புதிய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி வெளியீடு!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு வருவது குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி வெளியீடு!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜிஎல்பி என்ற பெயரிலான புத்தம் புதிய எஸ்யூவி மாடலின் கான்செப்ட் ஷாங்காய் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தயாரிப்பு நிலை மாடலின் படங்கள் மற்றும் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி வெளியீடு!

இந்த மாதம் உட்டாவாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த எஸ்யூவி உலகளாவிய அறிமுகத்திற்கு தயாராக உள்ளது. இந்த எஸ்யூவியானது க்ராஸ்ஓவர் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டு இருப்பதுடன், காம்பேக்ட் சொகுசு எஸ்யூவி மாடலாகவும் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி வெளியீடு!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிரபலமான செவ்வக வடிவிலான 7 சீட்டர் மாடல்களிலிருந்து சற்று புதிய டிசைனில் வருகிறது. இதன் போட்டி மாடல்கள் 5 சீட்டராக இருக்கும் நிலையில், இந்த காம்பேக்ட் ரக சொகுசு எஸ்யூவியானது 7 சீட்டர் மாடலாக வருவது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி வெளியீடு!

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த 7 சீட்டர் சொகுசு எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஜிஎல்ஏ மற்றும் ஜிஎல்சி எஸ்யூவி மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி வெளியீடு!

இந்த புதிய எஸ்யூவியில் மல்டி பீம் ஹெட்லைட்டுகள், கண் புருவம் போன்ற அமைப்பிலான பகல்நேர விளக்குகள், பனி விளக்குகளுடன் கூடிய பம்பர் அமைப்பு ஆகியவை சிறப்பு சேர்க்கின்றன.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி வெளியீடு!

பக்கவாட்டில் இது சதுர வடிவிலான வீல் ஆர்ச்சுகள், வித்தியாசமான ஜன்னல் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பின்புறத்திலும் ஏ க்ளாஸ் காரின் டிசைன் தாத்பரியங்களை மனதில் வைத்து சற்றே மாற்றப்பட்டுள்ளது. எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர், டிஃபியூசர் அமைப்பு முக்கிய அம்சங்களாக கூற முடியும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி வெளியீடு!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்பி எஸ்யூவி இரண்டு மாடல்களில் வர இருக்கிறது. ஜிஎல்பி 250 மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 224 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்ததும். 8 ஸ்பீடு டிசிடி கியர்ரபாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி வெளியீடு!

ஜிஎல்பி 200 மாடலில் 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சினஅ அதிகபட்சமாக 163 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி வெளியீடு!

ஜிஎல்பி 200டீ என்ற டீசல் மாடலில் 2.0 லிட்டர் எஞ்சின் 150 பிஎஸ் பவரையும், 320 டார்க் திறனை வழங்கும் வேரியண்ட்டாகவும், 190 பிஎஸ் மற்றும் 400 என்எம் டார்க் திறனை வழங்கும் மற்றொரு மாடலிலும் கிடைக்கும். 4 மேட்டிக் டிரைவ் மாடலிலும் கிடைக்கும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி வெளியீடு!

இந்த எஸ்யூவியில் வட்ட வடிவிலான ஏசி வென்ட்டுகள், 7.0 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். வாய்ஸ் கன்ட்ரோல், பர்ம்ஸ்டெர் சர்ரவுண்ட் ஆடியோ சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி வெளியீடு!

மூன்றாவது வரிசை இருக்கைக்கு பயணிகள் எளிதில் செல்வதற்கு ஏதுவான சிறப்பு வசதியுடன் உருவாக்கப்பட்டு இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவிக்கிறது. இந்த எஸ்யூவி பல்வேறு விதங்களிலும் வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களை பெற்றிருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி வெளியீடு!

இந்த புதிய எஸ்யூவி இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்திய மதிப்பில் ரூ.45 லட்சம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவிக்கு நேர் போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Mercedes-Benz has revealed production version of GLB 7-Seater Compact SUV yesterday. It will be launched in US end of this year.
Story first published: Wednesday, June 12, 2019, 17:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X