எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியீடு!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இந்தியாவில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஸ்யூவியின் பிரத்யேக படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியீடு!

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் மாடலாக ஹெக்டர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவி 4 விதமான வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியீடு!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் ஃபியட் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கொடுக்கப்பட இருக்கிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியீடு!

பெட்ரோல் மாடலில் மைல்டு ஹைப்ரிட் மாடலும் அறிமுகம் செய்யப்ப்ட இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் டாப் வேரியண்ட்டாக மைல்டு ஹைப்ரிட் மாடல் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியீடு!

டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியீடு!

மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் மாடலானது லிட்டருக்கு 14.16 கிமீ மைலேஜையும், டிசிடி ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 13.94 கிமீ மைலேஜையும் வழங்கும். டீசல் மாடல் லிட்டருக்கு 17.41 கிமீ மைலேஜை வழங்கும்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியீடு!

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி 4,655 மிமீ நீளமும், 1,835 மிமீ அகலமும், 1,760 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இறுக்கிறது. இந்த எஸ்யூவியின் வீல் பேஸ் 2,750 மிமீ ஆக உள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 192 மிமீ ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியீடு!

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியானது சீனாவில் விற்பனையில் இருக்கும் செயிக் குழுமத்தின் பாவ்ஜுன் 530 எஸ்யூவியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடல். இதனால், வடிவமைப்பில் இரு மாடல்களுக்கும் அதிக ஒற்றுமைகள் இருக்கின்றன. ஹெட்லைட் அமைப்பானது சற்று கீழே இறக்கமாக கொடுக்கப்பட்டு இருப்பது இதன் தனித்துவமாக இருக்கிறது. எல்இடி பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியீடு!

இந்த எஸ்யூவியில் 10.4 அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சிம் கார்டு வசதியுடன் வருவதால் நேரடி இணைய வசதியை இந்த இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பெற்றிருக்கும். இதனால், பல்வேறு செயலிகளை நேரடியாக இயக்கும் வாய்ப்பு இருக்கிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியீடு!

இந்த காரில் சப் ஊஃபர் மற்றும் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, சாய்மான வசதியுடன் பின்புற இருக்கை, மூடு லைட்டிங் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியீடு!

டாப் வேரியண்ட்டில் அதிகபட்சமாக 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஹோல்டு கன்ட்ரோல் என எக்கச்சக்கமான பாதுகாப்பு நுட்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியீடு!

எம்ஜி ஹெக்டருக்கு டீலர்களில் ஜூன் முதல் வாரத்தில் துவங்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் டெலிவிரி பணிகள் துவங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
Chinese-owned British carmaker MG Motor has unveiled its first ever vehicle for India in the form of the Hector SUV. The MG Hector will go up against the likes of the Tata Harrier, Mahindra XUV500 and the Jeep Compass in India and will be offered in four variants: Style, Super, Smart and Sharp. Bookings for the MG Hector will start in early June, with deliveries set to commence later in the month.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X