ஆச்சரிய விலையில் இன்டர்நெட் கார்... இந்தியாவில் பிரிட்டீஷ் நிறுவனம் செய்யவுள்ள அடுத்த அதிரடி இதுதான்

குறைவான விலையில் இன்டர்நெட் காரை அறிமுகம் செய்து இந்தியாவில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய எம்ஜி நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆச்சரிய விலையில் இன்டர்நெட் கார்... இந்தியாவில் பிரிட்டீஷ் நிறுவனம் செய்யவுள்ள அடுத்த அதிரடி இதுதான்

இங்கிலாந்தை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று எம்ஜி. எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போது இந்திய மார்க்கெட்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ஹெக்டர் கார் நேற்றுதான் (ஜூன் 27) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது 5 சீட்டர் பிரீமியம் எஸ்யூவி ரக கார் ஆகும்.

ஆச்சரிய விலையில் இன்டர்நெட் கார்... இந்தியாவில் பிரிட்டீஷ் நிறுவனம் செய்யவுள்ள அடுத்த அதிரடி இதுதான்

ஹெக்டர் காரில் பல்வேறு அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என்ற பெருமையுடன் ஹெக்டர் விற்பனைக்கு வந்துள்ளது. ஹெக்டர் காரின் ஆரம்ப விலையை வெறும் 12.18 லட்ச ரூபாயாக (எக்ஸ் ஷோரூம்) நிர்ணயித்து எம்ஜி நிறுவனம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக எம்ஜி ஹெக்டர் கருதப்படுகிறது.

ஆச்சரிய விலையில் இன்டர்நெட் கார்... இந்தியாவில் பிரிட்டீஷ் நிறுவனம் செய்யவுள்ள அடுத்த அதிரடி இதுதான்

எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எம்ஜி ஹெக்டர் காருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஹெக்டர் காருக்கான புக்கிங்கை எம்ஜி நிறுவனம் கடந்த ஜூன் 4ம் தேதிதான் தொடங்கியது. ஆனால் வெறும் 23 நாட்களில், எம்ஜி ஹெக்டர் காருக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. எம்ஜி நிறுவனம் இந்தியாவில் தனது இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கியுள்ளது என்றே சொல்லலாம்.

ஆச்சரிய விலையில் இன்டர்நெட் கார்... இந்தியாவில் பிரிட்டீஷ் நிறுவனம் செய்யவுள்ள அடுத்த அதிரடி இதுதான்

இந்திய மார்க்கெட்டில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் அடுத்த திட்டங்கள் என்ன? என்ற கேள்வி தற்போது அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இன்னும் 4 எஸ்யூவி ரக கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆச்சரிய விலையில் இன்டர்நெட் கார்... இந்தியாவில் பிரிட்டீஷ் நிறுவனம் செய்யவுள்ள அடுத்த அதிரடி இதுதான்

இதனை வைத்து பார்க்கையில் முதல் சில ஆண்டுகளில் எம்ஜி நிறுவனத்தின் யுக்திகள் இந்தியாவின் எஸ்யூவி செக்மெண்ட்டை கைப்பற்றுவதாகதான் இருக்கும் என்பது தெளிவாகிறது. பொதுவாக இந்திய வாடிக்கையாளர்கள் எஸ்யூவி ரக கார்களை அதிகம் விரும்புகின்றனர். எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு எஸ்யூவி செக்மெண்ட்டில் புதுப்புது தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன.

ஆச்சரிய விலையில் இன்டர்நெட் கார்... இந்தியாவில் பிரிட்டீஷ் நிறுவனம் செய்யவுள்ள அடுத்த அதிரடி இதுதான்

இந்த வரிசையில் எம்ஜி நிறுவனமும் எஸ்யூவி செக்மெண்ட்டில் பல்வேறு தயாரிப்புகளை களமிறக்கி, அதில் வாகை சூட விரும்புகிறது. இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ஹெக்டரும் எஸ்யூவி ரக கார்தான். எம்ஜி ஹெக்டர் காரை நாங்கள் ஓட்டி பார்த்தோம். அதன் சிறப்பான செயல்திறன்கள் எங்களை வெகுவாக கவர்ந்தது. ஹெக்டர் காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூவை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஆச்சரிய விலையில் இன்டர்நெட் கார்... இந்தியாவில் பிரிட்டீஷ் நிறுவனம் செய்யவுள்ள அடுத்த அதிரடி இதுதான்

ஆனால் எம்ஜி நிறுவனம் இதனுடன் நின்று விடப்போவதில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இன்னும் 4 எஸ்யூவி கார்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ETAuto செய்தி வெளியிட்டுள்ளது. இதில், முதலாவதாக விற்பனைக்கு வரவுள்ள கார் எம்ஜி இஇஸட்எஸ் (MG eZS). இது எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் ஆகும்.

ஆச்சரிய விலையில் இன்டர்நெட் கார்... இந்தியாவில் பிரிட்டீஷ் நிறுவனம் செய்யவுள்ள அடுத்த அதிரடி இதுதான்

தற்போது சீனாவில் விற்பனையில் உள்ள இஸட்எஸ் எஸ்யூவி காரின் அடிப்படையில்தான் இது உருவாக்கப்பட்டுள்ளது. எம்ஜி இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்போது கேமரா கண்களில் சிக்கியுள்ளது. அதன் ஸ்பை படங்களும் வெளியாயின. அத்துடன் இந்த காரின் உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்பட்டு விட்டது என்பதை காட்டும் வீடியோவையும் கூட எம்ஜி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.

ஆச்சரிய விலையில் இன்டர்நெட் கார்... இந்தியாவில் பிரிட்டீஷ் நிறுவனம் செய்யவுள்ள அடுத்த அதிரடி இதுதான்

எம்ஜி இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய மார்க்கெட்டில் நடப்பாண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு ஹெக்டர் காரின் 7 சீட்டர் வெர்ஷனை எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. ஆனால் கூடுதலாக 2 இருக்கைகள் சேர்க்கப்படுவதால் ஹெக்டர் காரின் அளவு மற்றும் டிரைவ்டிரெய்னில் மாற்றங்கள் செய்யப்படுமா? என்பது தற்போதைக்கு தெரியவில்லை.

ஆச்சரிய விலையில் இன்டர்நெட் கார்... இந்தியாவில் பிரிட்டீஷ் நிறுவனம் செய்யவுள்ள அடுத்த அதிரடி இதுதான்

இதன்பிறகு காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்றை எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. ஹெக்டருக்கு கீழாக நிலை நிறுத்தப்படும் இந்த எஸ்யூவி, விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எம்ஜி நிறுவனத்தின் இந்த காம்பேக்ட் எஸ்யூவி குறித்த தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகிவில்லை.

ஆச்சரிய விலையில் இன்டர்நெட் கார்... இந்தியாவில் பிரிட்டீஷ் நிறுவனம் செய்யவுள்ள அடுத்த அதிரடி இதுதான்

மேற்கூறிய அனைத்து கார்களும் குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இந்திய மார்க்கெட்டில் முதல் 5 எஸ்யூவி கார்களை களமிறக்கிய பிறகு, ஹேட்ச்பேக் ரக கார் ஒன்றை எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles
English summary
MG Motor India To Launch Four SUVs Over The Next Two Years — Includes eZS & 7-Seat Hector. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X