புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா இந்திய அறிமுக விபரம்!

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கார் அறிமுகம் செய்யப்படுவது குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா இந்திய அறிமுக விபரம்!

இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் மாபெரும் வரவேற்பை பெற்ற மாடல் ஹூண்டாய் க்ரெட்டா கார். சொகுசு கார் போன்ற டிசைன் மற்றும் வசதிகள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வருகிறது. இந்த நிலையில், போட்டியாளர்களை ஒரு கை பார்க்கும் வகையில் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா இந்திய அறிமுக விபரம்!

அண்மையில் சீனாவில் ஹூண்டாய் ஐஎக்ஸ்25 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் விரைவில் இந்தியாவில் புதிய தலைமுறை க்ரெட்டா எஸ்யூவியாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதாவது, இரண்டாம் தலைமுறை மாடலாக இந்தியாவில் வர இருக்கிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா இந்திய அறிமுக விபரம்!

இந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து, மார்ச் மாதம் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா இந்திய அறிமுக விபரம்!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் அதிக சிறப்பம்சங்களுடன் வர இருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், பூவிதழ் வடிவிலான அலாய் வீல்கள் என வெளிப்புறம் மிக அசத்தலான அம்சங்களை பெற்றிருக்கும். வடிவமைப்பிலும் பல முக்கிய மாற்றங்களை சந்தித்துள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா இந்திய அறிமுக விபரம்!

புதிய கியா செல்டோஸ் காரில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள்தான் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரிலும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

MOST READ: 11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்த சூப்பர் கண்ணாடி... இதில் இருக்கும் ஆச்சரியம் என்னவென்று தெரியுமா?

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா இந்திய அறிமுக விபரம்!

தற்போதைய மாடலைவிட பல கூடுதல் அம்சங்களுடன் வருகிறது. இன்டர்நெட் வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், காற்று சுத்திகரிப்பு வசதி, பவர் அட்ஜெஸ்ட இருக்கைகள், சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

MOST READ: வெறும் ரூ. 2.83 லட்சம்தான்: நானோவிற்கு அடுத்த மலிவு விலை ரெனோ கார்... ஆனால் அதீத திறனுடையது!

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா இந்திய அறிமுக விபரம்!

இந்த காரில் 10.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். ஹூண்டாய் புளூலிங்க் செயலி மூலமாக ஏராளமான தொழில்நுட்ப மற்றும் கட்டுப்பாட்டு வசதிகளை பெறும் வாய்ப்பை வழங்கும்.

MOST READ: ஹீரோ, ஹோண்டா நிறுவனங்கள் ஆச்சரியம்: மகிழ்ச்சியின் உச்சத்தில் சுஸுகி... சோதனையிலும் ஓர் சாதனை!

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா இந்திய அறிமுக விபரம்!

மொத்தத்தில் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் ஏராளமான சிறப்பு தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய ஹூண்டாய் க்ரெட்டா களத்தில் இறங்க உள்ளது. கியா செல்டோஸ், எம்ஜி ஹெக்டர், ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட மாடல்களுக்கு கடும் போட்டியை தரும்.

Source: NDTV Auto

Most Read Articles

English summary
According to media report, New Generation Hyundai Creta SUV will be unvieled in India at Delhi Auto Expo, which will be held february, 2020.
Story first published: Thursday, October 3, 2019, 11:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X