இந்தியாவில் சிட்ரோவன் கார்களை அறிமுகப்படுத்துகிறது பிஎஸ்ஏ குழுமம்!

சிட்ரோவன் கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் சிட்ரோவன் கார்களை அறிமுகப்படுத்துகிறது பிஎஸ்ஏ குழுமம்!

ஐரோப்பாவில் பிஎஸ்ஏ குழுமம் கார் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், தனது அங்கமான சிட்ரோவன் பிராண்டு கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் சிட்ரோவன் கார்களை அறிமுகப்படுத்துகிறது பிஎஸ்ஏ குழுமம்!

பிஎஸ்ஏ குழுமத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை வெளியிட்டு கூட்டத்தில் அந்நிறுவனத்தின் நிர்வாக கமிட்டியின் தலைவர் கார்லோஸ் தவேர்ஸ் பேசினார். அப்போது,"2021ம் ஆண்டு சிட்ரோவன் கார்களை மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறி இருக்கிறார்.

இந்தியாவில் சிட்ரோவன் கார்களை அறிமுகப்படுத்துகிறது பிஎஸ்ஏ குழுமம்!

இந்தியாவில் சிட்ரோவன் கார்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் தீவிரமாக உள்ளோம். ஏற்கனவே இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. கார் எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன் உற்பத்தி ஆலையும் செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. கார் உற்பத்தி ஆலையும் உள்ளது.

இந்தியாவில் சிட்ரோவன் கார்களை அறிமுகப்படுத்துகிறது பிஎஸ்ஏ குழுமம்!

சிட்ரோவன் கார் பிராண்டிற்கு வலு சேர்க்கும் விதத்தில் புதிய விற்பனை நிலையங்கள் மற்றும் சர்வீஸ் மையங்களை நிறுவுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

இந்தியாவில் சிட்ரோவன் கார்களை அறிமுகப்படுத்துகிறது பிஎஸ்ஏ குழுமம்!

உலகின் மிக வேகமாக வளரும் கார் சந்தையான இந்தியாவில் மீண்டும் சிட்ரோவன் கார் பிராண்டை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம். ஐரோப்பாவில் சிறப்பான வரவேற்பை பெற்ற சிட்ரோவன் கார்களின் தனித்துவமான வடிவமைப்பு, சொகுசு வசதிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை இந்திய வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும்," என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சிட்ரோவன் கார்களை அறிமுகப்படுத்துகிறது பிஎஸ்ஏ குழுமம்!

கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவில் கார்களை களமிறக்க இருப்பதாக பிஎஸ்ஏ குழுமம் அறிவித்தது. அத்துடன், இந்தியாவின் சிகே பிர்லா குழுமத்துடன் கூட்டணி அமைத்து வர்த்தகத்தை துவங்க இருப்பதாகவும் தெரிவித்தது. இதனிடையே, அண்மையில் ஓசூரில் கார் எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன் உற்பத்தி ஆலையை திறந்து தனது வர்த்தகத்தை துவங்குவதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்தியாவில் சிட்ரோவன் கார்களை அறிமுகப்படுத்துகிறது பிஎஸ்ஏ குழுமம்!

இந்திய கார் சந்தை பிஎஸ்ஏ குழுமத்திற்கு புதிது அல்ல. கடந்த இரண்டு தசாப்தத்திற்கு முன்பாக பத்மினி குழுமத்துடன் இணைந்து பிரிமீயர் பிராண்டில் கார் விற்பனையில் ஈடுபட்டு வந்தது. விற்பனை மோசமானதால் 2001ம் ஆண்டு இந்திய சந்தையிலிருந்து விலகியது.

இந்தியாவில் சிட்ரோவன் கார்களை அறிமுகப்படுத்துகிறது பிஎஸ்ஏ குழுமம்!

2009ம் ஆண்டு இந்தியாவில் மீண்டும் களமிறங்க முயன்றது. ஆனால், உலக பொருளாதார சரிவின் எதிரொலியால் தனது திட்டத்தை கைவிட்டது. 2011ம் ஆண்டு மீண்டும் இந்திய மண்ணில் தடம் பதிக்க முனைந்தது. செடான் கார் மாடலுடன் களமிறங்குவதற்கு எத்தனித்தது. அந்த திட்டமும் தோல்வியில் முடிந்தது. ஒருவழியாக 2017ம் ஆண்டு இந்தியாவில் களமிறங்குவதை உறுதி செய்தது.

இந்தியாவில் சிட்ரோவன் கார்களை அறிமுகப்படுத்துகிறது பிஎஸ்ஏ குழுமம்!

பிஎஸ்ஏ குழுமத்தின் கீழ் சிட்ரோவன், பீஜோ மற்றும் டிஎஸ் ஆகிய மூன்று கார் பிராண்டுகள் செயல்படுகின்றன. இதில், பீஜோ கார்கள்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், சிட்ரோவன் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக பிஎஸ்ஏ குழுமம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #சிட்ரோவன்
English summary
PSA Group to Launch Citroen Cars In India.
Story first published: Friday, March 1, 2019, 13:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X