புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் இந்திய அறிமுக தேதி விபரம்!

புதிய தலைமுறை ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் இந்திய அறிமுக தேதி விபரம்!

ஜீப் ரேங்லர் எஸ்யூவி ஓவர்லேண்ட், சஹாரா, ரூபிகன் என பல வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நான்காம் தலைமுறை மாடலின் அனைத்து வேரியண்ட்டுகளுமே இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட ஸ்பை படங்க்ள் வெளியாகி இருப்பதால், இந்த வேரியண்ட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் இந்திய அறிமுக தேதி விபரம்!

இதில், ரூபிகன் என்ற முழுமையான ஆஃப்ரோடு வேரியண்ட்டானது மோயப் என்ற பெயரில் இந்தியாவில் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் இந்திய அறிமுக தேதி விபரம்!

அமெரிக்காவில் புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியானது 4 எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதாவது, 270 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 285 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 3.6 லிட்டடர் வி6 பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் இந்திய அறிமுக தேதி விபரம்!

அதேபோன்று, இரண்டு டீசல் எஞ்சின் தேர்வுகள் உள்ளன. முதலாவது டீசல் தேர்வில் 197 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 240 பிஎச்பி பவரையும், 570 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் மற்றொரு டீசல் மாடலிலும் கிடைக்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கிறது.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் இந்திய அறிமுக தேதி விபரம்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. இதில், ரூபிகன் வேரியண்ட்டில் ஹெவி டியூட்டி ஆக்சில்கள் மற்றும் டிஃபரன்ஷியல்கள் கொடுக்கப்படுகின்றன. இந்தியாவில் கொடுக்கப்பட இருக்கும் எஞ்சின் தேர்வுகள் உள்ளிட்ட விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் இந்திய அறிமுக தேதி விபரம்!

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவி லேடர் ஃப்ரேம் சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இது இலகுவானதாக இருப்பதுடன், அதிக உறுதித்தன்மை மிக்க ஸ்டீல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது மிகச் சிறந்த ஆஃப்ரோடு மாடலாக இருக்கும் வகையில், 277 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் பெற்றிருக்கும்.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் இந்திய அறிமுக தேதி விபரம்!

இந்த எஸ்யூவி 30 அங்குல ஆழம் வரையிலான நீர் நிலைகளை கடந்து செல்லும் தகவமைப்புகளை பெற்றிருக்கிறது. ஜீப் நிறுவனத்தின் சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பாரம்பரிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு புதிய தலைமுறை மாடலாக வர இருக்கிறது.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் இந்திய அறிமுக தேதி விபரம்!

அடுத்த மாதம் 9ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனையில் உள்ள மாடல் ரூ.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் நிலையில், சற்று கூடுதலான விலையில் புதிய மாடல் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
The new generation Jeep Wrangler is scheduled to be launched in India on August 9, 2019.
Story first published: Wednesday, July 31, 2019, 17:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X