ஆவலைத் தூண்டும் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஆஃப்ரோடு வெர்ஷன்: அறிமுக விபரம்!

புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவியின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை பார்க்கலாம்.

ஆவலைத் தூண்டும் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஆஃப்ரோடு வெர்ஷன்: அறிமுக விபரம்!

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு கிடைத்த வரவேற்பு நீங்கள் அறிந்ததே. அட்டகாசமான ஸ்டைல், செயல்திறன் மிக்க எஞ்சின், சரியான பட்ஜெட் விலை என வாடிக்கையாளர்களை வசியப்படுத்திவிட்டது. இந்த நிலையில், ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஆஃப்ரோடு பயன்பாடுகளுக்கான வெர்ஷன் ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

ஆவலைத் தூண்டும் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஆஃப்ரோடு வெர்ஷன்: அறிமுக விபரம்!

சாதாரண மாடலைவிட அதிக சிறப்பம்சங்கள் மற்றும் ஆஃப்ரோடு பயன்பாடுகளுக்கு ஏற்ற தொழில்நுட்ப அம்சங்கள் இந்த வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கிறது. இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் உலா வந்த நிலையில், இதனை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது.

ஆவலைத் தூண்டும் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஆஃப்ரோடு வெர்ஷன்: அறிமுக விபரம்!

அதாவது, ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி வரும் ஜூலை மாதத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இது இந்திய ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்கள் மற்றும் இந்த காருக்காக காத்திருப்பவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆவலைத் தூண்டும் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஆஃப்ரோடு வெர்ஷன்: அறிமுக விபரம்!

ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவியில் ஆக்டிவ் டிரைவ் லோ தொழில்நுட்பத்துடன் கூடிய 4 வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. தவிரவும், ரியர் லாக்கிங் டிஃபரன்ஷியல், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், மலைப்பாங்கான பகுதிகளில் பயன்படுத்துவதற்கான ராக் டிரைவிங் மோடு ஆகியவையும் இடம்பெற்றுள்ளது.

ஆவலைத் தூண்டும் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஆஃப்ரோடு வெர்ஷன்: அறிமுக விபரம்!

மேலும், ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் வேரியண்ட்டானது 225 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் பெற்றிருக்கிறது. சாதாரண ஜீப் காம்பஸ் எஸ்யூவியைவிட இது 20 மிமீ கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஃப்ரோடு சாலைகளில் ஓட்டுவதற்கும், செங்குத்தான நிலபரப்புகளில் ஏறுவதற்கும், சரிவான இடங்களில் இறங்குவதற்கும் ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட வலுவான பம்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆவலைத் தூண்டும் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஆஃப்ரோடு வெர்ஷன்: அறிமுக விபரம்!

நீர் நிலைகளை எளிதாக கடப்பதற்கு ஏதுவாக ஏர் இன்டேக் பகுதி உயரமாக அமைந்துள்ளது. 480 மிமீ ஆழம் வரையிலான நீர் நிலைகளில் இந்த புதிய காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவியை செலுத்த முடியும். கீழ் பகுதிகளில் பாதிப்பு மற்றும் சேதத்தை தவிர்ப்பதற்கான ஸ்கிட் பிளேட்டுகளும் உள்ளன. அனைத்து சீதோஷ்ண நிலைகளுக்கும் ஏற்ற மிதியடிகளும் உள்ளன.

ஆவலைத் தூண்டும் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஆஃப்ரோடு வெர்ஷன்: அறிமுக விபரம்!

வெளிப்புறத்தில் ட்ரெயில்ஹாக் வேரியண்ட்டை தனித்துக் காட்டும் விதத்தில் சிவப்பு- கருப்பு என இரட்டை வண்ணக் கலவை பெயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ட்ரெயில் பேட்ஜ் இதன் மற்றொரு முக்கிய அம்சமாக இருக்கும்.

ஆவலைத் தூண்டும் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஆஃப்ரோடு வெர்ஷன்: அறிமுக விபரம்!

முதல்முறையாக இந்த எஸ்யூவியில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும், இந்த காரில் இடம்பெற்றிருக்கும் 170 எச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் யூரோ-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பானது. எனவே, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுடன் இயைந்து போகும்.

ஆவலைத் தூண்டும் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஆஃப்ரோடு வெர்ஷன்: அறிமுக விபரம்!

கருப்பு வண்ண கூரை, சன்ரூஃப், டியூவல் டோன் அலாய் வீல்கள், 8.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் இந்த வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறதுத.

ஆவலைத் தூண்டும் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஆஃப்ரோடு வெர்ஷன்: அறிமுக விபரம்!

ஜீப் காம்பஸ் எஸ்யூவி ரூ.25 லட்சம் முதல் ரூ.27 லட்சம் இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ரகத்தில் மிகச் சிறந்த ஆஃப்ரோடு மாடலாக இருக்கும் என்பதால், இப்போதே வாடிக்கையாளர் மத்தியில் ஆவலைத் தூண்டி இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
New Jeep Compass Trailhawk off-road variant India launch details.
Story first published: Friday, April 12, 2019, 14:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X