எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் எப்போது?

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங் எப்போது துவங்க உள்ளது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இதுபற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் எப்போது?

ஹெக்டர் எஸ்யூவி கார் மூலமாக இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட்ட எம்ஜி மோட்டார் நிறுவனம் அடுத்து இரண்டாவது மாடலாக இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை களமிறக்க உள்ளது. தற்போது இந்த கார் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் எப்போது?

இந்த நிலையில், வரும் ஆண்டு துவக்கத்தில் எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக டிசம்பர் வாக்கில் இந்த கார் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் எப்போது?

இந்த நிலையில், புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கான முன்பதிவும் இந்த ஆண்டு இறுதியில் துவங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விலையை குறைவாக நிர்ணயிக்கும் விதத்தில், எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்து இந்தியாவிலேயே அசெம்பிள் செய்வதற்கு எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் எப்போது?

மேலும், ஹூண்டாய் கோனா காரைவிட விலையை குறைவாக நிர்ணயிக்கும் திட்டமும் எம்ஜி மோட்டார் வசம் உள்ளது. அதாவது, ரூ.22 லட்சம் என்ற விலையில் புதிய எம்ஜி இ-இசட்எஸ் காரை அறிமுகப்படுத்தும் திட்டமும் எம்ஜி வசம் இருப்பதாக தெரிகிறது.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் எப்போது?

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் போலவே, அனைத்து வசதிகளும் நிரம்பிய ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே இந்த காரை விற்பனை செய்வதற்கும் எம்ஜி திட்டமிட்டுள்ளது. மேலும், டெல்லி உள்ளடக்கிய வடமத்திய பிராந்திய பகுதியிலும், மும்பை, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் ஆமதாபாத் ஆகிய நகரங்களில் மட்டும் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் எப்போது?

இதன் பிறகே நாட்டின் பிற நகரங்களில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் வாய்ப்புகள் உள்ளன. எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் பெட்ரோல், ஹைப்ரிட் மாடல்களிலும் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் எப்போது?

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் 44.5kWh திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 335 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். நடைமுறையில் 250 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் எப்போது?

இந்த காரின் பேட்டரியை சாதாரண வீட்டு சார்ஜர் மூலமாக மின்னேற்றம் செய்வதற்கு 7 மணி நேரம் பிடிக்கும். 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக மின்னேற்றம் செய்தால் 40 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Source: Autocarindia

Most Read Articles
English summary
According to report, MG eZS electric SUV bookings will start from later this year and it will be launched in January 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X