இந்தியாவில் புதிய ரெனோ டஸ்ட்டரின் உருவாக்கப் பணிகள்!

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் மூன்றாம் தலைமுறை மாடலானது இந்தியாவிலேயே உருவாக்கப்பணிகள் நடக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது ரெனோ நிறுவனத்தின் கீழ் செயல்படும் டேஸியா நிறுவனம்தான் புதிய ரெனோ டஸ்ட்டர

புதிய தலைமுறை ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் உருவாக்கப்பணிகள் இந்தியாவிலேயே நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்தியாவிலேயே உருவாகப்போகும் புதிய ரெனோ டஸ்ட்டர்!

2012ம் ஆண்டு காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் முதலாவது மாடலாக வந்த ரெனோ டஸ்ட்டர் துவக்கத்தில் பெரிய ஹிட் மாடலாக வலம் வந்தது. இதன் மார்க்கெட்டை குறிவைத்து பல புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டதால், சந்தையில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இந்தியாவிலேயே உருவாகப்போகும் புதிய ரெனோ டஸ்ட்டர்!

இதனால், அவ்வப்போது மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ரெனோ டஸ்ட்டர் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு இரண்டாம் தலைமுறை மாடல் வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அந்த மாடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்படவில்லை. எனினும், மாற்றங்கள் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலானது கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்தியாவிலேயே உருவாகப்போகும் புதிய ரெனோ டஸ்ட்டர்!

மேம்படுத்தப்பட்ட மாடலாக வர இருக்கும் புதிய மாடலில் பல்வேறு கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். அத்துடன், வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் சிறிய டிசைன் மாற்றங்களுடன் வர இருக்கிறது.

இந்தியாவிலேயே உருவாகப்போகும் புதிய ரெனோ டஸ்ட்டர்!

அடுத்த ஆண்டு புதிய மாசு உமிழ்வு விதிகளும் அமலுக்கு வர இருப்பதால், ரெனோ டஸ்ட்டரின் பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எனவே, புதுப்பொலிவுடன் கூடிய மாடல் மிக விரைவில் வர இருப்பது தெரிய வருகிறது.

இந்தியாவிலேயே உருவாகப்போகும் புதிய ரெனோ டஸ்ட்டர்!

இதனிடையே, ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் மூன்றாம் தலைமுறை மாடலானது இந்தியாவிலேயே உருவாக்கப்பணிகள் நடக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது ரெனோ நிறுவனத்தின் கீழ் செயல்படும் டேஸியா நிறுவனம்தான் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியை தயாரித்து வருகிறது. அதன் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு ரெனோ பிராண்டில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவிலேயே உருவாகப்போகும் புதிய ரெனோ டஸ்ட்டர்!

இந்த நிலையில், ஐரோப்பாவில் மின்சார கார்கள் பக்கம் சந்தை திரும்பி வருவதால், மூன்றாம் தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவியை ரெனோ கார் நிறுவனமே நேரடியாக உருவாக்க இருப்பதாகவும், அந்தப் பணிகள் இந்தியாவில் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவிலேயே உருவாகப்போகும் புதிய ரெனோ டஸ்ட்டர்!

ஆனால், அடுத்த ஆண்டு பிற்பாதியில்தான் புதிய தலைமுறை ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் உருவாக்கப் பணிகள் துவங்கப்பட இருக்கின்றன. வரும் 2023ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

Source: NDTV Auto

Most Read Articles
மேலும்... #ரினால்ட்
English summary
French carmaker Renault launched the Duster SUV in India way back in 2012. However, despite the fact the second-gen SUV was launched in 2017, Renault still hasn't bought the current Duster sold in Europe to India. This though is set to change claims NDTV Auto, which states that the third-generation Renault Duster will be developed in India.
Story first published: Tuesday, April 16, 2019, 10:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X