TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் கார் இந்திய வருகை விபரம்!
நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் கார் இந்திய வருகை குறித்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
அடுத்த தசாப்தத்தில் எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கியத்துவம் வெகுவாக அதிகரிக்கும் என்பது தெரிந்த விஷயம். அதற்கு தக்கவாறு வாகன நிறுவனங்கள் பேட்டரியில் இயங்கும் வாகனங்களை இந்தியாவில் களமிறக்குவதற்கு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
தற்போது மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் மட்டுமே எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்கின்றன. அதிலும், மஹிந்திரா ரேவா மட்டுமே தனிநபர் பயன்பாட்டு சந்தையில் எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளன.
அந்த வகையில், எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னோடியாக விளங்கும் ஜப்பானிய கார் நிறுவனமான நிஸான் தனது லீஃப் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை மின்சார கார் மாடல் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக கார் அண்ட் பைக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
ஏற்கனவே நிஸான் லீஃப் மின்சார கார் இந்திய சாலைகளில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், வரும் பண்டிகை காலத்தையொட்டி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நிஸான் லீஃப் கார் உலக அளவில் அதிகம் விற்பனையாகும் மின்சார கார் மாடலாகவும் உள்ளது. அதிக ரேஞ்ச் வழங்குவதும், சரியான விலையில் கிடைப்பதும் இந்த காருக்கு வெளிநாட்டு வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற மாடலாக இருக்கிறது.
இந்த காரில் 40kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. சாதாரண சார்ஜர் மூலமாக பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 8 முதல் 16 மணிநேரம் வரை பிடிக்கும்.
குயிக் சார்ஜர் மூலமாக இதன் பேட்டரியை 40 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். இந்த காரில் இருக்கும் மின் மோட்டார் 148 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது.
ரூ.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய நிஸான் லீஃப் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டிலேயே இந்த கார் அறிமுகமாகிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில், இந்தியாவில் களமிறங்கிய முதல் வெளிநாட்டு மின்சார கார் மாடல் என்ற பெருமையை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.