வெறும் 4 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்... உலகை கலக்க வரும் புதிய எலெக்ட்ரிக் கார் இதுதான்

வெறும் 4 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 100 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யும் வகையிலான எலெக்ட்ரிக் கார் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த எலெக்ட்ரிக் காரின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வெறும் 4 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்... உலகை கலக்க வரும் புதிய எலெக்ட்ரிக் கார் இதுதான்

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் மேலோங்கி வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது அதன் மற்றொரு சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

வெறும் 4 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்... உலகை கலக்க வரும் புதிய எலெக்ட்ரிக் கார் இதுதான்

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் (Range) மிகவும் குறைவாக இருப்பது, அவற்றில் காணப்படும் பெருங்குறையாக பார்க்கப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால், ஒரு எலெக்ட்ரிக் வாகனம் எவ்வளவு தூரம் பயணம் செய்யும் என்பதே ரேஞ்ச் என குறிப்பிடப்படுகிறது.

வெறும் 4 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்... உலகை கலக்க வரும் புதிய எலெக்ட்ரிக் கார் இதுதான்

இதுதவிர முழுமையாக சார்ஜ் ஏற நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் மற்றொரு குறைபாடாக குறிப்பிடப்படுகிறது. இவ்விரு குறைபாடுகளையும் களையும் விதத்தில் வெளிவந்த டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு காணப்படுகிறது.

வெறும் 4 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்... உலகை கலக்க வரும் புதிய எலெக்ட்ரிக் கார் இதுதான்

டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் கார் (Tesla Model S) ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 540 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யும் திறன் வாய்ந்தது. பொதுவாக டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களை, சூப்பர் சார்ஜிங் ஸ்டேஷன்களில் சார்ஜ் செய்தால், 30 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜ் ஏறிவிடும்.

வெறும் 4 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்... உலகை கலக்க வரும் புதிய எலெக்ட்ரிக் கார் இதுதான்

எனவே இன்றைய சூழலில் டெஸ்லாதான் உலகின் அதிசக்தி வாய்ந்த எலெக்ட்ரிக் காராக கருதப்படுகிறது. ஆனால் டெஸ்லா நிறுவனத்தின் அனைத்து எலெக்ட்ரிக் கார்களையும் மிஞ்சும் வகையில் அதிசக்தி வாய்ந்த எலெக்ட்ரிக் கார் ஒன்றை போர்ஷே களமிறக்கவுள்ளது.

வெறும் 4 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்... உலகை கலக்க வரும் புதிய எலெக்ட்ரிக் கார் இதுதான்

இதற்கு டேகேன் என பெயரிடப்பட்டுள்ளது (Taycan). உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள போர்ஷே டேகேன் எலெக்ட்ரிக் கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ளது.

வெறும் 4 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்... உலகை கலக்க வரும் புதிய எலெக்ட்ரிக் கார் இதுதான்

ப்ளூம்பெர்க் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, போர்ஷே டேகேன் எலெக்ட்ரிக் காரை வெறும் 4 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே, 100 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும். 4 டோர் செடான் வகையை சேர்ந்த காரான இது, 800 வோல்ட் (800V) பேட்டரியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெறும் 4 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்... உலகை கலக்க வரும் புதிய எலெக்ட்ரிக் கார் இதுதான்

முன்பு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்கள், அதிகபட்ச வேகத்தை (Top Speed) எட்ட எவ்வளவு நேரம் ஆகும் என்பதைதான் முக்கியமாக பார்த்து வந்தார்கள். ஆனால் தற்போது ரேஞ்ச் எவ்வளவு? முழுமையாக சார்ஜ் ஏற எவ்வளவு நேரம் ஆகும்? என்பதைதான் அதிகம் பார்க்கின்றனர்.

வெறும் 4 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்... உலகை கலக்க வரும் புதிய எலெக்ட்ரிக் கார் இதுதான்

சார்ஜ் தீர்ந்து வழியில் நின்று விட்டால் என்ன செய்வது என்ற பதற்றமே இதற்கு முக்கிய காரணம். எனவே வாடிக்கையாளர்களின் பதற்றத்தை தணிக்கும் வகையில்தான் இவ்வளவு அதிசக்தி வாய்ந்த எலெக்ட்ரிக் காரான டேகேனை போர்ஷே களமிறக்கவுள்ளது.

வெறும் 4 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்... உலகை கலக்க வரும் புதிய எலெக்ட்ரிக் கார் இதுதான்

4 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யலாம் என்ற தகவல் வெளியானவுடன் போர்ஷே டேகேன் கார் மீதான எதிர்பார்ப்பு முன்பை விட தற்போது பல மடங்கு அதிகமாகி விட்டது. எனவே டேகேன் காரின் உற்பத்தியை இரு மடங்காக அதிகரிக்க போர்ஷே நிறுவனம் முடிவு செய்துள்ளது.

வெறும் 4 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்... உலகை கலக்க வரும் புதிய எலெக்ட்ரிக் கார் இதுதான்

அதாவது ஆண்டுக்கு 20 ஆயிரம் கார்கள் என்ற எண்ணிக்கையில் இருந்து ஆண்டுக்கு 40 ஆயிரம் கார்கள் என டேகேன் காரின் உற்பத்தி இரு மடங்காக அதிகரிக்கப்படவுள்ளது. தேவை அதிகரிக்கும் என்பதால்தான் இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக போர்ஷே நிறுவனம் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது.

வெறும் 4 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்... உலகை கலக்க வரும் புதிய எலெக்ட்ரிக் கார் இதுதான்

டேகேன் எலெக்ட்ரிக் காருக்காக, எலெக்ட்ரிஃபை அமெரிக்கா (Electrify America) என்ற நிறுவனத்துடன் போர்ஷே கைகோர்த்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. எலெக்ட்ரிஃபை அமெரிக்கா நிறுவனத்திற்கு அமெரிக்காவின் 42 மாகாணங்களில், 300 ஹைவே சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளன.

வெறும் 4 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்... உலகை கலக்க வரும் புதிய எலெக்ட்ரிக் கார் இதுதான்

இதுதவிர மெட்ரோ ஏரியாக்களில் 184 சார்ஜிங் ஸ்டேஷன்களை அந்நிறுவனம் வைத்துள்ளது. டேகேன் எலெக்ட்ரிக் கார் உரிமையாளர்கள், இங்கு மூன்று ஆண்டுகளுக்கு இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளலாம் என போர்ஷே நிறுவனம் அறிவித்துள்ளது.

வெறும் 4 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்... உலகை கலக்க வரும் புதிய எலெக்ட்ரிக் கார் இதுதான்

டேகேன் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை, இந்திய மதிப்பில் 55 லட்ச ரூபாய் முதல் தொடங்கும் என கூறப்படுகிறது. இதன் டாப் மாடல்களின் விலை 1 கோடி ரூபாயை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வ விலை அல்ல. அதிகாரப்பூர்வ விலை விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Most Read Articles
English summary
Porsche’s New Electric Car Taycan Offers A Faster Charge: 100 KM Charge In Just 4 Minutes. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X