அமெரிக்காவில் ஆன்லைன் கார் விற்பனையை துவங்கியது போர்ஷே

அமெரிக்காவில் ஆன்லைன் மூலமாக கார் விற்பனையை துவங்கி இருக்கிறது போர்ஷே நிறுவனம். கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

அமெரிக்காவில் ஆன்லைன் கார் விற்பனையை துவங்கியது போர்ஷே

ஜெர்மனியை சேர்ந்த போர்ஷே கார் நிறுவனம் தனித்துவமான சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரித்து வாடிக்கையாளர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இந்த நிறுவனம் தற்போது கார் விற்பனையில் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.

அமெரிக்காவில் ஆன்லைன் கார் விற்பனையை துவங்கியது போர்ஷே

அதன்படி, ஆன்லைன் மூலமாக கார் விற்பனை செய்யும் திட்டத்தை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் இருந்த இடத்திலிருந்தே கார் விற்பனைக்கான அனைத்து நடைமுறைகளையும் மேற்கொள்ள முடியும். தற்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி இருக்கிறது. ஆனால், இதிலிருந்து போர்ஷே ஆன்லைன் விற்பனை வேறுபடுகிறது.

அமெரிக்காவில் ஆன்லைன் கார் விற்பனையை துவங்கியது போர்ஷே

அதாவது, ஆன்லைனிலேயே அருகாமையிலுள்ள டீலரை தேர்வு செய்வதில் தொடங்கி, டீலரில் விற்பனையில் இருக்கும் கார் மாடல்களின் விபரங்கள், ஆன்லைன் மூலமாகவே ஆவணங்களை சமர்ப்பிக்கும் வசதி, கடன் வசதி மற்றும் இன்ஸ்யரன்ஸ் என அனைத்து நடைமுறைகளையும் மேற்கொள்ள முடியும்.

அமெரிக்காவில் ஆன்லைன் கார் விற்பனையை துவங்கியது போர்ஷே

முதலில் கார் மாடலை தேர்வு செய்த பின்னர், முகவரி சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணைங்களையும் ஆன்லைன் மூலமாகவே சமர்ப்பித்து கடன் உள்ளிட்டவற்றையும், பதிவு நடைமுறைகளையும் மேற்கொள்ள முடியும்.

அமெரிக்காவில் ஆன்லைன் கார் விற்பனையை துவங்கியது போர்ஷே

இதற்காக, ஷோரூமிற்கு அலைய வேண்டிய அவசியமில்லை. அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின்னர் ஷோருமூக்கு சென்று காரை டெலிவிரி எடுக்க மட்டும் சென்றால் போதுமானது. அமெரிக்காவில் மொத்தம் 191 போர்ஷே டீலர்கள் செயல்படுகின்றனர். இதில், 25 டீலர்களை இந்த முன்னோடி திட்டத்திற்காக நியமித்துள்ளது போர்ஷே கார் நிறுவனம்.

அமெரிக்காவில் ஆன்லைன் கார் விற்பனையை துவங்கியது போர்ஷே

இந்த புதிய நடைமுறை வாடிக்கையாளர்களுக்கு தலைவலி இல்லாத நேரத்தை மிச்சப்படுத்தும் விஷயமாக பார்க்கப்படுகிறது. காரின் சிறப்பம்சங்களையும் ஆன்லைன் மூலமாகவே எளிதாக தெரிந்து கொள்ளும் வசதியும், கூடுதல் ஆக்சஸெரீகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையுமே ஆன்லைன் மூலமாக தேர்வு செய்துகொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

அமெரிக்காவில் ஆன்லைன் கார் விற்பனையை துவங்கியது போர்ஷே

இந்த திட்டத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, படிப்படியாக அமெரிக்காவில் உள்ள மீதமுள்ள டீலர்களையும் இந்த ஆன்லைன் விற்பனை திட்டத்திற்குள் கொண்டு வருவதற்கு போர்ஷே திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆன்லைன் கார் விற்பனையை துவங்கியது போர்ஷே

ஏற்கனவே ஜெர்மனியில் இந்த ஆன்லைன் கார் விற்பனை திட்டத்தை போர்ஷே செயல்படுத்தி வருகிறது. இதற்கு சிறப்பான வரவேற்பு இருப்பதையடுத்து, அமெரிக்காவிலும் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, உலகின் பிற நாடுகளிலும் இந்த ஆன்லைன் கார் விற்பனை திட்டத்தை போர்ஷே அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #போர்ஷே #porsche
English summary
German car maker, Porsche has launched Online Car Sales in the US.
Story first published: Tuesday, October 29, 2019, 12:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X