கூடுதல் சிறப்பம்சங்களுடன் ரெனோ க்விட் கார் அறிமுகம்!

ரெனோ க்விட் காரில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், ஓட்டுனருக்கான ஏர்பேக், ஸ்பீடு சென்சிங் டோர் லாக்கிங் சிஸ்டம், முன், பின் இருக்கைகளில் இஎல்ஆர் சீட் பெல்ட்டுகள

ரெனோ க்விட் காரில் கூடுதல் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ரெனோ க்விட் கார் அறிமுகம்!

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் ரெனோ க்விட் காருக்கு தனி வரவேற்பு இருந்து வருகிறது. எஸ்யூவி போன்ற தோற்றம், நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இந்த காருக்கான வரவேற்பை ஸ்திரப்படுத்தி இருக்கிறது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ரெனோ க்விட் கார் அறிமுகம்!

இந்த சூழலில், புதிய கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணையாக ரெனோ க்விட் காரில் சில பாதுகாப்பு மற்றும் கூடுதல் தொழில்நுட்ப வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ரெனோ க்விட் கார் அறிமுகம்!

ரெனோ க்விட் காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வசதியுடன் இனி கிடைக்கும். அத்துடன், ஓட்டுனருக்கான ஏர்பேக், ஸ்பீடு சென்சிங் டோர் லாக்கிங் சிஸ்டம், முன், பின் இருக்கைகளில் இஎல்ஆர் சீட் பெல்ட்டுகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஓவர்ஸ்பீடு அலெர்ட் உள்ளிட்ட வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ரெனோ க்விட் கார் அறிமுகம்!

டாப் வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ரெனோ க்விட் கார் அறிமுகம்!

இந்த காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 800சிசி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரின் 800சிசி எஞ்சின் 57 பிஎச்பி பவரையும், 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. 1.0 லிட்டர் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் உள்ளது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ரெனோ க்விட் கார் அறிமுகம்!

இந்த காரில் டிராஃபிக் அசிஸ்ட் என்ற பெயரில் குறிப்பிடப்படும் க்ராவ்ல் ஃபங்ஷன் உள்ளது. இதன் மூலமாக, ஆக்சிலரேட்டர் கொடுக்காமலேயே பிரேக்கை விடும்போது கார் மெதுவாக முன்னோக்கி நகரும் வசதி உள்ளது. இது போக்குவரத்து நெரிசல் மிகுந்த சமயங்களில் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும்.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ரெனோ க்விட் கார் அறிமுகம்!

தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அதிக கொள்திறன் கொண்ட பூட்ரூம் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை இந்த கார் தன்னகத்தே கொண்டுள்ளது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ரெனோ க்விட் கார் அறிமுகம்!

இந்த ரகத்தில் மிகச் சிறப்பான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட மாடலாகவும் இருக்கிறது. இதனால், இந்திய சாலைகளில் ஓட்டுவதற்கு சிறப்பான மாடலாகவும் இருக்கிறது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ரெனோ க்விட் கார் அறிமுகம்!

டிசைன், வசதிகள், மைலேஜ் மட்டுமின்றி மிக சவாலான ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இந்த கார் ரூ.2.66 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது. கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டாலும், விலையில் மாற்றமில்லை. அண்மையில் புதிய மாருதி வேகன் ஆர் வந்துள்ள நிலையில், தற்போது கூடுதல் சிறப்பம்சங்களுடன் ரெனோ க்விட் கார் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Kwid has updated with ABS, Android Auto & new features in India.
Story first published: Saturday, February 2, 2019, 16:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X