புதிய ஹோண்டா சிட்டி கார் அறிமுகம் குறித்து புதிய தகவல்கள்

வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ள, புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் அறிமுக விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக விபரம்!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி கார் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக விளங்குகிறது. வாடிக்கையாளர்களின் அந்தஸ்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் தேர்வில் முதன்மை பெறும் வகையில், முற்றிலும் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக விபரம்!

ஐந்தாம் தலைமுறையை எட்டி இருக்கும், இந்த கார் தற்போது மிக தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்த கார் அடுத்த மாதம் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதலாவாதாக, தாய்லாந்து நாட்டில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக விபரம்!

இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் இந்திய வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக விபரம்!

தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார், நீள, அகலத்தில் சற்று பெரிய கார் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், உட்புறத்தில் மிகச் சிறப்பான இடவசதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக விபரம்!

அடுத்து, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில்லைட்டுகள், அசத்தலான டிசைனில் அலாய் வீல்கள் உள்ளிட்டவற்றுடன் வர இருக்கிறது. புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் இந்த காரின் முக்கிய அம்சங்களாக இடம்பெர இருக்கின்றன.

MOST READ: 2வது சுற்றிலும் மிரட்டும் எம்ஜி ஹெக்டர்... வெறும் பத்தே நாட்களில் குவிந்த புக்கிங் எவ்வளவு தெரியுமா?

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக விபரம்!

தற்போதைய மாடல் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த நிலையில், புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

MOST READ: விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா? இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக விபரம்!

இந்த பெட்ரோல் ஹைப்ரிட் மாடலானது மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கலாம். டீசல் மாடல் குறித்து இப்போதைக்கு எந்த தகவலும் இல்லை. இதன் தற்போதைய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தி பின்னர் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

MOST READ: விமானங்களின் வெள்ளை நிற ரகசியம்... வேறு வண்ணத்தில் பெயிண்ட் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக விபரம்!

ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் ரூ.9.81 லட்சம் முதல் ரூ.14.16 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மாடல் அதிக பிரிமீயம் அம்சங்களுடன் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக வர இருப்பதால், விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படும்.

Source: Cardekho

Most Read Articles

English summary
New generation Honda City Car is expected to unveil in Thailand next month. It will be launched in India by early next year.
Story first published: Saturday, October 12, 2019, 18:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X