புதிய லெக்சஸ் ஆர்எக்ஸ்450எச்எல் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்

பல்வேறு கூடுதல் தொழில்நுட்ப அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள புதிய லெக்சஸ் ஆர்எக்ஸ்450எச்எல் சொகுசு ரக எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய லெக்சஸ் ஆர்எக்ஸ்450எச்எல் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்

2020 மாடலாக வந்துள்ள புதிய லெக்சஸ் ஆர்எக்ஸ்450எச்எல் கார் நான்காம் தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக மூன்றாவது வரிசை இருக்கை சேர்க்கப்பட்டு 7 சீட்டர் சொகுசு எஸ்யூவி மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய லெக்சஸ் ஆர்எக்ஸ்450எச்எல் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்

புதிய லெக்சஸ் ஆர்எக்ஸ்450 எச்எல் சொகுசு எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. தானியங்கி முறையில் செயல்படும் ஹை பீம் ஹெட்லைட் வசதியும் குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது. அலைபோல ஒளிரும் இண்டிகேட்டர்களும் இதன் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது.

புதிய லெக்சஸ் ஆர்எக்ஸ்450எச்எல் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்

முகப்பு க்ரில் அமைப்பும், பம்பர் அமைப்பும் மிரட்டலாக காட்சி தருகின்றன. பக்கவாட்டில் புதிய கேரக்டர் லைன் கொடுக்கப்பட்டு காரின் வசீகரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் வலிமையான தோற்றத்தை தரும் அலாய் வீல்கள் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள இடம்பெற்றுள்ளன.

புதிய லெக்சஸ் ஆர்எக்ஸ்450எச்எல் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்

புதிய லெக்சஸ் ஆர்எக்ஸ்450 எச்எல் கார் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டாரில் இயங்கும் ஹைப்ரிட் வகை மாடலாக வந்துள்ளது. இதில் 3.5 லிட்டர் வி6 எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் ஆகியவை முறையே டியூவல் விவிடி-ஐ மற்றும் டி-4எஸ் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் அட்கின்சன் தொழில்நுட்ப முறையில் இயங்குகின்றன.

புதிய லெக்சஸ் ஆர்எக்ஸ்450எச்எல் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்

இந்த காரின் மிக முக்கிய அம்சம், இதன் எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கும் பேட்டரியை தனியாக சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. காரின் இயக்கத்தின்போதே சார்ஜ் செய்யும் தொழில்நுட்ப வசதியுடன் வந்துள்ளது. இந்த ஹைப்ரிட் வகை சொகுசு கார் மிக குறைவான மாசு உமிழ்வு மற்றும் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் சிறப்பம்சம் பெற்றிருக்கிறது.

MOST READ: ஷோரூமில் இருந்து விலை உயர்ந்த பைக்கை நைசாக லவட்டி சென்ற பலே கொள்ளையன்... எப்படி தெரியுமா?

புதிய லெக்சஸ் ஆர்எக்ஸ்450எச்எல் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்

புதிய லெக்சஸ் ஆர்எக்ஸ்450 எச்எல் எஸ்யூவியின் சஸ்பென்ஷன் புதிய வடிவமைப்புடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதிர்வுகளை குறைத்து சொகுசான பயணத்தை வழங்கும் அதே நேரத்தில், சிறப்பான நிலைத்தன்மையையும் வழங்கும்.

MOST READ: எடப்பாடியின் கைராசி... ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் விற்பனை ஆஹா, ஓஹோ!

புதிய லெக்சஸ் ஆர்எக்ஸ்450எச்எல் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்

இதன் இருக்கைகளும் மிகச் சிறப்பானதாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனை தியேட்டர் ஸ்டைல் இருக்கைகள் என்று லெக்சஸ் குறிப்பிடுகிறது. இந்த காரில் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை மட்டுமின்றி, ஆப்பிள் சிரி மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் வசதிகளையும் சப்போர்ட் செய்யும்.

MOST READ: ஆபத்தில் உதவிய ஜீப்: போலீஸார் செய்த நன்றி கடனால் உரிமையாளர் அதிர்ச்சி!

புதிய லெக்சஸ் ஆர்எக்ஸ்450எச்எல் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்

புதிய லெக்சஸ் ஆர்எக்ஸ்450 எச்எல் சொகுசு எஸ்யூவி கார் ரூ.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ, ஆடி க்யூ7, பிஎம்டபிள்யூ எக்ஸ்7 மற்றும் ரேஞ்ச்ரோவர் வெலார் ஆகிய எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடுகிறது.

Most Read Articles

மேலும்... #லெக்சஸ் #lexus
English summary
Japanese luxury car maker, Lexus has launched the 2020 RX450hL Luxury SUV in India starting at ₹ 99 Lakh (ex-showroom).
Story first published: Thursday, October 3, 2019, 14:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X