அட்டகாசமான அம்சங்களுடன் புதிய இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகம்!

புதிய தலைமுறை அம்சங்களுடன் கூடிய இசுஸு டி மேக்ஸ் பிக்கப் டிரக் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

அட்டகாசமான அம்சங்களுடன் புதிய இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகம்!

உலக அளவில் மிக அதிகம் விரும்ப்படும் பிக்கப் டிரக் மாடலாக இசுஸு டி மேக்ஸ் பெயர் பெற்றுவிட்டது. வர்த்தக ரீதியில் மட்டுமின்றி, தனிநபர் பயன்பாட்டிற்கு ஏற்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெவ்வேறு வகை மாடல்களில் கிடைக்கிறது.

அட்டகாசமான அம்சங்களுடன் புதிய இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகம்!

இந்த நிலையில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக மாற்றம் கண்டுள்ளது இசுஸு பிக்கப் டிரக். இந்த புதிய மாடலின் படங்கள், வீடியோ ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன. முதலாவதாக, தாய்லாந்து நாட்டில் வரும் 19ந் தேதி இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

அட்டகாசமான அம்சங்களுடன் புதிய இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகம்!

விரைவில் இந்தியாவிலும் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இசுஸு டி மேக்ஸ் பிக்கப் டிரக்கில் முற்றிலும் புதிய முக அமைப்பை பெற்றுள்ளது. எல்இடி ஹெட்லைட்டுகள், U - வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய பம்பர் அமைப்பு, எல்இடி டெயில் லைட்டுகளுடன் மிக பிரிமீயம் பிக்கப் டிரக் மாடலாக மாறி இருக்கிறது.

அட்டகாசமான அம்சங்களுடன் புதிய இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகம்!

உட்புறத்திலும் முற்றிலும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் மாற்றங்கள் கண்டுள்ளது. இந்த பிக்கப் டிரக்கில் 9.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். ஸ்டீயரிங் வீலிலேயே ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அட்டகாசமான அம்சங்களுடன் புதிய இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகம்!

புதிய இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக்கில் 4.2 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட்டில் ஏராளமான சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரிமீயம் சீட் கவர்கள், சொகுசான கேபின் அமைப்பும் இதன் பிரிமீயத்தை உயர்த்துகிறது.

அட்டகாசமான அம்சங்களுடன் புதிய இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகம்!

தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட இந்த புதிய தலைமுறை மாடலின் கூரை அமைப்பானது 20 சதவீதம் அளவுக்கு கூடுதல் உறுதித்தன்மையுடன் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, வாடிக்கையாளர்கள் பயன்பாட்டை அதிக சுமையை தாங்கும் வலிமையை பெற்றுள்ளது.

MOST READ: யாராலும் நம்ப முடியாத ஒரு பொய்யை சொன்ன வாடிக்கையாளர்... புக்கிங்கை அதிரடியாக கேன்சல் செய்தது ஜாவா

அட்டகாசமான அம்சங்களுடன் புதிய இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகம்!

இந்த புதிய தலைமுறை இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக்கில் 1.9 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதன் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎஸ் பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

MOST READ: விமானங்களின் வெள்ளை நிற ரகசியம்... வேறு வண்ணத்தில் பெயிண்ட் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

அட்டகாசமான அம்சங்களுடன் புதிய இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகம்!

இந்த இரண்டு எஞ்சின்களுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். 1.9 லிட்டர் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு ஆப்ஷனலாக வழங்கப்படும். 4 வீல் டிரைவ் சிஸ்டமும் இதன் முக்கிய அம்சமாக இருக்கும். ஆஃப்ரோடு பயன்பாட்டிற்காக 4 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரோமேக்னடிக் ரியர் டிஃபரன்ஷியல் லாக்கிங் சிஸ்டத்துடன் கிடைக்கும்.

MOST READ: சூப்பர்... எலெக்ட்ரிக் வாகனங்களில் இனி இந்த பிரச்னை கிடையவே கிடையாது... இப்போ உங்களுக்கு நிம்மதியா?

அட்டகாசமான அம்சங்களுடன் புதிய இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகம்!

புதிய இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக்கில் சஸ்பென்ஷன் அமைப்பு, ஸ்டீயரிங் சிஸ்டம் மற்றும் பிரேக் சிஸ்டம் ஆகியவை சிறப்பாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, தற்போதைய மாடலைவிட மிகச் சிறப்பான ஓட்டுதல் தரத்தை இந்த புதிய மாடல் வழங்கும். அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2021ம் ஆண்டு முதல் பாதியில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #இசுஸு #isuzu
English summary
The New Generation Isuzu D-Max pick up truck has revealed in Thailand.
Story first published: Saturday, October 12, 2019, 14:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X