இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய கார் சேலத்தில் சோதனை... வீடியோ

இந்திய வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய கார் சேலத்தில் வைத்து சோதனை செய்யப்படும் வீடியோ டிரைவ்ஸ்பார்க் குழுவினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய கார் சேலத்தில் சோதனை... வீடியோ

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம், க்விட் ஹேட்ச்பேக் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை (Renault Kwid Facelift) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. புதிய ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் வரும் அக்டோபர் 1ம் தேதி இந்திய மார்க்கெட்டில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய கார் சேலத்தில் சோதனை... வீடியோ

இந்த சூழலில் ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்போது, நமது டிரைவ்ஸ்பார்க் குழுவின் கேமரா கண்களில் சிக்கியுள்ளது. க்விட் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் புகைப்படங்கள் இதற்கு முன்னதாகவும் பல முறை வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய கார் சேலத்தில் சோதனை... வீடியோ

தற்போது நமது குழுவினரால் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ, மூன்று க்விட் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் கார்கள் இந்தியாவில் சாலை சோதனை செய்யப்படும் தகவலை நமக்கு கூறியுள்ளன. அவை அனைத்தும் முழுவதும் உருமறைக்கப்பட்ட நிலையில்தான் இருந்தன. தமிழகத்தில் சேலத்திற்கு அருகே இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய கார் சேலத்தில் சோதனை... வீடியோ

எனினும் முழுவதுமாக உருமறைக்கப்பட்டிருந்ததால், காரின் எக்ஸ்டீரியர் குறித்த விரிவான தகவல்களை நம்மால் அறிய முடியவில்லை. தற்போது சர்வதேச மார்க்கெட்களில் விற்பனை செய்யப்படும் கே-இஸட்இ எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை மனதில் வைத்துதான், புதிய க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய கார் சேலத்தில் சோதனை... வீடியோ

இதன் முன்பகுதியில் ஸ்பிளிட் ஹெட்லேம்ப்ஸ் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. எல்இடி டிஆர்எல்கள் முன்பக்க க்ரிலுக்கு அடுத்தபடியாக இடம்பெற்றுள்ளன. அதே சமயம் கே-இஸட்இ மாடலில் இருப்பதை போன்று, புதிய சி-வடிவ எல்இடி யூனிட்களுடன் பின்பக்க டெயில் லேம்ப் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இனி இன்டீரியர் குறித்து பார்க்கலாம்.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய கார் சேலத்தில் சோதனை... வீடியோ

இன்டீரியரை பொறுத்தவரை தற்போதைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடும்போது, பல்வேறு விதங்களில் புதிய ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் மேம்பட்டுள்ளது. இதில், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் யூனிட், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் கூடிய புதிய 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும்.

MOST READ: இந்தியாவில் களமிறங்கவுள்ள எம்ஜி எலெக்ட்ரிக் காரின் டெலிவரி இங்கிலாந்தில் தொடங்கியது! விலை தெரியுமா?

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய கார் சேலத்தில் சோதனை... வீடியோ

அதே நேரத்தில் ட்ரைபர் எம்பிவியிடம் இருந்து ஸ்டியரிங் பெறப்பட்டுள்ளது. ஆனால் மெக்கானிக்கல் ரீதியாக, க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போதைய மாடல்களில் உள்ள அதே இன்ஜின்தான் புதிய மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய தலைமுறை க்விட் காரில் 2 பெட்ரோல் இன்ஜின்கள் கிடைக்கின்றன.

MOST READ: வேற லெவல்... மகள் பள்ளிக்கு செல்லும் சமயத்தில் போலீஸ் அவதாரம் எடுக்கும் பெண்... எதற்காக தெரியுமா?

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய கார் சேலத்தில் சோதனை... வீடியோ

இதில், 800 சிசி யூனிட் அதிகபட்சமாக 54 எச்பி பவர் மற்றும் 72 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. அதே சமயம் 1.0 லிட்டர் இன்ஜின் 68 எச்பி பவர் மற்றும் 91 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த வல்லது. இந்திய மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் ரெனால்ட் நிறுவன கார்களில் ஒன்றாக க்விட் திகழ்ந்து வருகிறது.

MOST READ: மீண்டும் 8 போட தயாரா இருங்க: தமிழக வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அடுத்த ஆப்பு... முக்கிய தகவல்!

எண்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் போட்டியாளர்களுக்கு வலுவான போட்டியை ரெனால்ட் க்விட் வழங்கி வருகிறது. எனினும் ரெனால்ட் க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன், மாருதி சுஸுகி நிறுவனத்தின் புத்தம் புதிய மாடலான எஸ்-பிரெஸ்ஸோ உடனும் போட்டியிடும். மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் வரும் செப்டம்பர் 30ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய கார் சேலத்தில் சோதனை... வீடியோ

அதற்கு ஒரு நாள் கழித்து, அதாவது அக்டோபர் 1ம் தேதி புதிய ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் களமிறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய க்விட் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன், ரெனால்ட் நிறுவனத்திற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
New Renault Kwid Facelift Spied Testing Ahead Of Launch In India On October 1st: Spy Video & Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X