புதிய ஹெட்லைட் மற்றும் 6 இருக்கைகளுடன் 2020 எம்ஜி ஹெக்டர் சோதனை ஓட்டம்...

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு ஹெக்டர் எஸ்யூவியுடன் இந்தியாவில் கால் பதித்தது. மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் இருந்து விற்பனையாகி வருகின்ற இந்த கார் தனது பிரிவில் மற்ற மாடல்களுக்கு இணையாக தொழிற்நுட்பங்கள் மற்றும் 5 இருக்கை அமைப்பை கொண்டுள்ளது.

புதிய ஹெட்லைட் மற்றும் 6 இருக்கைகளுடன் 2020 எம்ஜி ஹெக்டர் சோதனை ஓட்டம்...

இந்நிலையில் ஹெக்டரின் அப்டேட் வெர்சன் மாடலை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் விற்பனைக்கு கொண்டுவர உள்ளதாக எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 2020 மாடல் கார் தற்போது பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஹெட்லைட் மற்றும் 6 இருக்கைகளுடன் 2020 எம்ஜி ஹெக்டர் சோதனை ஓட்டம்...

இந்த சோதனை ஓட்டத்தில் இந்த கார் முழுவதும் மறைக்கப்படவில்லை. மாறாக, முன்புறத்தில் சிறிய அளவிலும் பின்புறத்தில் ஒரு பகுதி மட்டுமே மறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஹெக்டர் எஸ்யூவி இந்த அப்டேட்டால் முன்புறத்திலும் பின்புறத்திலும் மட்டுமே மாற்றங்களை ஏற்றுள்ளது என்பது தெளிவாக தெரிய வருகிறது.

புதிய ஹெட்லைட் மற்றும் 6 இருக்கைகளுடன் 2020 எம்ஜி ஹெக்டர் சோதனை ஓட்டம்...

முன்புறத்தில் இந்த காரின் ஹெட்லைட் மற்றும் டிஆர்எல் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட பாகங்கள் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதாவது தற்போதைய மாடலில் இருப்பதை விட ஸ்டைலான டிசைனிற்கு மாற்றப்பட்டுள்ளன. மற்றப்படி பக்கவாட்டு பேனல்களின் டிசைன்களில் எந்த மாற்றமும் இல்லை.

புதிய ஹெட்லைட் மற்றும் 6 இருக்கைகளுடன் 2020 எம்ஜி ஹெக்டர் சோதனை ஓட்டம்...

இந்த 2020 மாடல், அதே 17 இன்ச் டைமண்ட்-கட் அலாய் சக்கரத்துடன் அறிமுகமாகவுள்ளது. ஆனால் இந்த புதிய காரில் சக்கரங்களானது முந்தைய மாடலில் உள்ளதை விட சிறிய அளவில் தென்படுகிறது. பின்புறத்தில், டெயில்கேட்ஸ், பம்பர், எக்ஸாஸ்ட் உள்ளிட்டவற்றின் டிசைன்கள் தற்போதைய மாடலில் இருந்து அப்டேட்டாகியுள்ளன.

Most Read:இந்தியாவிலேயே இந்த பைக்கை வைத்திருக்கும் முதல் முதலமைச்சர் இவர்தான்... அப்படி என்ன பைக் அது..!

புதிய ஹெட்லைட் மற்றும் 6 இருக்கைகளுடன் 2020 எம்ஜி ஹெக்டர் சோதனை ஓட்டம்...

இவற்றுடன் மூன்றாம் வரிசை இருக்கை அமைப்பையும் எம்ஜி நிறுவனம் இந்த அப்டேட் ஹெக்டர் மாடலில் வழங்கியுள்ளது. தற்சமயம் 5 இருக்கைகளில் விற்பனையாகிவரும் ஹெக்டர் மாடல் இந்த மூன்றாவது வரிசையால் 6வது இருக்கையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read:சகல வசதிகள் கொண்ட அடுக்குமாடி சொகுசு வீடாக மாறிய பஜாஜ் ஆட்டோ... தமிழக இளைஞரின் அசத்தலான ஒர்கவுட்..!

புதிய ஹெட்லைட் மற்றும் 6 இருக்கைகளுடன் 2020 எம்ஜி ஹெக்டர் சோதனை ஓட்டம்...

காரை போல இந்த காரில் வழங்கப்படவுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படவுள்ளன. ஆனால் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படவுள்ள 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின்கள் வெளியிடும் ஆற்றல் அளவுகளில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. இதேபோல ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளிலும் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

Most Read:2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

புதிய ஹெட்லைட் மற்றும் 6 இருக்கைகளுடன் 2020 எம்ஜி ஹெக்டர் சோதனை ஓட்டம்...

எம்ஜி ஹெக்டர் மாடலின் சோதனை ஓட்டங்கள் இந்திய சாலையில் இதற்கு முன்பும் சில முறை நடைபெற்றுள்ளன. இதனால் இந்த காரின் அறிமுகத்தை மிக விரைவில் எதிர்பார்க்கலாம். இந்த அப்டேட்டால் கார் சிறிது ப்ரீமியம் லெவலுக்கு மாற்றப்படவுள்ளதால் இதன் விலையும் சிறிது அதிகரிக்கப்படவுள்ளது. இந்த 6 இருக்கை வெர்சன் கார் அறிமுகத்திற்கு பிறகு டாடா க்ராவிட்டாஸ் மாடலுடன் போட்டியிடவுள்ளது.

Source: Rushlane

Most Read Articles

English summary
2020 MG Hector Spied Testing In India With Updated Styling & Features: Spy Pics & Other Details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X