அசத்தலான அம்சங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சொகுசு காரின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை விரிவாகப் பார்க்கலாம்.

அசத்தலான அம்சங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மிக உயரிய வகை சொகுசு செடான் கார் மாடலாக 7 சீரிஸ் விற்பனை செய்யப்படுகிறது. உலக அளவில் இந்த காருக்கு பெரிய அளவிலான வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட மாடல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

அசத்தலான அம்சங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட இந்த புதிய மாடல் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் ஸ்டான்டர்டு மற்றும் லாங் வீல் பேஸ் என்ற இரண்டு மாடல்களில் வந்துள்ளது.

அசத்தலான அம்சங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

தவிரவும், மூன்று பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் தேர்வில் கிடைக்கும். இதில் ஒரு பெட்ரோல் மாடல் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டதாகவும், அதீத எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தலான அம்சங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில் பெரிய கிட்னி க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பம்பர் அமைப்பும் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 18 அங்குலம் முதல் 20 அங்குலம் வரையிலான அலாய் சக்கரங்கள் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்யும் வாய்ப்புள்ளது. ரன் பிளாட் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அசத்தலான அம்சங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்த காரில் எல்இடி மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில்லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. பனோரமீக் சன்ரூஃப், ஸ்கை லான்ச் என்ற 15,000 ஒளி உமிழ் விசேஷ விளக்குகளுடன் கூடிய அலங்காரம், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

அசத்தலான அம்சங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஐ-டிரைவ் செயலியில் இயங்குகிறது. இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் 32 ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. கை அசைவு மூலமாக கட்டுப்படுத்தும் கெஸ்ச்சர் கன்ட்ரோல் வசதியும் உள்ளது. இந்த காரின் பின் இருக்கை பயணிகளுக்காக இரண்டு டிவி திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அசத்தலான அம்சங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு காரில் டியூவல், சைடு மற்றும் ஹெட் ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டைனமிக் பிரேக்கிங் லைட்டுகள், கார்னரிங் பிரேக்கிங் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு பங்ஷன் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

அசத்தலான அம்சங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் 4 எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். பிஎம்டபிள்யூ 740Le DPE Signature என்ற பெட்ரோல் மாடலில் 340 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

அசத்தலான அம்சங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த மாடலின் 745Le xDrive என்று குறிப்பிடப்படும் பிளக் இன் ஹைப்ரிட் மாடலில் 6 சிலிண்டர் அமைப்புடயை 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 286 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

அசத்தலான அம்சங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

இதில் இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் 113 பிஎச்பி பவரையும், 265 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மொத்தமாக இந்த கார் 394 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 5.8 வினாடிகளில் எட்டிவிடும். மேலும், ஹைப்ரிட் கார்களுக்கான கணக்கீடுகளின்படி, 39.5 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அசத்தலான அம்சங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் கொடுக்கப்படும் மூன்றாவது மாடலானது 760 Li XDrive என்ற விலை உயர்ந்த மாடலில் 6.6 லிட்டர் வி-12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 585 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 0 - 100 கிமீ வேகத்தை 3.8 வினாடிகளில் எட்டிவிடும்.

அசத்தலான அம்சங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

டீசல் எஞ்சின் மாடலில் இருக்கும் 3.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 265 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அனைத்து எஞ்சின் தேர்வுகளிலுமே 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

அசத்தலான அம்சங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் ரூ.1.23 கோடி முதல் ரூ.2.43 கோடி வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முழுமையான விலை விபரங்களை கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

Variants Price
730Ld DPE Rs 1.22 crore
730Ld DPE Signature Rs 1.31 crore
730Ld M Sport Rs 1.34 crore
740Li DPE Signature Rs 1.34 crore
745Le xDrive Rs 1.65 crore
M 760Li xDrive Rs 2.42 crore
Most Read Articles
English summary
BMW India has launched its latest-generation 7 Series in the Indian market. The new 2019 BMW 7 Series is offered with a starting price of Rs 1.22 Crore, ex-showroom (India). The BMW 7 Series will be available in six variants: 740 Ld DPE, 740Ld DPE Signature, 740 Ld M Sport, 740 Li DPE Signature, 745 Le xDrive and M 760 Li xDrive.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X