இரு வேரியண்ட்களில் அறிமுகமாகும் எம்ஜி இசட்எஸ் இவி மாடல்... எதை வாங்குவது சிறந்தது?

எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது அடுத்த அறிமுக மாடலாக இசட்எஸ் இவி என்கிற எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த அனைத்து விதங்களிலும் தீவிரமாக தயாராகி வருகிறது. இதனால் இந்த காரின் விற்பனை அடுத்த ஜனவரி மாதம் முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு வேரியண்ட்களில் அறிமுகமாகும் எம்ஜி இசட்எஸ் இவி மாடல்... எதை வாங்குவது சிறந்தது?

எம்ஜி நிறுவனம் இந்த எலக்ட்ரிக் காரை எக்ஸைட், எக்ஸ்க்ளுசிவ் என்ற இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யவுள்ளது. இந்த இரு வேரியண்ட்களிலும் பல நவீன தொழிற்நுட்பங்களை இந்நிறுவனம் பொருத்தியிருக்கும் என நம்பலாம்.

இரு வேரியண்ட்களில் அறிமுகமாகும் எம்ஜி இசட்எஸ் இவி மாடல்... எதை வாங்குவது சிறந்தது?

இந்த இரு வேரியண்ட்களிலும் ஒரே 44.5 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 3-பேஸ் நிரத்தர காந்த எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டாரானது 141 பிஎச்பி பவரையும் 353 என்எம் டார்க் திறனையும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் வெளிப்படுத்தவல்லது.

இரு வேரியண்ட்களில் அறிமுகமாகும் எம்ஜி இசட்எஸ் இவி மாடல்... எதை வாங்குவது சிறந்தது?

இதன் பேட்டரி சிங்கிள் சார்ஜில் சுமார் 340கிமீ தூரம் வரை இயங்கும் திறன் கொண்டது. மேலும் இசட் எஸ் இவி காரில் விரைவான சார்ஜிங் தொழிற்நுட்பம் நிலையாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த விரைவான சார்ஜிங் மூலம் வெறும் 60 வினாடிகளில் இந்த காரின் பேட்டரியை 0 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் ஏற்ற முடியும்.

இரு வேரியண்ட்களில் அறிமுகமாகும் எம்ஜி இசட்எஸ் இவி மாடல்... எதை வாங்குவது சிறந்தது?

நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திற்கு எம்ஜி இசட்எஸ் இவி காரை டெஸ்ட் ட்ரைவ் செய்யும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. இந்த டெஸ்ட் ட்ரைவ் மூலம் கிடைத்த தகவல்களை ஏற்கனவே தளத்தில் பதிவிட்டுள்ளோம். அவற்றை மீண்டும் காண கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

புதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

இரு வேரியண்ட்களில் அறிமுகமாகும் எம்ஜி இசட்எஸ் இவி மாடல்... எதை வாங்குவது சிறந்தது?

எம்ஜி இசட்எஸ் இவி காரில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை வேரியண்ட் வாரியாக இனி பார்ப்போம்...

இசட்எஸ் இவி எக்ஸைட்

 • 17-இன்ச் அலாய் சக்கரங்கள்
 • எல்இடி டிஆர்எல் உடன் உள்ள ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ்
 • புகையினால் மாசு அடையாத லோகோ
 • மின்சாரம் மூலம் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம்-கள்
 • ஓஆர்விஎம்-களுடன் ஒருங்கிணைந்த டர்ன் சிக்னல்கள்
 • லெதரால் மூடப்பட்ட ஸ்டேரிங் சக்கரம்
 • காரை இயக்க மற்றும் நிறுத்த புஷ்-பட்டன்
 • 3.5 இன்ச் திரை மூலம் பல தகவல்களை வழங்கும் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்
 • 60:40 என்கிற விகிதத்தில் பிரிக்கப்பட்ட பின்புற இருக்கைகள்
 • கைனெடிக் எனர்ஜி ரிகோவரி சிஸ்டம் (கேர்ஸ்)
 • 6 காற்றுப்பைகள்
 • இபிடியுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம்
 • ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட்
 • டயரின் அழுத்தத்தை அளவிடும் கருவி
 • ஐசோஃபிக்ஸ் குழந்தைகளுக்கான இருக்கை
 • எலக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக்

Most Read:2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

இரு வேரியண்ட்களில் அறிமுகமாகும் எம்ஜி இசட்எஸ் இவி மாடல்... எதை வாங்குவது சிறந்தது?

இசட்எஸ் இவி எக்ஸ்க்ளுசிவ்

இந்த வேரியண்ட்டில் கூடுதலாக,

 • 8.0 இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம்
 • பனோராமிக் சன்ரூஃப்
 • மின்சாரம் மூலமாக 6 விதங்களில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை
 • ஐ-ஸ்மார்ட் 2.0 இணைப்பு தொழிற்நுட்பம்
 • ஹீட்டட் ஓஆர்விஎம்-கள்
 • பிஎம் 2.5 ஃபில்டர் உடன் உள்ள காற்று தூய்மையாக்கி

Most Read:மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

இரு வேரியண்ட்களில் அறிமுகமாகும் எம்ஜி இசட்எஸ் இவி மாடல்... எதை வாங்குவது சிறந்தது?

இந்த சிறப்பம்சங்கள் மூலம் இசட்எஸ் இவி காரின் டாப் வேரியண்ட் எக்ஸ்க்ளுசிவ் தான் என்பது தெரிய வருகிறது. இந்த இரு வேரியண்ட்களின் விலை பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் ரூ.50,000 மூலம் இசட்எஸ் இவி கார்களுக்கான முன்பதிவை இணையத்தள மூலமாகவும் இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்கள் மூலமாகவும் எம்ஜி நிறுவனம் ஏற்று வருகிறது.

Most Read:லாட்ஜி மாடலை தொடர்ந்து டீசல் வேரியண்ட்களின் தயாரிப்பையும் நிறுத்தும் ரெனால்ட் நிறுவனம்...

இரு வேரியண்ட்களில் அறிமுகமாகும் எம்ஜி இசட்எஸ் இவி மாடல்... எதை வாங்குவது சிறந்தது?

இந்த எலக்ட்ரிக் கார் அறிமுகமான பின் டெல்லி, மும்பை, பெங்களூர், அகமதாபாத், ஹைதராபாத் என 5 நகரங்களில் மட்டும் தான் முதற்கட்டமாக விற்பனையாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இசட்எஸ் இவி மாடல் அறிமுகமான பிறகு தற்சமயம் இந்தியாவில் ஒரே ஒரு எலக்ட்ரிக் காராக கொடிக்கட்டி பறக்கின்ற ஹூண்டாய் கோனா இவி காருடன் போட்டியிடவுள்ளது.

Most Read Articles

English summary
MG ZS EV Variants In Detail: Which Is The Best Model To Buy?
Story first published: Thursday, December 26, 2019, 19:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X