மினி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் அறிமுகம்!

காம்பேக்ட் ரக சொகுசு கார் தயாரிப்பில் பிரபலமான இங்கிலாந்தை சேர்ந்த மினி கார் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை வெளியிட்டு இருக்கிறது. இந்த காரின் முழுமையான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மினி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் அறிமுகம்!

மாசு உமிழ்வு விதிகள் கடுமையாகி வருவதால், அனைத்து கார் நிறுவனங்களும் மின்சார கார் மாடல்களை அறிமுகம் செய்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், மினி கார் நிறுவனம் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மினி கூப்பர் எஸ் அடிப்படையிலான எலெக்ட்ரிக் கார் மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.

மினி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் அறிமுகம்!

மினி கூப்பர் எஸ்இ என்ற பெயரில் வெளியிடப்பட்டு இருக்கும் இந்த காரின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 235 முதல் 270 கிமீ தூரம் வரை பயணிக்கும். அதாவது, ஹோண்டா இ, வாக்ஸ்ஹால் கார்ஸா இ மற்றும் பீஜோ இ-208 ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

மினி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் அறிமுகம்!

புதிய மினி கூப்பர் எஸ்இ காரில் பிஎம்டபிள்யூ ஐ3 எலெக்ட்ரிக் காரின் பேட்டரி மற்றும் மின்மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 32.6 kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இருக்கும் மின் மோட்டார் 0 - 100 கிமீ வேகத்தை 7.3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 150 கிமீ வேகம் வரை செல்லும்.

மினி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் அறிமுகம்!

இந்த காரின் பேடடரியை 50 kW சார்ஜர் மூலமாக 35 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்ற முடியும். 11 kW சார்ஜர் மூலமாக 150 முதல் 210 நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

மினி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் அறிமுகம்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

புதிய மினி கூப்பர் எஸ்இ பேட்டரி காரில் இருக்கும் மின் மோட்டார் 184 எச்பி பவரையும், 270 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். முன்சக்கரங்களுக்கு மின் மோட்டார் பவர் செலுத்தப்படுகிறதுத.

மினி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் அறிமுகம்!

முதல்முறையாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்புடன் இந்த கார் வர இருக்கிறது. காரின் வேகம், ரேஞ்ச், சார்ஜ் நிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும். இந்த காரில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மினி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் அறிமுகம்!

இந்த காரில் எல்இடி விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், க்ரூஸ் கன்ட்ரோல், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சேட்டிலைட் நேவிகேஷன், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகளை பெற்றிருக்கும். மொத்தம் மூன்று விதமான வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

மினி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் அறிமுகம்!

விலை உயர்ந்த வேரியண்ட்டில் 8.8 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, பானரோமிக் சன்ரூஃப், அடாப்டிவ் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.

மினி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் அறிமுகம்!

வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் புதிய மினி கூப்பர் எஸ்இ எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. நவம்பரில் உற்பத்தி துவங்கப்பட இருக்கிறது. அமெரிக்கா மற்றும் சீன கார் சந்தைகளை குறிவைத்து வர்த்தகத்தை துவங்க திட்டமிட்டுள்ளது மினி கார் நிறுவனம். இந்திய மதிப்பில் ரூ.50 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #மினி #mini
English summary
Mini has unveiled of its first mass-production electric car, Cooper SE and it will make public debut at the Frankfurt motor show in September.
Story first published: Wednesday, July 10, 2019, 13:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X