புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 சொகுசு ரக எஸ்யூவி கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முழுமையான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த ஆண்டு துவக்கத்தில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவி கார் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மாடல் உருவாக்கப்பட்ட அதே சிஎல்ஏஆர் என்ற புதிய கட்டமைப்பு கொள்கையில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த நிலையில், இந்த புதிய மாடல் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ்-5 எஸ்யூவிக்கு மேலான ரகத்தில், 7 சீட்டர் மாடலாக வந்துள்ளது. இந்த புதிய மாடல் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவியானது XDrive40i என்ற பெட்ரோல் மாடலிலும், XDrive30d என்ற டீசல் எஞ்சின் தேர்விலும் வந்துள்ளது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 335 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

டீசல் மாடலில் இருக்கும் 3.0 லிட்டர் டர்போ எஞ்சின் அதிகபட்சமாக 265 எச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இரண்டு எஞ்சின்களுமே 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். இந்த காரில் நிலப்பரப்புக்கு தக்கவாறான டிரைவிங் மோடுகள் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

பெரிய அளவிலான கிட்னி க்ரில் அமைப்பு, வலிமையான அலாய் வீல்கள், இரட்டை சைலென்சர் குழல்கள் மற்றும் முரட்டுத்தனமான பம்பர்களுடன் மிக பிரம்மாண்டமான தோரணையுடன் கவர்கிறது புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவி கார்.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த புதிய எஸ்யூவியில் 12.3 அங்குலத்திலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை பெற்றிருக்கிறது. பிஎம்டபிள்யூ லேசர் லைட் தொழில்நுட்பமும் இதன் மதிப்பை உயர்த்துகிறது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

பனோரமிக் சன்ரூஃப், 5 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, டிவி திரைகள், 6 வண்ணங்களில் ஒளிரும் ஆம்பியன்ட் லைட்டிங், சர்ரவுண்ட் வியூ கேமரா, ரிவர்ஸ் அசிஸ்ட், 16 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், ஆன்போர்டு வைஃபை, வயர்லெஸ் சார்ஜர் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த காரில் அடாப்டிவ் 2 ஆக்சில் ஏர் சஸ்பென்ஷன், டைனமிக் டிராக்ஷன் கன்ட்ரோல், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிசென்ட் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிஃபரன்ஷியல் பிரேக் சிஸ்டம் என ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் உள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவியானது மினரல் ஒயிட், ஃபைட்டோனிக் புளூ, டெர்ரா பிரவுன்ட், பிளாக் சஃபையர், டெர்ரா பிரவுன், ஆர்டிக் கிரே பிரில்லியண்ட் எஃபெக்ட், கார்பன் பிளாக் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். எக்ஸ்டிரைவர்40ஐ பெட்ரோல் மாடலானது அல்பைன் ஒயிட், மெட்டாலிக் வெர்மான்ட் பிரான்ஸ் மற்றும் சோபிஸ்ட்டோ க்ரே பிரில்லியண்ட் எஃபெக்ட் ஆகிய வண்ணங்களிலும் கிடைக்கும்.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவியின் எக்ஸ்டிரைவ்40ஐ மாடலானது இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எக்ஸ்டிரைவ்30டீ மாடலானது இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. இரண்டு மாடல்களுமே ரூ.98.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
BMW has Launched new X7 luxury SUV In India today At Rs 98.90 Lakh.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X