புதிய மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

மினி கன்ட்ரிமேன் பிரிமீயம் காரின் பிளாக் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

மினி கூப்பர் எஸ் ஜான் கூப்பர் ஒர்க்ஸ் என்ற அதிக சிறப்பம்சங்கள் கொண்ட வேரியண்ட்டின் அடிப்படையில் இந்த புதிய மாடல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, முடிந்தவரை கருப்பு வண்ண பாகங்களுடன் இந்த கார் மெருகேற்றப்பட்டு பிளாக் எடிசன் என்ற பெயரில் வந்துள்ளது.

புதிய மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

இந்த புதிய மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிசன் மாடலுக்கு ரூ.42.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண கூப்பர் எஸ் ஜான்கூப்பர் ஒர்க்ஸ் மாடலைவிட ரூ.1 லட்சம் கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

பண்டிகை காலத்தில் கார் வாங்குவோரை கவரும் வகையில் இந்த தனித்துவமான அம்சங்கள் கொண்ட சிறப்பு பதிப்பு மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது மினி கார் நிறுவனம். மொத்தமாகவே 24 யூனிட்டுகள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

புதிய மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

இந்த லிமிடேட் எடிசன் மாடலில் புதிய கருப்பு வண்ண க்ரில் அமைப்பு, கார்பன் ஃபைபர் போன்று பூச்சுடன் கூடிய சைடு மிரர்கள், பியானோ பிளாக் வண்ணத்தில் ஹெட்லைட் க்ளஸ்ட்டர் மற்றும் டெயில் லைட் க்ளஸ்ட்டரில் விசேஷ பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது. பின்புற கதவில் கன்ட்ரிமேன் முத்திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

இந்த காரின் பானட்டில் வரிக்கோடுகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க விஷயம். அத்துடன், ரூஃப் ரெயில்கள் கூட கருப்பு வண்ணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த காரில் 18 அங்குல ஜான்கூப்பர் ஒர்க்ஸ் அலாய் வீல்கள், ரன் ஃப்ளாட் டயர்கள் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.

புதிய மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

வெளிப்புறத்தில் எந்தளவுக்கு கருப்பு வண்ண பாகங்கள் மூலமாக தனித்துவமான அழகுடன் மெருகேற்றப்பட்டு இருக்கிறதோ, அதே அளவுக்கு உட்புறத்திலும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த காரில் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

MOST READ: துணை முதல்வர் வந்த கார் பத்திதான் இன்னைக்கு ஊரே பேசுது... ஏன் தெரியுமா?

புதிய மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

இந்த காரின் உட்புறமும் முழுக்க முழுக்க கருப்பு வண்ண இன்டீரியராக கொடுக்கப்பட்டுள்ளது. ஜான்கூப்பர் ஒர்க்ஸ் ஸ்டீயரிங் வீல் மற்றும் ஏரோடைனமிக்ஸை அதிகரிக்க உதவும் விசேஷ ஏரோ கிட் ஆக்சஸெரீகள், இருக்கைகளுக்கு மெமரி ஃபங்ஷன் வசதி ஆகியவையும் உள்ளன.

MOST READ: தமிழ் நடிகையிடம் கை வரிசையை காட்டிய பிரபல கொள்ளை கும்பல்... மீண்டும் களமிறங்கியதால் மக்கள் அச்சம்...

புதிய மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

புதிய மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிசன் மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 189 பிஎச்பி பவரையும் 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் பேடில் ஷிஃப்ட் வசதியும் உள்ளது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 7.5 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டது. லிட்டருக்கு 14.41 கிமீ மைலேஜ் தரும் என மினி நிறுவனம் தெரிவிக்கிறது.

MOST READ: சாதி கருத்துக்களை வாகனங்களில் எழுத இனி பயப்படணும்... போலீஸ் காட்டிய அதிரடி என்னவென்று தெரியுமா?

புதிய மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

புதிய மினி கன்ட்ரிமேன் கார் மாடலானது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ, ஆடி க்யூ3, வால்வோ எக்ஸ்சி40 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார்களுக்கு இணையான ரகத்திலும், விலையிலும் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த லிமிடேட் எடிசன் மாடல் சினிமா நட்சத்திரங்களை வெகுவாக கவரும் வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #மினி #mini
English summary
British primium car maker, Mini has launched a new black edition of the Countryman car in India. It is based on Mini cooper S JSW car and priced at ₹ 42.40 lakh (ex-showroom).
Story first published: Wednesday, October 30, 2019, 10:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X