புதிய இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக்கின் டீசர் வெளியீடு!

புதிய தலைமுறை மாடலாக வர இருக்கும் இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக்கின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக்கின் டீசர் வெளியீடு!

பிக்கப் டிரக் மாடல்களில் மிகவும் பிரிமீயம் அம்சங்களுடன் தனி வாடிக்கையாளர் வட்டத்தை பெற்றிருக்கிறது இசுஸு டி-மேக்ஸ். இந்த நிலையில், அதிக பிரிமீயம் அம்சங்களுடன் முற்றிலும் புதியத தலைமுறை மாடலாக இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக்கின் டீசர் வெளியீடு!

இந்த புதிய மாடல் அடுத்த மாதம் 19ந் தேதி உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசரில் முகப்பில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களை தெளிவாக காண முடிகிறது.

புதிய இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக்கின் டீசர் வெளியீடு!

புதிய இசுஸு டி-மேக்ஸ் டிரக்கில் புதிய க்ரில் அமைப்பு, புதிய வடிவில் ஒளிரும் எல்இடி பகல்நேர விளக்குகள், இரண்டு சதுர வடிவிலாான எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. டீசரில் இதன் முகப்பு மிகவும் வசீகரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

இன்டீரியர் குறித்து அதிகம் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை. ஆனால், தொடுதிரையுடன் கூடிய புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்ஸடம், மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், புதிய கியர் லிவர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதன் உட்புறத்தில் மிக தரமான பிளாஸ்டிங் மற்றும் லெதர் வேலைப்பாடுகள் சிறப்பு சேர்க்கிறது.

புதிய இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக்கின் டீசர் வெளியீடு!

இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக்கில் பயன்படுத்தப்பட இருக்கும் எஞ்சின் குறித்த தகவல் இல்லை. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட 1.9 லிட்டர் டீசல் எஞ்சின் தொடர்ந்து தக்க வைக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பிட்ட நாடுகளில் 3.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் எஞ்சின் தேர்விலும் கிடைக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். 4 வீல் டிரைவ் சிஸ்டம் நிரந்தர தொழில்நுட்ப அம்சமாக இருக்கும்.

புதிய இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக்கின் டீசர் வெளியீடு!

அடுத்த ஆண்டு இந்த புதிய தலைமுறை இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிரது. வெளிநாடுகளில் ஃபோர்டு ரேஞ்சர், டொயோட்டா ஹைலக்ஸ், மஸ்தா பிடி-50 ஆகிய பிக்கப் டிரக் மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
மேலும்... #இசுஸு #isuzu
English summary
Isuzu has released the teaser for the new generation D-Max pick-up, ahead of its global debut on October 19, 2019.
Story first published: Tuesday, October 8, 2019, 14:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X