பளிச்சிடும் நிறத்தில் ஜப்பானில் அறிமுகமாகவுள்ள 2020 நிஸான் லீஃப் எலக்ட்ரிக் கார்...

நிஸான் நிறுவனம், அப்டேட் செய்யப்பட்ட புதிய லீஃப் எலக்ட்ரிக் மாடலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது தாய் நாட்டான ஜப்பானில் அறிமுகப்படுத்தவுள்ளது. உலகளாவிய சந்தையில் காலடி எடுத்து வைத்து 10 வருடங்கள் கடந்ததை நினைவுக்கூறும் விதமாக இந்த புதிய அப்டேட் வெர்சன் வெளியாகவுள்ளது.

பளிச்சிடும் நிறத்தில் ஜப்பானில் அறிமுகமாகவுள்ள 2020 நிஸான் லீஃப் எலக்ட்ரிக் கார்...

லீஃப் மாடலின் இந்த புதிய அப்டேட்டில் கூடுதல் நிற தேர்வுகளும் அடங்கியுள்ளன. இவ்வாறான அதிக விலை கொண்ட எலக்ட்ரிக் கார்களின் என்ஜினில் இருந்து எந்த சத்தமும் வெளிவராது. இதனால் நிஸான் நிறுவனம் இந்த காரின் அறிமுகத்தின்போதே பாதசாரிகள் மற்றும் மற்ற வாகனங்களின் பாதுகாப்பிற்காக கேண்ட்டோ என்ற அமைப்புடன் இணைந்து புதுமையான சத்தத்தை இந்த காரில் கொண்டுவந்தது.

பளிச்சிடும் நிறத்தில் ஜப்பானில் அறிமுகமாகவுள்ள 2020 நிஸான் லீஃப் எலக்ட்ரிக் கார்...

மேலும் தற்போதைய காரில் வழங்கப்பட்டுள்ள ப்ரோபைலட் ட்ரைவிங் அசிஸ்டன்ஸ் தொழிற்நுட்பம் இந்த 2020 அப்டேட்டால் கூடுதலாக ஸ்பீடு கண்ட்ரோல் மற்றும் பார்க் சிஸ்டம் போன்ற அம்சங்களை பெற்றுள்ளது. இதனுடன் ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதியை பார்க்கும் வசதியும் இந்த எலக்ட்ரிக் காரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பளிச்சிடும் நிறத்தில் ஜப்பானில் அறிமுகமாகவுள்ள 2020 நிஸான் லீஃப் எலக்ட்ரிக் கார்...

அப்டேட்டினால் இந்த எலக்ட்ரிக் கார் உட்புறத்தில் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் நாவிகேஷனை வழங்கக்கூடிய 9 இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஒடிஏ மேப் அப்டேட்கள், வை-பை-ஐ பெறுவதற்காக டொகோமோ இன்-கார் கனெக்ட் சிஸ்டம் போன்ற தொழிற்நுட்பங்களை பெற்றுள்ளது.

பளிச்சிடும் நிறத்தில் ஜப்பானில் அறிமுகமாகவுள்ள 2020 நிஸான் லீஃப் எலக்ட்ரிக் கார்...

இவற்றுடன் கூகுளின் தேடல் கருவிகளையும் இந்த கார் உட்புற பகுதியில் பெற்றுள்ளது. இதன் மூலம் ஓட்டுனர் கார் லாக் செய்யப்பட்டிருக்கிறதா அல்லது இல்லையா என்பதையும் உறுதி செய்துகொள்ளலாம்.

பளிச்சிடும் நிறத்தில் ஜப்பானில் அறிமுகமாகவுள்ள 2020 நிஸான் லீஃப் எலக்ட்ரிக் கார்...

இந்த 2020 லீஃப் கார் இந்த அப்டேட்டால் விவிட் ப்ளூ மற்றும் ஸ்டீல்த் க்ரே என்ற இரு கூடுதலான நிற தேர்வுகளை பெற்றுள்ளது. சுறாவின் துடுப்பு வடிவிலான ஆண்டெனாவை இந்த காரின் அனைத்து வேரியண்ட்டும் பெற்றுள்ளன. இந்த ஆண்டெனா அமைப்பு அப்டேட் மாடல்களில் மாற்றமின்றி கொடுக்கப்பட்டிருந்தாலும் அனைத்து நிற வேரியண்ட்களும் கருப்பு நிறத்தில் ரூஃப்-ஐ பெற்றுள்ளன.

பளிச்சிடும் நிறத்தில் ஜப்பானில் அறிமுகமாகவுள்ள 2020 நிஸான் லீஃப் எலக்ட்ரிக் கார்...

லீஃப் எலக்ட்ரிக் காரில் 110 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரையும், 40 கிலோவாட்ஸ்/நேரம் பேட்டரியையும் நிஸான் நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் எலக்ட்ரிக் மோட்டார் 147 பிஎச்பி பவரை முன்புற சக்கரங்களுக்கு அனுப்புகிறது. இந்த காரின் டாப் வேரியண்ட்களுக்கு 160 கி.வா எலக்ட்ரிக் மோட்டாரும், 62 கி.வா/நே பேட்டரியும் வழங்கப்படுகின்றன. இவற்றின் மோட்டாரானது அதிகப்பட்சமாக 214 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது.

பளிச்சிடும் நிறத்தில் ஜப்பானில் அறிமுகமாகவுள்ள 2020 நிஸான் லீஃப் எலக்ட்ரிக் கார்...

ஜப்பானில் நிஸான் லீஃப் எலக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 3,326,400 யென்-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.21.54 லட்சமாகும். இதன் ஸ்போர்ட்டியான ஆடெக் ட்ரிம் 4,094,200 யென்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.26.52 லட்சமாகும். உலகளாவில் சந்தையில் இந்த எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக செவ்ரோலெட் போல்ட், டெஸ்லா மாடல் 3, ஹூண்டாய் ஐயோனிக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் இ-கோல்ஃப் உள்ளிட்ட எலக்ட்ரிக் மாடல்கள் உள்ளன.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
2020 Nissan Leaf Updated With New Tech And Colour Options
Story first published: Saturday, December 21, 2019, 19:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X