புதிய மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் காரின் இந்திய அறிமுக விபரம்!

புதிய மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் காரின் இந்திய அறிமுக விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் காரின் இந்திய அறிமுக விபரம்!

இங்கிலாந்தை சேர்ந்த மினி கூப்பர் கார் நிறுவனம் சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் ரக கார் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் தனித்துவமான ஹேட்ச்பேக் கார்கள் எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் டிசைன் தாத்பரியங்களை பெற்றிருக்கின்றன.

புதிய மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் காரின் இந்திய அறிமுக விபரம்!

அதிலும், சாதாரண மாடலைவிட அதிக கஸ்டமைஸ் அம்சங்களுடன், கூடுதல் சக்திவாய்ந்த எஞ்சினுடன் விற்பனை செய்யப்படும் ஜான் கூப்பர் ஒர்க்ஸ் என்ற மாடல் மினி கார் நிறுவனத்தின் கார்களின் வசீகரத்தை பல படிகள் முன்னே கொண்டு செல்லும் விதத்தில் இருக்கினறன. இந்த நிலையில், மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் மாடல் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் காரின் இந்திய அறிமுக விபரம்!

யூரோ-6 மாசு உமிழ்வு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள இந்த மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் கார் மாடல் வரும் மே மாதம் 9ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் காரின் இந்திய அறிமுக விபரம்!

எனினும், புகைப்போக்கியில் குறைவான மாசு உமிழ்வு இருக்கும் வகையில், புதிய துகள் வடிகட்டி அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனினும், செயல்திறனிலும், புகைப்போக்கி சப்தத்திலும் எந்த மாறுதலும் இருக்காது என்று மினி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் காரின் இந்திய அறிமுக விபரம்!

அதாவது, இதன் எஞ்சின் 228 பிஎச்பி பவரையும், 319 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அதேபோன்று, 0 - 100 கிமீ வேகத்தை 6.3 வினாடிகளில் எட்டிவிடும். பழைய மாடலில் இருந்த அதே அளவு செயல்திறனை வெளிப்படுத்தும் விதத்தில் சிறப்பாக ட்யூனிங் செய்துள்ளனர்.

புதிய மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் காரின் இந்திய அறிமுக விபரம்!

இது தவிர்த்து, புதிய மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் காரில் 17 அங்குல ஜான் கூப்பர் ஒர்க்ஸ் இலகு எடையிலான அலாய் வீல்கள், ஹெட்லைட் மற்றும் பானட்டுகளில் கருப்பு வண்ண ஸ்டிக்கர் அலங்காரம், எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் காரின் இந்திய அறிமுக விபரம்!

உட்புறத்திலும் பல கூடுதல் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. லெதர் பக்கெட் இருக்கைகள், பியானோ பிளாக் இன்டீரியர் ஆகியவை சிறப்பு சேர்க்கின்றன. மொத்தத்தில், பெரும் பணக்காரர்களை கண்டவுடன் காதல் செய்துவிடும் அம்சங்கள் ஏராளம்.

Most Read Articles
மேலும்... #மினி #mini
English summary
New MINI John Cooper Works India Launch Details.
Story first published: Friday, April 12, 2019, 11:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X