போர்ஷே கயென் எஸ்யூவி இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!

புதிய போர்ஷே கயென் கூபே சொகுசு காரின் அறிமுக தேதி வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

போர்ஷே கயென் எஸ்யூவி இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!

போர்ஷே கயென் சொகுசு எஸ்யூவி கார் தனித்துவத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்தநிலையில், இந்த எஸ்யூவியின் கூபே மாடல் வரும் டிசம்பர் 13ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

போர்ஷே கயென் எஸ்யூவி இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!

போர்ஷே கயென் எஸ்யூவி போலவே, இந்த புதிய கயென் கூபே மாடலானது மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அதாவது, கயென் கூபே, கயென் டர்போ கூபே, கயென் இ-ஹைப்ரிட் கூபே ஆகிய வேரியண்ட்டுகளில் இந்தியாவில் கிடைக்கும்.

போர்ஷே கயென் எஸ்யூவி இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!

சாதாரண போர்ஷே கயென் எஸ்யூவியிலிருந்து இதனை கூபே ரக மாடலாக வடிவமைப்பில் மாற்றியுள்ளனர். பின்புறம் மிக தாழ்வாக சரிந்து செல்லும் கூரை அமைப்புடன் இந்த கார் தனித்துவமான வடிவமைப்பை பெற்றிருக்கிறது.

போர்ஷே கயென் எஸ்யூவி இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!

இந்த காரின் பின்புறத்தில் இரண்டு பேர் அமர்ந்து செல்வதற்கான இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காருக்கு சாதாரண கண்ணாடியுடன் பனோரமிக் சன்ரூஃப் வழங்கப்படும். ஆப்ஷனலாக கார்பன் ஃபைபரிலான கூரையும் தேர்வு செய்து கொள்ள முடியும்.

போர்ஷே கயென் எஸ்யூவி இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!

இந்த காருக்கு விசேஷமான ஆக்டிவ் ஏரோடைனமிக்ஸ் தொழில்நுட்பம் கொடுக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பமானது கார் 90 கிமீ வேகத்தை தாண்டும்போது, ஸ்பாய்லர் 135 மிமீ வரை விரிவடைந்து காரின் நிலைத்தன்மையை உறுதி செய்யும்.

போர்ஷே கயென் எஸ்யூவி இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!

சாதாரண கயென் எஸ்யூவியின் இன்டீரியர் அமைப்பு தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. ஓட்டுனரின் கவனம் சாலையில் இருந்து பிசகாத வகையிலான விசேஷ பொத்தான் கட்டுப்பாட்டு அமைப்பும் இதன் முக்கிய அம்சமாக உள்ளது. முழுமையான எச்டி திரையுடன் நடுவில் அனலாக் மானியுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு உள்ளது.

போர்ஷே கயென் எஸ்யூவி இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!

இந்த காரில் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 335 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

போர்ஷே கயென் எஸ்யூவி இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!

இந்த கார் நிலையிலிருந்து 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 5.9 வினாடிகள் எட்டுத்துக் கொள்ளும். இந்த கார் மணிக்கு 243 கிமீ வேகம் வரை செல்லும் திறன் படைத்தது. இந்த காரின் டர்போ கூபே மாடலில் 4.0 லிட்டர் வி8 எஞ்சின் இடம்பெற்றிருக்கிறது. இந்த எஞ்சின் 542 பிஎச்பி பவரையும், 770 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 0 - 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.9 வினாடிகள் எடுத்துக் கொள்ளும். மணிக்கு 286 கிமீ வேகம் வரை செல்லும் திறன் படைத்தது.

போர்ஷே கயென் எஸ்யூவி இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!

போர்ஷே கயென் எஸ்யூவி கார் ரூ.1.19 கோடி முதல் ரூ.1.92 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இதனைவிட அதிக விலையில் புதிய கயென் கூபே மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தனித்துவமான சொகுசு எஸ்யூவி காரை விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #போர்ஷே #porsche
English summary
Porschec has officially announced the launch date for the 2019 Porsche Cayenne Coupe in India on December 13, 2019
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X