எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முன்திட்டப் பணிகள் தீவிரம்!

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான சார்ஜர் அமைக்கும் பணியை இ-சார்ஜ்பேஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்காக, இரு நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முன்திட்டப் பணிகள் தீவிரம்!

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவி மூலமாக இந்தியர்கள் மத்தியில் வெகுவாக பிரபலமடைந்துவிட்டது. இதைத்தொடர்ந்து, பேட்டரியில் இயங்கும் இ-இசட்எஸ் காரை இரண்டாவது மாடலாக இந்தியாவில் களமிறக்க ஆயத்தமாகி வருகிறது. வரும் டிசம்பர் மாதம் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முன்திட்டப் பணிகள் தீவிரம்!

மேலும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையையும் அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.அதன்படி, இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை வாங்கும் வாடிக்கையாளர்களின் வீடுகளில் சார்ஜர் அமைத்து தரும் பணியை செய்து தருவதற்காக இசார்ஜ்பேஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முன்திட்டப் பணிகள் தீவிரம்!

டெல்லியை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான இசார்ஜ்பேஸ் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூலமாக இந்தியாவில் குறிப்பிடத்தக்க வர்த்தக முன்னேற்றத்தை பெறுவதற்கான வாய்ப்பை இந்த ஒப்பந்தம் மூலமாக பெற்றுள்ளது. எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் இது சிறந்ததாக அமையும்.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முன்திட்டப் பணிகள் தீவிரம்!

எம்ஜி நிறுவனத்தின் புதிய இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் அறிமுகமாகி விற்பனையில் சக்கைப் போடு போடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு இது நேரடி போட்டியாக இருக்கும்.

MOST READ: சாலையில் சாதாரணமாக பைக் ஓட்டி வரும் இந்த பிரபலம் யாரென்று தெரிகிறதா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முன்திட்டப் பணிகள் தீவிரம்!

இந்த புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் இருக்கும் 52.5kW திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. முழுமையாக சார்ஜ் செய்தால் 350 முதல் 400 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

MOST READ: விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா? இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முன்திட்டப் பணிகள் தீவிரம்!

புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முக்கிய பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள ஆலையில் ஒருங்கிணைத்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும். இந்த புதிய கார் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட இருப்பதால், விலை சவாலாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது.

MOST READ: இது புதுசா இருக்கே! டிராஃபிக்கில் தப்பிக்க துப்பாக்கியை நீட்டிய மோடி கட்சிக்காரர்... வைரல் வீடியோ!

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முன்திட்டப் பணிகள் தீவிரம்!

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான ஃபாஸ்ட் சார்ஜர் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக ஃபோர்ட்டம் மற்றும் டெல்ட்டா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுடன் எம்ஜி மோட்டார்ஸ் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
MG Motor India has announced its partnership with eChargeBays, to provide household infrastructure to charge their electric vehicle. The collaboration comes ahead of the MG eZS electric SUV scheduled to launch for Indian market in December 2019.
Story first published: Wednesday, October 16, 2019, 17:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X