அடடே.. ரெனோ ட்ரைபர் காரின் பேஸ் வேரியண்ட்டிலேயே எக்கச்சக்க வசதிகள்!

ரூ.4.95 லட்சம் என்ற மிக சவாலான விலையில் புதிய ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு வந்து வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த கார் வசதிகளின் அடிப்படையில் ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்இசட் ஆகிய 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இந்த வேரியண்ட்டுகளில் இடம்பெற்றிருக்கும் வசதிகளின் விபரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அடடே.. ரெனோ ட்ரைபர் காரின் பேஸ் வேரியண்ட்டிலேயே எக்கச்சக்க வசதிகள்!

ரெனோ ட்ரைபர் ஆர்எக்ஸ்இ ( பேஸ் வேரியண்ட்)

புதிய ரெனோ ட்ரைபர் காரின் ஆர்எக்ஸ்இ வேரியண்ட்டிற்கு ரூ.4.95 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், வீல் ஆர்ச் கிளாடிங், பாடி கலர் பம்பர், வீல் கவர்கள், கருப்பு வண்ண சைடு மிரர்கள் மற்றும் கைப்பிடிகள் கொடுக்கப்படுகின்றன. இரட்டை வண்ண டேஷ்போர்டு அமைப்பு, உட்புறத்தில் கருப்பு வண்ண கதவு கைப்பிடிகள், எல்இடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கருப்பு வண்ண ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

அடடே.. ரெனோ ட்ரைபர் காரின் பேஸ் வேரியண்ட்டிலேயே எக்கச்சக்க வசதிகள்!

இதர வசதிகள்

பேஸ் வேரியண்ட்டில் எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், முன்புற கதவுகளுக்கான பவர் விண்டோஸ் வசதி, முதல் வரிசைக்கு மட்டும் ஏசி வென்ட்டுகள், இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கு சாய்மானம் மற்றும் மடக்கும் வசதி, பின்புற கதவிற்கான எலெக்ட்ரிக் டெயில் கேட் ஓபன் வசதி, 12 வோல்ட் பவர் சாக்கெட், டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்பீடு அலர்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், பெடெஸ்ட்ரியன் புரொடெக்ஷன் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை பெற்றிருக்கிறது. அதாவது, இந்த விலைக்கு மிக அதிகப்படியான வசதிகளை அளிப்பதாகவே கூறலாம்.

அடடே.. ரெனோ ட்ரைபர் காரின் பேஸ் வேரியண்ட்டிலேயே எக்கச்சக்க வசதிகள்!

ரெனோ ட்ரைவர் ஆர்எக்ஸ்எல்

இந்த வேரியண்ட்டிற்கு ரூ.5.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஆர்எக்ஸ்இ பேஸ் வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் வசதிகளுடன் கூடுதலாக பாடி கலர் கதவு கைப்பிடிகள், முழுமையான வீல் கவர், கதவுகளில் கருப்பு வண்ண அலங்கார ஸ்டிக்கர்கள், கருப்பு வண்ணத்திலான பி மற்றும் சி பில்லர்கள், க்ரோம் அலங்காரத்துடன் முன்புற க்ரில் அமைப்பு, வெள்ளை வணண இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டில்ட் ஸ்டீயரிங் வீல், ஏசி கட்டுப்பாட்டுக்கான ரோட்டரி நாப், இரண்டாவது, மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கான ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அடடே.. ரெனோ ட்ரைபர் காரின் பேஸ் வேரியண்ட்டிலேயே எக்கச்சக்க வசதிகள்!

இதர வசதிகள்

இந்த காரில் டியூவல் டோன் டேஷ்போர்டில் பியானோ பிளாக் பூச்சும் இடம்பெற்றிருப்பது பிரிமீயமாக காட்டுகிறது. மேலும், கூல்டு க்ளவ் பாக்ஸ், புளுடூத், யுஎஸ்பி இணைப்புடன் ஆர் அண்ட் கோ மியூசிக் சிஸ்டம், முன்புறத்தில் இரண்டு ஸ்பீக்கர்கள், ஸ்பீடு சென்சிங் டோர் லாக் சிஸ்டம் மற்றும் விபத்தின்போது கதவுகள் தானியங்கி முறையில் திறக்கு வசதிகள் உள்ளன.

அடடே.. ரெனோ ட்ரைபர் காரின் பேஸ் வேரியண்ட்டிலேயே எக்கச்சக்க வசதிகள்!

ரெனோ ட்ரைபர் ஆர்எக்ஸ்டி

இந்த வேரியண்ட்டிற்கு ரூ.5.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்எக்ஸ்இ மற்றும் ஆர்எக்ஸ்எல் வேரியண்ட்டுகளில் இருக்கும் வசதிகளுடன் கூடுதலாக க்ரோம் க்ரில் அமைப்பு, 50 கிலோ எடை தாங்கும் திறன் கொண்ட ரூஃப் ரெயில்கள், ஸ்கிட் பிளேட்டுகள், எல்இடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ரியர் பவர் விண்டோஸ், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 2 ரியர் ஸ்பீக்கர்கள் ஆகியவை உள்ளன.

அடடே.. ரெனோ ட்ரைபர் காரின் பேஸ் வேரியண்ட்டிலேயே எக்கச்சக்க வசதிகள்!

இதர வசதிகள்

இந்த வேரியண்ட்டில் கூடுதலாக டே-நைட் உட்புற ரியர் வியூ மிரர், கூல்டு க்ளவ் பாக்ஸ், ஓட்டுனர் இருக்கைக்கு கீழே ஸ்டோரேஜ் வசதி, வேனிட்டி மிரர், இரண்டாவது வரிசை இருக்கைக்கான 12 வோல்ட் சார்ஜர், ரியர் ரூம் லைட் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

MOST READ: எப்பவுமே தனி காட்டு ராஜா தான்: அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியல் வெளியீடு.. யார் அந்த ராஜா?

அடடே.. ரெனோ ட்ரைபர் காரின் பேஸ் வேரியண்ட்டிலேயே எக்கச்சக்க வசதிகள்!

ரெனோ ட்ரைபர் ஆர்எக்ஸ்இசட்

அனைத்து வசதிகளுடன் வந்திருக்கும் இந்த விலை உயர்ந்த வேரியண்ட்டிற்கு ரூ6.49 லட்சம் என்ற சவாலான விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மேற்கண்ட மூன்று வேரியண்ட்டுகளில் இருக்கும் வசதிகளுடன் கூடுதலாக அலாய் வீல்கள், எல்இடி பகல்நேர விளக்குகள், சில்வர் உதிரிபாக அலங்காரத்துடன் டியூவல் டோன் டேஷ்போர்டு, புஷ் பட்டன் ஸ்டார்ட், பார்க்கிங் பிரேக் பட்டன் மற்றும் கியர் லிவரில் க்ரோம் வளைய அலங்காரம், சில்வர் பூச்சுடன் உட்புற கதவு கைப்பிடிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

MOST READ: மலிவு விலை ஹூண்டாய் வெனியூவில் சிஎன்ஜி ஆப்ஷனா...? வீடியோ!!!

அடடே.. ரெனோ ட்ரைபர் காரின் பேஸ் வேரியண்ட்டிலேயே எக்கச்சக்க வசதிகள்!

இதர வசதிகள்

இந்த வேரியண்ட்டில் கூடுதலாக மியூசிக் சிஸ்டத்தில் இரண்டு ட்விட்டர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. முப்பரிமாண ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி, ஸ்மார்ட் அக்செஸ் கார்டு, புஷ் பட்டன் ஸ்டார்ட் - ஸ்டாப், ரியர் வாஷர், வைப்பர் மற்றும் டீஃபாகர், ஓட்டுனர் பக்க ஜன்னல் கண்ணாடி தானியங்கி முறையில் ஏறி, இறங்கும் வசதி, ரியர் வியூ கேமரா, ஓட்டுனர் பக்கத்திற்கான வேனிட்டி மிரர், மூன்றாவது வரிசைக்கும் மொபைல் சார்ஜர், முன்புற இருக்கைகளுக்கு கூடுதலாக இரண்டு சைடு ஏர்பேக்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

MOST READ: பழைய வாகனங்களால் ஆபத்து... அதிரடியான திட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு... என்னவென்று தெரியுமா?

அடடே.. ரெனோ ட்ரைபர் காரின் பேஸ் வேரியண்ட்டிலேயே எக்கச்சக்க வசதிகள்!

சிறப்பான தேர்வு

மிக சரியான விலையில் 7 சீட்டர் மாடலாக வந்திருப்பதுடன், ரெனோ க்விட் கார் போலவே, அதிக சிறப்பம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளை இந்த கார் அளிக்கிறது. மேலும், 7 பேர் செல்வதற்கான வாய்ப்பையும் கொடுப்பதால், வாடிக்கையாளர் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தேர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ரினால்ட் #renault
English summary
Here we give you a detailed variant-wise features offered with the all new Renault Triber mini MPV car.
Story first published: Wednesday, August 28, 2019, 15:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X