கழுதையை வைத்து சர்ச்சையை ஏற்படுத்திய ஹெக்டர் உரிமையாளர்... அடிபணிந்த எம்ஜி..!

எம்ஜி நிறுவனம், தன்மீது ஏற்பட்ட கரும் புள்ளியை நீக்குவதற்காக வாடிக்கையாளரின் எந்தவிதமான கோரிக்கையையும் ஏற்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கழுதையை வைத்து சர்ச்சையை ஏற்படுத்திய ஹெக்டர் உரிமையாளர்... அடிபணிந்த எம்ஜி..!

இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் எம்ஜி நிறுவனம், இந்தியாவிற்கான முதல் மாடலை கடந்த ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஹெக்டர் என்ற பெயரில் களமிறங்கிய இந்த எஸ்யூவி ரக காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

இந்த அதீத வரவேற்பிற்கு ஹெக்டர் காரில் இடம்பெற்றிருக்கும் அதிநவீன வசதியும், நடுத்தரமான விலையுமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

கழுதையை வைத்து சர்ச்சையை ஏற்படுத்திய ஹெக்டர் உரிமையாளர்... அடிபணிந்த எம்ஜி..!

ஆகையால், நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்புகளைக் காட்டிலும் நல்ல விற்பனை வளர்ச்சியை இந்தியர்கள் மத்தியில் ஹெக்டர் பெற்றது.

ஆனால், அண்மையில் இதன் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் வகையில், இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அந்த வீடியோவில், கழுதை ஒன்று புத்தம் புதிய ஹெக்டர் காரை இழுத்துச் செல்வதுபோன்ற காட்சிகள் அடங்கியிருந்தன.

கழுதையை வைத்து சர்ச்சையை ஏற்படுத்திய ஹெக்டர் உரிமையாளர்... அடிபணிந்த எம்ஜி..!

இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் பகுதியில் அரங்கேறியிருந்தது. இதே பகுதியைச் சேர்ந்தவர் விஷால் பஞ்சோலி, இவர் அண்மையில்தான் புத்தம் புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரக காரை வாங்கியுள்ளார்.

இந்த கார் புத்தம் புதிது என்றாலும் அதன் கிளட்ச் உள்ளிட்ட சில கருவிகள் மட்டும் சரியாக வேலை செய்யாமல் முரண்டு பிடிக்க ஆரம்பித்துள்ளன. இதுகுறித்து, ஹெக்டரை வாங்கிய டீலரிடமே சென்று பஞ்சோலி முறையிட்டுள்ளார்.

கழுதையை வைத்து சர்ச்சையை ஏற்படுத்திய ஹெக்டர் உரிமையாளர்... அடிபணிந்த எம்ஜி..!

ஆனால், இந்த புகாருக்கு சரியான தீர்வு வழங்கப்படவில்லை. மாறாக, பஞ்சோலியிடம் டீலர்கள் கடுமையாக நடந்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.

இதனால், அதிருப்தி அடைந்த பஞ்சோலி, டீலரிடம் தன்னுடைய எதிர்ப்பை காட்டும் நோக்கில் முற்றிலும் வித்தியாசமான ஓர் போராட்டத்தில் களமிறங்கினார். அந்தவகையில், கழுதையைக் கொண்டு புத்தம் புதிய ஹெக்டர் காரை இழுத்துச் சென்று போராட்டத்தை மேற்கொண்டார்.

கழுதையை வைத்து சர்ச்சையை ஏற்படுத்திய ஹெக்டர் உரிமையாளர்... அடிபணிந்த எம்ஜி..!

இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவர் இணையத்தின் மூலம் வைரலாக்கினார். இந்த வீடியோ கடந்த 13ம் தேதி யுடியூப்-இல் பதிவேற்றப்பட்டநிலையில், தற்போது 3 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து அது வைரலாகி வருகின்றது.

இந்நிலையில், இந்த விவகாரம் எம்ஜி நிறுவனத்தின் கவனத்திற்கும் சென்றது.

அந்தவகையில், முன்னதாக நடந்த சம்பவங்கள் அனைத்திற்கும் மறுப்பு தெரிவித்த எம்ஜி நிறுவனம், தற்போது பஞ்சோலியை சமாதானம் செய்யும் விதமாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் பழுது ஏற்பட்டதாக கூறப்படும் எம்ஜி ஹெக்டர் காரை திரும்பப் பெற்றுக் கொண்டு 100 சதவீத ரீபேமெண்ட் அல்லது ரீபிளேஸ்மெண்ட் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

கழுதையை வைத்து சர்ச்சையை ஏற்படுத்திய ஹெக்டர் உரிமையாளர்... அடிபணிந்த எம்ஜி..!

இதுகுறித்து, சந்தோஷ் நாயர் என்பவரின் டுவிட்டுக்கு பதிலளிக்கும் விதமாக ராஜீவ் சபா ஓர் பதிவை பகிர்ந்துள்ளார். அதில், "ஐயா, நாங்கள் அந்த வாடிக்கையாளரின் காரில் உள்ள அனைத்து கோளாறுகளையும் சரி செய்துவிட்டோம். இருப்பினும் அவர் அதில் திருப்தி அடையவில்லை. இதற்காக, நாங்கள் 100 சதவீத பணத்தை திரும்பியளித்தல் அல்லது வாகனத்தை மாற்றி தருவது போன்ற சலுகைகளை அறிவித்துள்ளோம். இதுதவிர வேறு என்ன நாங்கள் செய்ய வேண்டும் என நீங்களே ஓர் ஆலோசனை வழங்குங்கள்" என கூறியுள்ளார்.

கழுதையை வைத்து சர்ச்சையை ஏற்படுத்திய ஹெக்டர் உரிமையாளர்... அடிபணிந்த எம்ஜி..!

ராஜீவ் சபா, எம்ஜி நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார்.

ஹெக்டர் கார் இந்தியாவில் டாடா ஹாரியர், கியா செல்டோஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி 500, ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட கார்களுக்கு கடுமையான போட்டியை கொடுத்து வருகின்றது.

கழுதையை வைத்து சர்ச்சையை ஏற்படுத்திய ஹெக்டர் உரிமையாளர்... அடிபணிந்த எம்ஜி..!

கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி விற்பனைக்கு அறிமுகமான இந்த கார் தற்போது (நவம்பர்) வரை 12,909 யூனிட்டுகளுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளது.

இந்த காரின் ஆரம்பநிலை மாடலுக்கு ரூ. 12.48 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் டாப் மாடலின் விலை ரூ. 17.28 லட்சம் ஆகும். இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

Most Read Articles
English summary
MG Motor India Responds To Hector-Donkey Controversy. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X