்கு டெலிவரியும் கூட தொடங்கப்பட்டு விட்டது. இந்தியாவை பொறுத்தவரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகமான ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் போட்டியிடும்.

Most Read Articles
English summary
MG Hector SUV September 2019 Sales. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X