போர்ஷே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்கள்!

போர்ஷே நிறுவனத்தின் முதல் முழுமையான எலெக்ட்ரிக் கார் மாடல் குறித்து பல முக்கியத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

போர்ஷே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்கள்!

ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் போர்ஷே நிறுவனம் சிறந்து விளங்குகிறது. போட்டியாளர்களிடமிருந்து வித்தியாசப்படும் டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின்கள் என தனக்கென தனி வாடிக்கையாளர் வட்டத்தையும், ரசிகர்களையும் உலக அளவில் வைத்திருக்கிறது.

போர்ஷே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்கள்!

இந்த நிலையில், பேட்டரியில் இயங்கும் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் தயாரிப்பில் போர்ஷே தீவிர கவனம் செலுத்தி வருகிறது. டைகன் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய மின்சார ஸ்போர்ட்ஸ் கார் மாடலை தற்போது 30 நாடுகளில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி ஆய்வுகள் செய்து வருகிறது.

போர்ஷே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்கள்!

மேலும், 35 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலைகளில் வைத்தும் இந்த சாலை சோதனைகள் நடத்தப்படுகின்றன. மேலும், கம்ப்யூட்டரிலேயை மாதிரி டைகன் கார்களை இயக்கி பல்வேறு சாலைகளில் செல்வது போல சோதித்து வருகிறதாம்.

போர்ஷே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்கள்!

மின்னணு முறையில் நடக்கும் இந்த சாலை சோதனை ஓட்டம் இதுவரை 60 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை தாண்டிவிட்டதாம். இதில், 20 லட்சம் கிமீ தூரத்திற்கு இடைநில்லாமல் செல்லும் வகையில் கம்ப்யூட்டரில் சோதனைகளும் ஒருபுறம் நடந்து வருகிறது.

போர்ஷே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்கள்!

கள சோதனைகள் மற்றும் கம்ப்யூட்டர் சோதனைகளில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், இந்த புதிய மின்சார ஸ்போர்ட்ஸ் காரை மேம்படுத்தி வருகிறது போர்ஷே. இதன்மூலமாக, இந்த கார் மிகச் சிறப்பான அம்சங்களை பெற்றிருப்பது நிச்சயம்.

போர்ஷே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்கள்!

வரும் செப்டம்பர் மாதம் இந்த புதிய மின்சார ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகம் செய்ய போர்ஷே திட்டமமிட்டுள்ளது. ஆனால், தற்போதே இந்த காருக்கு இதுவரை 20,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு ஆர்வம் தெரிவித்து காத்திருக்கின்றனராம்.

போர்ஷே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்கள்!

பேட்டரியில் இயங்கும் இந்த புதிய மின்சார கார் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் தொட்டும்விடும் வல்லமையை பெற்றிருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு வருகிறது.

இதில், மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில், இதன் லித்தியம் அயான் பேட்டரியை வெறும் 4 நிமிடங்களில் குறிப்பிட்ட சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியுமாம். இதன்மூலமாக, 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதுவும் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும் கூறப்படுகிறது. டெஸ்லாவுக்கு கடும் போட்டியை கொடுக்கும்.

Most Read Articles
மேலும்... #போர்ஷே #porsche
English summary
Porsche Taycan Electric Car Teased.
Story first published: Saturday, March 30, 2019, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X