புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் சொகுசு செடான் கார் மாடல் 3 சீரிஸ் கார். கால மாற்றத்திற்கு தக்கவாறு இந்த கார் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், அதிக சிறப்பம்சங்களுடன் ஏழாம் தலைமுறை மாடல் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் (G20) உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், 7 சீரிஸ், எக்ஸ்-3, எக்ஸ்-5 மற்றும் எக்ஸ்-7 ஆகிய எஸ்யூவி மாடல்கள் உருவாக்கப்பட்ட புதிய சிஎல்ஏஆர் மோடுலர் பிளாட்ஃபார்மில்தான் புதிய 3 சீரிஸ் காரும் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ கார் இந்தியாவில் இரண்டு எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கார் ஸ்போர்ட், லக்சுரி லைன் மற்றும் எம் ஸ்போர்ட் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பெட்ரோல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போ எஞ்சின் அதிகபட்சமாக 255 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 188 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இரண்டு எஞ்சின்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் காரின் டிசைன் அம்சங்கள் 3 சீரிஸ் காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பெரிய அளவிலான கிட்னி க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், எல் வடிவிலான பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பாரம்பரியமான ஹோமிஸ்டர் கின்க் என்ற விசேஷமான வடிவமைப்புடன் கூடிய சி பில்லர் அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் 4,709 மிமீ நீளமும், 1,827 மிமீ அகலமும், 1,442 மிமீ உயரமும் கொண்டுள்ளது. வீல் பேஸ் 2,851 மிமீ ஆக உள்ளது. பழைய மாடலைவிட நீளத்தில் 76 மிமீ வரையிலும், அகலத்தில் 16 மிமீ வரையிலும், உயரத்தில் 1 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வீல் பேஸ் 41 மிமீ அதிகரித்துள்ளது.

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

அதிக உறுதிமிக்க இலகு பாகங்கள் மூலமாக, புதிய காரின் எடை 55 கிலோ வரை குறைந்துள்ளது. இந்த காரில் 50:50 என்ற விகிதத்தில் எடை விரவும் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவத்திலும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் வசதி, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இன்டெலிஜென்ட் பெர்சனல் அசிஸ்டென்ட் ஆகிய தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கிறது. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், கீ லெஸ் என்ட்ரி ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் ரூ.41.4 லட்சம் முதல் ரூ.47.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ், ஆடி ஏ4, ஜாகுவார் எக்ஸ்இ மற்றும் வால்வோ எஸ்-60 ஆகிய சொகுசு கார்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
German carmaker BMW has launched the all-new 3 Series in the Indian market today.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X