உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ கார்... இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நிஸான் கிக்ஸ்

கிரிக்கெட் என்ற விளையாட்டை இந்திய மக்கள் உயிருக்கு உயிராக நேசிக்கின்றனர். இங்கு கிரிக்கெட் ஒரு மதம் போல் வேரூன்றியுள்ளது. வயது வித்தியாசம் இல்லாமல் பல கோடிக்கணக்கான மக்கள் கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். இந்த சூழலில் தற்போது 2019 ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்க கூடிய மகிழ்ச்சி இது.

உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ கார்... இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நிஸான் கிக்ஸ்

2019 ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடர் கடந்த மே 30ம் தேதி தொடங்கியது. ஜூலை 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 10 அணிகள் பங்கேற்றுள்ளன. 46 நாட்கள் நடைபெறவுள்ள இந்த விளையாட்டு திருவிழாவில், 48 போட்டிகள் அரங்கேறவுள்ளன.

உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ கார்... இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நிஸான் கிக்ஸ்

இந்த சூழலில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்பின் பார்ட்னராக நிஸான் நிறுவனம் இருந்து வருகிறது. அத்துடன் 2019 கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கும் நிஸான் நிறுவனம் ஸ்பான்சராக உள்ளது. நிஸான் நிறுவனத்தின் கிக்ஸ் கார், 2019 ஐசிசி உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ காராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே நிஸான் கிக்ஸ் காரை எடுத்து கொண்டு, பெங்களூர் நகர் முழுவதையும் சுற்றி வந்து, கிரிக்கெட் ரசிகர்களுடன் கலந்துரையாடினால் நன்றாக இருக்குமே என எங்களுக்கு தோன்றியது. அதனை நாங்கள் உடனடியாக செய்து விட்டோம்.

உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ கார்... இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நிஸான் கிக்ஸ்

சர்ரே எனப்படும் இங்கிலாந்தின் ஒரு குக்கிராமத்தில், கடந்த 1550ம் ஆண்டு வாக்கில், ஒரு சில குழந்தைகள் அடங்கிய குழு ஒன்று கிரிக்கெட் விளையாட தொடங்கியது. இன்று சர்ரேவை தெரியாத கிரிக்கெட் ரசிகர்கள் நிச்சயமாக இருக்கவே முடியாது. அதேபோல் இடைப்பட்ட இந்த ஆண்டுகளில் கிரிக்கெட் மகத்தான ஒரு விளையாட்டாக உருவெடுத்துள்ளது. தற்போதைய நிலையில் உலகின் மிகப்பெரிய மற்றும் கவர்ச்சிகரமான விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட் திகழ்ந்து வருகிறது.

உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ கார்... இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நிஸான் கிக்ஸ்

ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் மற்றும் இதர டி20 கிரிக்கெட் லீக் தொடர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவே செய்கின்றன. ஆனால் உலக கோப்பை என வந்து விட்டால், நிலைமையே வேறு. உலக கோப்பை தொடர்களில் எதிரணிகளுடன் மல்லு கட்டுவதற்காக ஒவ்வொரு நாடும் சர்வதேச கிரிக்கெட் அணிகளை வார்த்தெடுக்கின்றன. உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வது என்பது மிகவும் பெருமையான ஒரு விஷயம்.

உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ கார்... இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நிஸான் கிக்ஸ்

இந்தியாவில் உள்ள ரசிகர்கள் ஒவ்வொரு உலக கோப்பை தொடருக்கும் பேராவலுடன் காத்து கொண்டுதான் இருக்கின்றனர். டிராபியை இந்தியா மீண்டும் கொண்டு வரும் என்ற நம்பிக்கையுடன். இந்தியா கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு உலக கோப்பையை வென்றிருந்தது. அதற்கு முன்னதாக 1983ம் ஆண்டிலும் இந்தியா மகுடம் சூடியிருந்தது. கபில்தேவ், டோனி ஆகியோரை தொடர்ந்து விராட் கோஹ்லியும் இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று தந்த கேப்டனாக உருவெடுப்பார்கள் என ரசிகர்கள் ஆழமாக நம்புகின்றனர். ஆனால் இம்முறை உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. எனவே அந்த அணியும் உலக கோப்பையை தங்கள் வீட்டிற்கு எடுத்து செல்ல பெரும் முயற்சியை செய்யும்.

உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ கார்... இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நிஸான் கிக்ஸ்

ஏற்கனவே குறிப்பிட்டபடி 2019 ஐசிசி உலக கோப்பை தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. இம்முறை 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளையும் ஒரு முறையாவது எதிர்த்து விளையாடும் வகையில் தொடர் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதி எப்போதும் போல நாக் அவுட்தான். இதில் இருந்து இரண்டு அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

MOST READ: ஆந்திர புதிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் அட்டகாசம்... சட்டத்தை மீறுவதால் சர்ச்சை...

உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ கார்... இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நிஸான் கிக்ஸ்

தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பார்ட்னராக இருந்து வரும் நிஸான் நிறுவனம்தான், 2019 மற்றும் 2023ம் ஆண்டுகளின் ஐசிசி உலக கோப்பை தொடர்களுக்கு டைட்டில் ஸ்பான்சராகவும் இருக்க போகிறது. கிரிக்கெட் மட்டுமல்லாது பல்வேறு சர்வதேச விளையாட்டு தொடர்களுக்கும் நிஸான் நிறுவனம் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வருகிறது.

உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ கார்... இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நிஸான் கிக்ஸ்

2019 உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ காராக நிஸான் கிக்ஸ் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி சர்வதேச மார்க்கெட்களில் ஏற்கனவே விற்பனையில் இருந்தாலும், கடந்த ஜனவரி மாதம்தான் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் ஸ்டைலான எஸ்யூவி கார்களில் ஒன்றாக நிஸான் கிக்ஸ் திகழ்கிறது. முன்பகுதியில் சிறப்பான தோற்றத்தை தரும் பம்பர் மற்றும் க்ரில் அமைப்பை நிஸான் கிக்ஸ் பெற்றுள்ளது.

MOST READ: மிக விரைவில் இந்திய சாலைகளை ஆள போகும் வாகனங்கள் இதுதான்... பெட்ரோல் டூ விலர்களுக்கு மோடி அரசின் செக்!

உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ கார்... இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நிஸான் கிக்ஸ்

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் இது கிடைக்கிறது. அத்துடன் பல்வேறு பீரிமியம் வசதிகளையும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவி பெற்றுள்ளது. இதில், ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர் லாக்/அன்லாக், இன்ஜின் இம்மொபிளிசர், ட்யூயல் ஏர் பேக்குகள், இபிடி உடனான ஏபிஎஸ், பிரேக் அஸிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ கார்... இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நிஸான் கிக்ஸ்

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 210 மிமீ. அதே நேரத்தில் 5.2 மீட்டர்கள் என்ற டர்னிங் ரேடியஸை நிஸான் கிக்ஸ் பெற்றுள்ளது. இதன் டேஷ் போர்டில், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதிகளுடன் கூடிய 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் ஆதிக்கம் செலுத்துகிறது. இதுதவிர நிஸான் நிறுவனத்தின் கனெக்ட்டிவிட்டி வசதியான நிஸான் கனெக்ட் ஆப்ஷனும் கிக்ஸ் காரில் இடம்பெற்றுள்ளது.

MOST READ: கோடை காலத்தில் முழுமையாக எரிபொருள் நிரப்பினால் வாகனம் தீப்பிடிக்குமா? வைரலாகும் அதிர்ச்சி தகவல்

உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ கார்... இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நிஸான் கிக்ஸ்

2019 ஐசிசி உலக கோப்பை தொடருக்கு ஸ்பான்ஸராக இருப்பதன் மூலம் நிஸான் நிறுவனத்தின் பிராண்டு அங்கீகாரம் உயர்ந்துள்ளது. அத்துடன் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தற்போது நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரை உடனடியாக அடையாளம் கண்டு கொள்கின்றனர்.

மிகவும் ஸ்டைலான டிசைனை பெற்றிருப்பதால், போட்டியாளர்களை காட்டிலும் மேம்பட்ட மாடலாக நிஸான் கிக்ஸ் திகழ்கிறது. இந்த சூழலில் தற்போது 2019 ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அதிகாரப்பூர்வ காராக உருவெடுத்திருப்பதால், நிஸான் கிக்ஸ் காருக்கு இந்த விஷயம் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அனைத்து கிரிக்கெட் ஆர்வலர்களாலும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியை எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.

உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ கார்... இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நிஸான் கிக்ஸ்

நிஸான் கிக்ஸ் காரை எடுத்து கொண்டு சென்று, வயது வித்தியாசமல் இல்லாமல் கிரிக்கெட் ரசிகர்களை சந்தித்து பேசிய நிகழ்வு இனிமையாகதாக இருந்தது. இந்த காரின் டிசைன் ஒன்றே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விடுகிறது. இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களை சேகரித்த போது, ரசிகர்கள் வரிசை கட்டி வந்தனர்.

2019 உலக கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் கண்டு களிப்பதுடன், இந்திய அணியையும் உற்சாகப்படுத்துங்கள். அதேபோல் சாலைகளில் செல்லும் 2019 உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ காரான நிஸான் கிக்ஸையும் பாருங்கள். இது உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் காராக இருக்கலாம்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan #sponsored
English summary
Nissan Kicks "World Cup Wish Tour" Reaches Bangalore — Official Car For The Cricket World Cup 2019. Read in Tamil
Story first published: Thursday, June 6, 2019, 18:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X