எம்ஜி இசட்எஸ் எலெட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்கும் தேதி விபரம்

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி இசட்எஸ் எலெட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்கும் தேதி விபரம்

எம்ஜி நிறுவனம் ஹெக்டர் கார் மூலமாக இந்திய மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க அளவு பிரபல்யத்தை பெற்றிருக்கிறது. ஹெக்டர் காருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், இரண்டாவது கார் மாடலை இந்தியாவில் களமிறக்க உள்ளது. அதுவும் எலெக்ட்ரிக் கார் மாடல் என்பதுதான் ஹைலைட்டான விஷயமாக இருக்கிறது.

எம்ஜி இசட்எஸ் எலெட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்கும் தேதி விபரம்

அண்மையில் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்ட எம்ஜி இசட்எஸ் என்ற அந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ள இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு வரும் 21ந் தேதி முதல் முன்பதிவு துவங்கப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

எம்ஜி இசட்எஸ் எலெட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்கும் தேதி விபரம்

ரூ.50,000 முன்பணத்துடன் இந்த காருக்கு நாளை மறுதினம் முதல் முன்பதிவு துவங்கப்பட இருக்கிறது. இந்த கார் முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு குஜராத் மாநிலம், ஹலோல் பகுதியில் உள்ள செயிக் குழுமத்தின் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. எனவே, விலை மிகச் சரியாக நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி இசட்எஸ் எலெட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்கும் தேதி விபரம்

புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஹூண்டாய் க்ரெட்டா போன்ற கார்களுக்கு இணையான பரிமாணத்தை பெற்றிருக்கிறது. அதாவது, 4,314 மிமீ நீளமும், 1,809 மிமீ அகலமும், 1,620 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இந்த காரின் வீல் பேஸ் நீளம் 2,579 மிமீ ஆக உள்ளது.

எம்ஜி இசட்எஸ் எலெட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்கும் தேதி விபரம்

இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றிருக்கும். கேபினில் கருப்பு மற்றும் சில்வர் ஆக்சஸெரீகளும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கும். ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதியும் அளிக்கப்படுகிறது.

எம்ஜி இசட்எஸ் எலெட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்கும் தேதி விபரம்

யுஎஸ்பி மொபைல் சார்ஜர், புளுடூத் வசதி, ரியர் வியூ கேமரா ஆகியவற்றையும் இந்த கார் பெர்றிருக்கிறது. இந்த காரில் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்போர்ட்டியான ஃபீலை தரும் ஸ்டீயரிங் வீல் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இருக்கும் கண்ணாடி கூரை அமைப்பானது 90 சதவீதம் வரை பரப்பை பெற்றிருக்கிறது. ஐ-ஸ்மார்ட் கனெக்டெட் தொழில்நுட்பமும், புதிய காற்று சுத்திகரிப்பு வசதியும் இதில் உண்டு.

எம்ஜி இசட்எஸ் எலெட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்கும் தேதி விபரம்

புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் 44.5 kWh திறன் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 340 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். 50 kW டிசி சார்ஜர் மூலமாக 40 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு பேட்டரியில் சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

எம்ஜி இசட்எஸ் எலெட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்கும் தேதி விபரம்

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் மின் மோட்டார் அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 8 வினாடிகளில் எட்டிவிடும். இந்த காருக்கு ஓடிஏ என்ற தொழில்நுட்ப முறையில் நேரடியாக அப்டேட் வழங்கும் வசதியும் உள்ளது.

எம்ஜி இசட்எஸ் எலெட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்கும் தேதி விபரம்

இந்தியாவில் இதுவரை ஒரு லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக வைத்து இந்த கார் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. ரூ.22 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Via - NDTV Auto

Most Read Articles
English summary
MG Motor is planning to start pre bookings for the ZS electric SUV in India from December 21 for an amount of ₹ 50,000.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X